search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குடியரசுத் தலைவர் தேர்தல்:  யாருடைய பெயரையும் பரிந்துரைக்கவில்லை- காங்கிரஸ் தகவல்
    X

    மல்லிகார்ஜூன் கார்கே       சோனியாகாந்தி (கோப்பு படம்)

    குடியரசுத் தலைவர் தேர்தல்: யாருடைய பெயரையும் பரிந்துரைக்கவில்லை- காங்கிரஸ் தகவல்

    • அரசியல் சாசனத்தை பாதுகாக்கக்கூடிய குடியரசுத் தலைவர் நாட்டிற்கு தேவை
    • இந்த தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்கள் திறந்த மனதுடன் இருக்க வேண்டும்

    குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இதையடுத்து இந்த தேர்தலுக்கான வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் பணியில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன.

    இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு எந்த குறிப்பிட்ட பெயரையும் பரிந்துரைக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது.

    தேசத்தின் நலனுக்காக எதிர்க்கட்சிகள் வேறுபாடுகளைக் களைந்து ஒன்றுபட வேண்டும் என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது. அரசியல் சாசனத்தையும், ஜனநாயக அமைப்புகளையும், குடிமக்களையும் ஆளும் கட்சியினரின் தாக்குதலிலிருந்து பாதுகாக்கக்கூடிய குடியரசுத் தலைவர் நாட்டிற்கு தேவை என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்கள் திறந்த மனதுடன் இருக்க வேண்டும் என்றும், மற்ற அரசியல் கட்சிகளுடன் காங்கிரஸ் இந்த விவாதத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று விரும்புவதாகவும் அக்கட்சி கூறியுள்ளது.

    இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சோனியாகாந்தி, குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து பிற கட்சித் தலைவர்களுடன் விவாதிக்க, எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளில் ஒருவருமான மல்லிகார்ஜூன் கார்கேவை நியமித்துள்ளார்.

    குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் மல்லிகார்ஜூன் கார்கே ஆலோசனை நடத்துவார் என தெரிகிறது.

    Next Story
    ×