என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shanmuganathan"

    • தி.மு.க அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பேரூராட்சிகள், நகராட்சி, மாநகராட்சி மற்றும் ஒன்றியங்களில் 3 நாட்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
    • தி.மு.க. ஆட்சி காலத்தில் சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டணம் மற்றும் பால் விலை உள்ளிட்ட அனைத்து விலைவாசிகளும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    தூத்துக்குடி:

    தி.மு.க அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பேரூராட்சிகள், நகராட்சி, மாநகராட்சி மற்றும் ஒன்றியங்களில் 3 நாட்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். இது தொடர்பாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடந்தது.

    கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    ஆர்ப்பாட்டம்

    அப்போது, தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) 12 பேரூராட்சியிலும், 13-ந் தேதி தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் காயல்பட்டிணம், திருச்செந்தூர் நகராட்சியிலும், 14-ந் தேதி 7 ஒன்றியங்கள் ஆக மொத்தம் 22 இடங்களில் தி.மு.க அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    தி.மு.க. ஆட்சி காலத்தில் சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டணம் மற்றும் பால் விலை உள்ளிட்ட அனைத்து விலைவாசிகளும் உயர்த்தப்பட்டு உள்ளது. இதை மக்களிடம் எடுத்து கூற வேண்டும். வீடு, வீடாக துண்டு பிரசுரங்கள் வழங்க வேண்டும்.

    அதிக அளவில் தொண்டர்கள் கூட்டத்தை திரட்டி மக்களிடம் நம் கோரிக்கைகள் சென்றடைய வேண்டும். நம் கட்சி வலு வான கட்சி என்பதை மக்க ளிடம் கொண்டு சென்று வலுப்படுத்த வேண்டும்.

    அ.தி.மு.க தலைமையில் தான் கூட்டணி என்ற நிலைக்கு வர வேண்டும். தேர்தலை பொறுத்தவரை சிலவிஷயங்களை சகித்து தான் செல்ல வேண்டும். அ.தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும். அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்க்கும் பலமான எதிர்கட்சி அ.தி.மு.க தான் என்பதை மக்களிடம் எடுத்துக்கூறி, ஆர்ப்பாட்டத்தை வெற்றி கரமாக நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கலந்து கொண்டவர்கள்

    கூட்டத்தில் அ.தி.மு.க. மாநில அமைப்புச் செயலாளர் சின்னதுரை, மாநில அமைப்புச் சாரா ஓட்டுநரணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகர், முன்னாள் மாவட்ட செயலாளர் ஹென்றி, ஒன்றியச் செயலாளர்கள் ராமச்சந்திரன், காசிராஜன், விஜயகுமார், ராஜ்நாரயணன், சவுந்தரபாண்டி, மாவட்ட துணைச் செயலாளர் சந்தனம், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, சார்பு அணி செயலாளர்கள் டேக் ராஜா, பில்லா விக்னேஷ், ஜெ.தனராஜ், பிரபாகர், பகுதி செயலாளர்கள் முருகன் ஜெய்கணேஷ் வட்ட செயலாளர்கள் முருகன், மனுவேல் ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கலைஞர் எழுதுகோல் விருதுக்கான தேர்வுக் குழுவின் பரிந்துரையின்பேரில் 2021-ம் ஆண்டிற்கான விருதாளராக மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதனுக்கு (87) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    2021- 22ம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறை மானியக் கோரிக்கையில் இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றிவரும் ஒரு சிறந்த இதழியலாளருக்கு ஆண்டுதோறும் கலைஞர் எழுதுகோல் விருது மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்விருது ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதி அன்று வழங்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில், கலைஞர் எழுதுகோல் விருதுக்கான தேர்வுக் குழுவின் பரிந்துரையின்பேரில் 2021-ம் ஆண்டிற்கான விருதாளராக மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதனுக்கு (87) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ‘கலைஞர் எழுதுகோல் விருது’க்கான தேர்வுக் குழுவின் பரிந்துரையின்பேரில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதாளராக மூத்த பத்திரிகையாளர் திரு. ஐ.சண்முகநாதன் அவர்கள் (வயது 87) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பிறந்த ஐ.சண்முகநாதன் அவர்கள்  1953-ஆம் ஆண்டு ‘தினத்தந்தி’யில் உதவி ஆசிரியராகப் பொறுப்பேற்று இதுநாள்வரை ஏறத்தாழ 70 ஆண்டுகளாகப் பத்திரிகைத் துறையில் பணிபுரிந்துவருகிறார்.

    பெரும் மக்களுக்கான இதழியலில் இவ்வளவு நெடிய பணி அனுபவம் என்பது எளிதில் நிகழ்த்தற்கரிய சாதனை ஆகும். பத்திரிகையின் ஆசிரியர் பிரிவில் செய்தி ஆசிரியராக நீண்டகாலம் பணியாற்றி, சமகால பெருவாரியான மக்கள் இதழியலில் மொழிப் பயன்பாட்டைத் தீர்மானித்தவர்களில் ஒருவராகச் செயல்பட்டிருப்பவர் என்பதோடு, சமகால வரலாற்றைத் தொகுத்து அளிக்கும் பணிகளிலும் சமூகநீதி விழுமியப் பார்வையோடு அப்பணியை மேற்கொண்டிருக்கிறார் திரு.சண்முகநாதன்.

    அவருடைய முக்கியமான பங்களிப்புகளில் ஒன்று, தினத்தந்தி குழுமத்தினால் வெளியிடப்பட்ட ‘வரலாற்றுச் சுவடுகள்’ நூல் தொகுப்புப் பணி ஆகும். பல்லாயிரம் பிரதிகள் விற்ற இந்நூலானது, சமகால வரலாற்றைப் பார்க்க உதவுகிறது.

    முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, 2021-ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதினை மூத்த பத்திரிகையாளர் திரு. ஐ.சண்முகநாதன் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் நாளை (3.6.2022) வழங்கி சிறப்பிக்கவுள்ளார்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதையும் படியுங்கள்.. வசனகர்த்தா ஆரூர்தாசுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது- அரசு அறிவிப்பு
    ×