என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணி ஓசை"

    • மனித மூளையானது, வலது, இடது என இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும்.
    • மணி ஓசையை கேட்கும் போதே, நம்மை அறியாமல் நம் இரு கரங்கள் இறைவனை தொழுகின்றன.

    கோவிலுக்கு செல்லும் நாம் அனைவரும் அங்கு ஒலிக்கும் மணி ஓசையை கேட்டிருப்போம். நம் வேண்டுதலை இறைவன் காதுகொடுத்து கேட்பார் என்பதற்காகவே கோவிலில் மணி அடித்து வழிபடுவதாக நாம் நினைக்கிறோம். ஆனால் அது மட்டும் காரணமல்ல. தெய்வீக உணர்வை ஏற்படுத்தும் அந்த மணி ஓசையின் பின்னால் ஒரு அறிவியலும் அடங்கியுள்ளது.

    கோவிலில், இறைவனுக்கு தீபாராதனை காட்டும்போதும், அபிஷேகம் செய்யும்போதும் மணி அடிப்பார்கள். அப்போது மணியில் இருந்து வெளிப்படும் ஓசையானது, நம்முடைய எதிர்மறை சக்திகளை விரட்டி, நேர்மறை சக்தியை அதிகரிக்க செய்கிறது. கோவில் மணி, ஒரே உலோகத்தால் ஆனதல்ல. குரோமியம், நிக்கல், துத்தநாகம், மாங்கனீசு போன்ற பல வகையான உலோகங்களின் கலவையால் உருவானது. இதனால்தான் மணியில் இருந்து வெளிப்படும் ஓசையானது தனித்துவமாக உள்ளது.

    மனித மூளையானது, வலது, இடது என இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும். அந்த இரு பிரிவுகளுமே, இரு வேறு செயல்திறனை கொண்டவை. கோவில் மணியில் இருந்து வரும் ஓசை, இரு பக்க மூளைகளையும் சமநிலைப்படுத்தி, மனதுக்கு அமைதியை ஏற்படுத்துகிறது. மூளையின் செயல்திறனையும் மேலோங்கச் செய்கிறது.

    அதுமட்டுமின்றி, பூஜையின்போது மனம் அலைபாயாமல் இறைவன்பால் ஒன்றி இருக்க வேண்டும் என்பதற்காகவும் மணி ஓசையை எழுப்புகிறார்கள். கோவில் வாசலில் இருக்கும் மணியை ஒலிப்பதற்கான கோவிலுக்குள் காரணம், நுழையும்போது ஆழ்மனதை விழிப்புடன் வைத்திருக்க வேண்டும் என்பதாகும்.

    மணி ஓசையை கேட்கும் போதே, நம்மை அறியாமல் நம் இரு கரங்கள் இறைவனை தொழுகின்றன. நைவேத்தியம் செய்யும்போது மணி ஓசையை எழுப்புவது அவசியம் என்கிறது, சாஸ்திரம். ஏனென்றால், மணி ஓசையை கேட்டவுடன் இறைவன் ஓடோடி வந்து நம் நைவேத்தியத்தை ஏற்றுக்கொள்கிறார் என்பது நம்பிக்கை. கோவிலில் இருந்து வரும் நறுமணமும், மணி ஓசையும், தீப ஒளியும் நம்மை ஆன்மிக சிந்தனையுடன், இறைவன்பால் அழைத்துச் செல்கின்றன.

    ஓசூர் அருகே மிலிதிக்கி என்ற மலைக் கிராமத்தில் 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அதிசய மணி ஓசை எழுப்பும் இசைப்பாறை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
    தேன்கனிக்கோட்டை:

    ஓசூர் அருகே மிலிதிக்கி என்ற மலைக் கிராமத்தில் 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அதிசய மணி ஓசை எழுப்பும் இசைப்பாறை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    இந்த இசைப்பாறையில் சிக்கம்மா தொட்டம்மா ஆகிய தெய்வங்கள் பல்லாங்குழி விளையாடினர். எனவே இது தெய்வப்பாறை எனவும் கிராம மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். முற்றிலும் மற்ற பாறைகளிலிருந்து மாறுபட்ட கோணத்தில் சிறு சிறு பல்லாங்குழிகள் வடிவத்துடன் இந்த பாறை அமைந்துள்ளது.

    இந்த பாறையில் கல்லால் அடித்தால் மணி ஓசை எழும், இந்த இசைப்பாறை சுமார் 2500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என கிராமமக்களும், வரலாற்று ஆர்வலர்களும் கூறுகின்றனர். இந்த பாறை 4 அடி அகலமும், 3 அடி உயரமும் உடையதாக ஒரு பெரிய பாறைகற்கள் மீது வைக்கப்பட்டுள்ளது. சிக்கம்மா, தொட்டம்மா தெய்வங்கள் இந்த இசைப்பாறையில் அமர்ந்து பல்லாங்குழி விளையாடியதாக கூறப்படுகிறது.

    மேலும் மேய்ச்சலுக்கு வனப்பகுதிக்கு வரும் ஆடு, மாடுகளை வனவிலங்குகளிடமிருந்து காக்க இசைப் பாறையை தட்டி இசை எழுப்பி வருகிறார்கள்.

    மணி ஓசையை கொடுக்கும் பாறை மிலிதிக்கி வனப்பகுதிக்குள் உள்ளது என்ற செய்தி சுற்றுப்புற கிராமங்களில் பரவியதை தொடர்ந்து தினந்தோறும் 100-க்கணக்கான கிராமமக்கள் பல்வேறு கிராமங்களிலிருந்து இதனை காண இங்கு வந்து செல்கின்றனர்.
    ×