என் மலர்
நீங்கள் தேடியது "பேருந்து சேவை"
- அன்புக்கரசு தனது ஊரான ஆத்திகுளத்தில் இருந்து 2 கி.மீ நடந்து பள்ளிக்கு வருவதாகத் தெரிவித்து, தங்கள் ஊருக்குப் பேருந்து சேவை வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.
- பேருந்து சேவையின் மூலம் ஆத்திகுளம் கிராமத்திலிருந்து வரும் அனைத்துப் பள்ளி, கல்லூரி மாணவர்களும் பயனடைவார்கள்.
தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காரியாபட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த பி.புதுப்பட்டி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளி நிகழ்ச்சிக்கு சில தினங்களுக்கு முன்பு சென்றிருந்தேன். அப்போது அப்பள்ளி மாணவர் அன்புக்கரசு தனது ஊரான ஆத்திகுளத்தில் இருந்து 2 கி.மீ நடந்து பள்ளிக்கு வருவதாகத் தெரிவித்து, தங்கள் ஊருக்குப் பேருந்து சேவை வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.
அம்மாணவரின் கோரிக்கையை ஏற்று, காரியாபட்டியில் இருந்து ஆத்திகுளம் வழியாக திருச்சுழி வரை (காலை 8.10, மாலை 4.15) செல்லும் புதிய வழித்தட பேருந்து சேவையைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தேன்.
இப்பேருந்து சேவையின் மூலம் ஆத்திகுளம் கிராமத்திலிருந்து வரும் அனைத்துப் பள்ளி, கல்லூரி மாணவர்களும் பயனடைவார்கள். இந்த பிஞ்சுக் குழந்தைகளின் கனவு மெய்ப்பட திராவிட மாடல் அரசு எத்தனை உதவிகளையும் செய்யத் தாமதிக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 10 பேருந்துகளுடன் தொடங்கி பின்பு எண்ணிக்கையை 60-ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது
- ஊபர் செயலி மூலமாக பேருந்து குறித்த தகவல்களை பயணிகள் அறிந்து கொள்ள முடியும்
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பன்னாட்டு நிறுவனம் ஊபர் டெக்னாலஜிஸ். பொதுமக்களுக்கு எளிமையான முறையில், குறைந்த கட்டணத்தில் வாகன போக்குவரத்து, உணவு வினியோகம், சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் சேவைகளை வழங்குவதில் உலகெங்கும் பல நாடுகளில் ஊபர், பிரபலமாக விளங்குகிறது.
இந்நிலையில் ஊபர், மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில், அலுவலகம் செல்லும் மக்களுக்காக பேருந்து சேவையை தொடங்க போவதாக அறிவித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பயண தடங்களின் வழியாக, நகரில் அதிக மக்கள் வசிக்கும் இடங்களை, மாநிலத்தின் பிற மாவட்டங்களுடன் இணைக்க உள்ளது.
தொடக்க நிலையில் 10 பேருந்துகளுடன் இயங்க உள்ள இந்த சேவையில், அடுத்த வருட மார்ச் மாதம் 60 ஏர்கண்டிஷன் வசதி உடைய பேருந்துகள் வரை எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இந்த பேருந்துகளில் 19லிருந்து 50 வரை பயணிகள் பயணம் செய்யலாம்.
மேற்கு வங்கத்தில் சுமார் ரூ.84 கோடி ($10 மில்லியன்) முதலீடு செய்ய போவதாகவும், இதன் மூலம் அங்கு அடுத்த 5 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்றும் ஊபர் அறிவித்துள்ளது.
சில நாட்களுக்கு முன், மேற்கு வங்க அரசு, அம்மாநிலத்தில் தொழில்துறையில் முதலீடு செய்வதற்கு பல அயல்நாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது. அவர்கள் பங்கேற்ற மேற்கு வங்க உலக வர்த்தக சந்திப்பு (Bengal Global Business Summit) எனும் கூட்டம், மேற்கு வங்க அரசால் நடத்தப்பட்டது. அந்த சந்திப்பில் மேற்கு வங்க போக்குவரத்து துறையுடன், ஊபர் நிறுவனம், பேருந்து சேவைக்காக ஒப்பந்தம் புரிந்தது.
