என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "state legislative assembly"

    • 33% இடஒதுக்கீடு மசோதா முழுமை பெறவில்லை என்று ராகுல் காந்தி கருத்து.
    • நாட்டின் பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மசோதா ஆகும்.

    பாராளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது. இந்த மசோதா மீதான வாக்கெடுப்பில் 454 வாக்குகள் ஆதரவாகவும், 2 வாக்குகள் எதிராகவும் பதிவாகி உள்ளன.

    பாராளுமன்ற சிறப்பு கூட்டம் கடந்த திங்கள் கிழமை (செப்டம்பர் 18) துவங்கி வெள்ளி கிழமை (செப்டம்பர் 22) வரை என மொத்தம் ஐந்து நாட்கள் நடைபெற இருக்கிறது. சிறப்பு கூட்டத்தின் இரண்டாவது நாளான நேற்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மசோதா மீதான விவாதம் நேற்றும், இன்றும் நடைபெற்று வந்தது. இன்று முழுக்க இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்ற நிலையில், தற்போது மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    • மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் நேரலை ஒளிபரப்பை நிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
    • ஜனநாயக முறையில் நடைபெறும் விவாதங்களை, வெளிப்படையாகத் தமிழக மக்கள் தெரிந்துகொள்வது அவசியம்.

    தமிழக சட்டமன்றத்தின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது. ஆளுநர் ஆர்.என். ரவி சுமார் 45 நிமிடங்கள் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மூன்றே நிமிடங்களில் அவர் அவையில் இருந்து வெளியேறினார்.

    இந்நிலையில், சட்டமன்றத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் நேரடி ஒளிபரப்பபை நிறுத்தப்பட்டது.

    இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியுள்ள நிலையில், அதன் நிகழ்வுகளை உடனுக்குடன் மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் நேரலை ஒளிபரப்பை நிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    சட்டமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஜனநாயக முறையில் நடைபெறும் விவாதங்களை, வெளிப்படையாகத் தமிழக மக்கள் தெரிந்துகொள்வது அவசியமாகும்.

    எனவே சட்டமன்ற நிகழ்ச்சிகள் முழுவதையுமே எந்தவித இடையூறும் இல்லாமல் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை கருத்துக்கு அதிமுகவினர் சட்டப்பேரவையில் எதிர்ப்பு.
    • ஞானசேகரனிடம் செல்போனில் பேசியது யார் என்று மத்திய அரசு தான் வெளியிட வேண்டும்.

    தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கூட்டத்தில், அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்று வருகிறது.

    அப்போது, "தமிழ்நாட்டில் மனுநீதிச் சோழன் ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரச்சனையை தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்துக் கொண்டேன் என சொல்லக்கூடியவர் அல்ல முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

    இவரது கருத்துக்கு அதிமுகவினர் சட்டப்பேரவையில் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

    பிறகு, செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது:-

    ஞானசேகரனிடம் செல்போனில் பேசியது யார் என்று மத்திய அரசு தான் வெளியிட வேண்டும்.

    செல்போன் அழைப்புகள் தொடர்பான விவரங்கள் மத்திய அரசிடம் உள்ளது. அவர்கள் தான் விவரங்களை வெளியிட வேண்டும்.

    10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், அதிமுக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    ஒரு விரல் மற்றவரை காட்டினால் மற்ற விரல்கள் உங்களை காட்டும்.

    அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை வாக்கு வங்கி அரசியலாக்கி விட்டார்கள். பாலியல் வன்கொடுமை விஷயத்தை அரசியலாக்குவது அதைவிட கொடுமை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×