என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dowry cruelty"

    • அவர் குற்றவாளி என நிரூபணமாகி பஞ்சாப் விசாரணை நீதிமன்றம் அவருக்கு பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
    • விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.

    தனது மனைவியைக் வரதட்சணை கொடுமை செய்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தேசிய பாதுகாப்புப் படையின் பிளாக் கேட் கமாண்டோ வீரர் ஒருவர், உச்ச நீதிமன்றத்தில் ஒரு விசித்திரமான வாதத்தை முன்வைத்துள்ளார்.

    பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் சமீபத்திய ஆபரேஷன் சிந்தூருக்காக அவர் பணியாற்றியதாகவும், எனவே கொலை வழக்கிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.

    வரதட்சணைக்காக தனது மனைவியைக் கொன்ற வழக்கில் அவர் குற்றவாளி என நிரூபணமாகி பஞ்சாப் விசாரணை நீதிமன்றம் அவருக்கு பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

    இந்தத் தீர்ப்பை எதிர்த்து அவர் பஞ்சாப் உயர் நீதிமன்றத்தை அணுகினார். விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதன் மூலம், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து விலக்கு கோரி மனுத் தாக்கல் செய்தார்.

    அந்த மனுவில், அவர் ஒரு பிளாக் கேட் கமாண்டோ என்றும், ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்றதாகவும் கூறினார். இந்த மனுவை விசாரித்த அமர்வு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.

    ஆபரேஷன் சிந்தூரில் பணியாற்றியதால் மட்டுமே, அவர் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என்றும், இந்த வழக்கில் அந்த விலக்கு அளிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் அவர் உடனடியாக சரணடைய உத்தரவிட்டது. இருப்பினும், மனுதாரர் சரணடைய சிறிது நேரம் கேட்டதால், அவருக்கு இரண்டு வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.

    பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரே வரதட்சணை கேட்டு மனைவியின் நெற்றி பொட்டில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் குருகுலபேட்டை பகுதியை சேர்ந்தவர் சுகுமார் (வயது 28). இவர் முதிவேடு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி ஜாப்பர்ஸ் விஷ்ணு பிரியா 24). இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் நடந்து ஒரு ஆண்டு வரை தம்பதியினர் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தினர்.

    இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் சுகுமார் அவரது தந்தை தேவராஜ் தாயார் குருவ ராணி ஆகியோர் வரதட்சணை கேட்டு விஷ்ணுபிரியாவை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மீண்டும் ரூ.10 லட்சம் வரதட்சணைக் கேட்டு விஷ்ணு பிரியாவை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.

    அப்போது தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து விஷ்ணுபிரியா நெற்றிப்பொட்டில் வைத்து வரதட்சனை வாங்கி வரவில்லை என்றால் சுட்டு கொன்று விடுவதாக சுகுமார் மிரட்டி உள்ளார்.

    இதையடுத்து விஷ்ணுபிரியா மதன பள்ளியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்தார். அங்குள்ள போலீசில் இதுகுறித்து புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முரளிகிருஷ்ணாசப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஆகியோர் சுகுமார் அவரது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.
    ×