search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sonia ganthi"

    • சோனியா காந்தி, ராகுல் காந்தியை பழிவாங்கும் எண்ணத்தோடு அமலாக்கத்துறையைப் பா.ஜ.க. அரசு பயன்படுத்தியுள்ளது
    • அரசியல் திசை திருப்பும் நாடகங்களின் மூலம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளப் பார்க்கிறது.

    காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அக்கட்சியின் எம்.பி.யுமான ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருவதற்கு முதலமைச்சர் மு.க. கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது:

    காங்கிரஸ் கட்சியையும் அதன் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரையும் பழிவாங்கும் எண்ணத்தோடு மத்திய பா.ஜ.க. அரசு அமலாக்கத் துறையைப் பயன்படுத்தியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    நாட்டில் உள்ள மக்களின் அன்றாட அடிப்படைப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியாத பாஜக இது போன்ற அரசியல் திசை திருப்பும் நாடகங்களின் மூலமாக தன்னைக் காப்பாற்றிக் கொள்ளப் பார்க்கிறது. அரசியல் தலைவர்களை அரசியல் களத்தில் எதிர்கொள்ள வேண்டுமே அல்லாமல், அமலாக்கத்துறையை ஏவி அல்ல.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • அரசியல் சாசனத்தை பாதுகாக்கக்கூடிய குடியரசுத் தலைவர் நாட்டிற்கு தேவை
    • இந்த தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்கள் திறந்த மனதுடன் இருக்க வேண்டும்

    குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இதையடுத்து இந்த தேர்தலுக்கான வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் பணியில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன.

    இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு எந்த குறிப்பிட்ட பெயரையும் பரிந்துரைக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது.

    தேசத்தின் நலனுக்காக எதிர்க்கட்சிகள் வேறுபாடுகளைக் களைந்து ஒன்றுபட வேண்டும் என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது. அரசியல் சாசனத்தையும், ஜனநாயக அமைப்புகளையும், குடிமக்களையும் ஆளும் கட்சியினரின் தாக்குதலிலிருந்து பாதுகாக்கக்கூடிய குடியரசுத் தலைவர் நாட்டிற்கு தேவை என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்கள் திறந்த மனதுடன் இருக்க வேண்டும் என்றும், மற்ற அரசியல் கட்சிகளுடன் காங்கிரஸ் இந்த விவாதத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று விரும்புவதாகவும் அக்கட்சி கூறியுள்ளது.

    இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சோனியாகாந்தி, குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து பிற கட்சித் தலைவர்களுடன் விவாதிக்க, எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளில் ஒருவருமான மல்லிகார்ஜூன் கார்கேவை நியமித்துள்ளார்.

    குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் மல்லிகார்ஜூன் கார்கே ஆலோசனை நடத்துவார் என தெரிகிறது. 

    பாராளுமன்ற மாநிலங்களவையில் மொத்தம் உள்ள 245 உறுப்பினர்களில் பாஜகவுக்கு தற்போது 95 எம்பிக்களும், காங்கிரசுக்கு 29 உறுப்பினர்களும் உள்ளனர்.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் உள்பட மாநிலங்களவையின் பல உறுப்பினர்கள் ஜூன் 21 முதல் ஆகஸ்ட் 1 வரை ஓய்வு பெறுகிறார்கள். 

    இதையடுத்து தமிழகம், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், ஆந்திரா உள்பட 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது

    மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை இன்று முடிவு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

    காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர்கள் குறித்து அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. லண்டனில் உள்ள ராகுல்காந்தி காணொலி மூலம் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதன் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது.  

    மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட பல காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது. 

    குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, விவேக் தங்கா, அஜய் மக்கன், ராஜீவ் சுக்லா, முகுல் வாஸ்னிக் மற்றும் பிரமோத் திவாரி ஆகியோரும் களத்தில் உள்ளதாக தெரிகிறது. மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் 8 இடங்களில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
     
    தமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அதில் போட்டியிட சிதம்பரத்திற்கு வாய்ப்பளிக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது. 

    வேட்பாளர் பட்டியல் வெளியானவுடன் இன்று ப.சிதம்பரம் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார். 

    மாநிலங்களவைத் தேர்தலில் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். ஜார்க்கண்டில் இருந்து இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வுக்கு ஆதரவு அளிக்குமாறு காங்கிரஸ் விடுத்துள்ள கோரிக்கைக்கு அவர் சாதகமான பதிலை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ×