search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாவட்ட செயலாளர் சண்முகநாதன் தலைமையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை
    X

    ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் பேசியபோது எடுத்தபடம்.

    மாவட்ட செயலாளர் சண்முகநாதன் தலைமையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை

    • தி.மு.க அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பேரூராட்சிகள், நகராட்சி, மாநகராட்சி மற்றும் ஒன்றியங்களில் 3 நாட்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
    • தி.மு.க. ஆட்சி காலத்தில் சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டணம் மற்றும் பால் விலை உள்ளிட்ட அனைத்து விலைவாசிகளும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    தூத்துக்குடி:

    தி.மு.க அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பேரூராட்சிகள், நகராட்சி, மாநகராட்சி மற்றும் ஒன்றியங்களில் 3 நாட்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். இது தொடர்பாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடந்தது.

    கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    ஆர்ப்பாட்டம்

    அப்போது, தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) 12 பேரூராட்சியிலும், 13-ந் தேதி தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் காயல்பட்டிணம், திருச்செந்தூர் நகராட்சியிலும், 14-ந் தேதி 7 ஒன்றியங்கள் ஆக மொத்தம் 22 இடங்களில் தி.மு.க அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    தி.மு.க. ஆட்சி காலத்தில் சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டணம் மற்றும் பால் விலை உள்ளிட்ட அனைத்து விலைவாசிகளும் உயர்த்தப்பட்டு உள்ளது. இதை மக்களிடம் எடுத்து கூற வேண்டும். வீடு, வீடாக துண்டு பிரசுரங்கள் வழங்க வேண்டும்.

    அதிக அளவில் தொண்டர்கள் கூட்டத்தை திரட்டி மக்களிடம் நம் கோரிக்கைகள் சென்றடைய வேண்டும். நம் கட்சி வலு வான கட்சி என்பதை மக்க ளிடம் கொண்டு சென்று வலுப்படுத்த வேண்டும்.

    அ.தி.மு.க தலைமையில் தான் கூட்டணி என்ற நிலைக்கு வர வேண்டும். தேர்தலை பொறுத்தவரை சிலவிஷயங்களை சகித்து தான் செல்ல வேண்டும். அ.தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும். அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்க்கும் பலமான எதிர்கட்சி அ.தி.மு.க தான் என்பதை மக்களிடம் எடுத்துக்கூறி, ஆர்ப்பாட்டத்தை வெற்றி கரமாக நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கலந்து கொண்டவர்கள்

    கூட்டத்தில் அ.தி.மு.க. மாநில அமைப்புச் செயலாளர் சின்னதுரை, மாநில அமைப்புச் சாரா ஓட்டுநரணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகர், முன்னாள் மாவட்ட செயலாளர் ஹென்றி, ஒன்றியச் செயலாளர்கள் ராமச்சந்திரன், காசிராஜன், விஜயகுமார், ராஜ்நாரயணன், சவுந்தரபாண்டி, மாவட்ட துணைச் செயலாளர் சந்தனம், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, சார்பு அணி செயலாளர்கள் டேக் ராஜா, பில்லா விக்னேஷ், ஜெ.தனராஜ், பிரபாகர், பகுதி செயலாளர்கள் முருகன் ஜெய்கணேஷ் வட்ட செயலாளர்கள் முருகன், மனுவேல் ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×