ஊபர் நிறுவனத்தின் பேருந்து சேவையில் ஊபர் செயலி மூலம், பயணிகள் ஒரு வாரம் முன்னதாகவே இருக்கைகளை பதிவு செய்து கொள்ளவும், பேருந்து செல்லும் வழித்தடத்தை மொபைல் மூலம் அறிந்து கொள்ளவும், சென்று சேருமிடத்திற்கான பயண நேரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளவும் முடியும்.
பயணிகளுக்கு டிஜிட்டல் பண பரிமாற்றம், 24 மணி நேர பாதுகாப்பு, வசதியான இருக்கைகள் உள்ளிட்ட பல முக்கிய சேவைகள் இதில் வழங்கப்பட உள்ளது.
அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் பெருகி வரும் மக்களின் பயண தேவைகளை எதிர்கொள்ள இது போன்ற சேவைகள் வருவதை வரவேற்று பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கின்றனர்.
- முதல் பேருந்து காலை 7.15 மணிக்கு குலுவில் இருந்து புறப்பட்டு மதியம் கீலாங்கை சென்றடைகிறது.
- வெற்றிகரமான சோதனை ஓட்டங்களுக்குப் பிறகு சேவையை மீண்டும் தொடங்க முடிவு.
இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில், குலு- மணாலி மற்றும் கீலாங் இடையே இமாச்சலப் பிரதேசம் சாலைவழி போக்குவரத்து கழகம் (HRTC) கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பேருந்துகள் சேவையை தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குலு மற்றும் லாஹவுல் மற்றும் ஸ்பிட்டி மாவட்டங்களில் பனிப்பொழிவைத் தொடர்ந்து இமாச்சல் சாலைவழி போக்குவரத்துக் கழகம் சேவைளை நிறுத்தியது.
இந்நிலையில், இன்று முதல் சேவை மீண்டும் தொடங்கியது. முதல் பேருந்து காலை 7.15 மணிக்கு குலுவில் இருந்து புறப்பட்டு மதியம் கீலாங்கை சென்றடைகிறது.
முன்னதாக, பனிப்பொழிவுக்கு பிறகு மே மாதத்தில் தான் சேவை மீண்டும் தொடங்கும். கடந்த, 2019-ல் ரோஹ்தாங்கில் அடல் சுரங்கப்பாதை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து மார்ச் மாதத்தில் பனிப்பொழிவு பகுதிக்கான பேருந்து சேவைகள் மீட்டமைக்கப்படுவது இதுவே முதல் முறை என்று எச்ஆர்டிசி நிர்வாக இயக்குனர் ரோஹன் சந்த் தாக்கூர் தெரிவித்தார்.
வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வெற்றிகரமான சோதனை ஓட்டங்களுக்குப் பிறகு சேவையை மீண்டும் தொடங்க முடிவு எடுக்கப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாராபுரம்:
தாராபுரம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளருக்கு விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் ஈசன் கொடுத்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-
தாராபுரத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு பஸ் மூலம் தினசரி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சென்று வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் மாசாணி அம்மன் கோவில், பொள்ளாச்சி மாரியம்மன் கோவில், பத்திரகாளியம்மன் கோவில், புதுப்பாளையம் கருப்பராயன் கோவில் ஆகிய கோவில்களுக்கு சென்று வருகின்றனர்.
ஆனால் தாராபுரத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு இரவு நேரம் பஸ் இயக்கப்படுவதில்லை. எனவே இரவு நேரம் பொள்ளாச்சி, உடுமலைக்கு பஸ் இயக்கினால் பொதுமக்களுக்கு வசதியாக இருக்கும். எனவே தாராபுரத்தில் இருந்து பொள்ளாச்சி மற்றும் உடுமலைக்கு இரவு நேரம் பஸ் இயக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.






