என் மலர்
நீங்கள் தேடியது "SS Ramasamy Padayachi"
- இராமசாமி படையாட்சியாரின் 108-ஆம் பிறந்தநாளான இன்று அவரை வணங்கி மகிழ்கிறேன்.
- பாட்டாளி மக்களின் சமூகநீதிக்காக அவர் மேற்கொண்ட முன்னெடுப்புகள் குறிப்பிடத்தக்கவை.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
இந்திய விடுதலைக்காகவும், சமூக விடுதலைக்காகவும் இளம்வயதில் இருந்தே போராடிய பெருமைக்குரிய பெரியவர் எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியாரின் 108-ஆம் பிறந்தநாளான இன்று அவரை வணங்கி மகிழ்கிறேன்.
பாட்டாளி மக்களின் சமூகநீதிக்காக அவர் மேற்கொண்ட முன்னெடுப்புகள் குறிப்பிடத்தக்கவை. எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியாரின் பணிகளைப் போற்றும் இந்த நாளில், நமது சமூகநீதிக்கான போராட்டங்களை இன்னும் தீவிரமாக வெற்றிக் கொடி நாட்ட உறுதியேற்போம்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ராமசாமி படையாட்சியாரின் 108-வது பிறந்த தினத்தையொட்டி தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
- கிண்டியில் உள்ள ராமசாமி படையாட்சியாரின் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
விடுதலை போராட்ட வீரரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ். ராமசாமி படையாச்சியாரின் 108-வது பிறந்த தினத்தையொட்டி, தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
சென்னை கிண்டியில் உள்ள எஸ்.எஸ். ராமசாமி படையாச்சியாரின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரைத்தொடர்ந்து அமைச்சர்கள், மேயர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
- எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் பிறந்த நாளில் தமிழ்நாட்டுக்காகவும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காகவும் அவர் ஆற்றிய பணிகளை நன்றியுடன் போற்றுவோம்.
- சமூக நீதிக் கனவுகளை நிறைவேற்றும் ஆட்சியைத் தொடர உறுதியேற்போம்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில் கூறியிருப்பதாவது:-
விடுதலைப் போராட்ட வீரரும், பெருந்தலைவர் காமராசரின் அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பணியாற்றி வரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் பிறந்த நாளில் தமிழ்நாட்டுக்காகவும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காகவும் அவர் ஆற்றிய பணிகளை நன்றியுடன் போற்றுவோம்.
அவரது சமூக நீதிக் கனவுகளை நிறைவேற்றும் ஆட்சியைத் தொடர உறுதியேற்போம்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.






