என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹாக்கி"

    • 12-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பா் 7 வரை பீகாரில் நடைபெறுகிறது.
    • நெதா்லாந்து, பெல்ஜியத்தில் அடுத்த ஆண்டு ஹாக்கி உலக கோப்பை நடைபெறுகிறது.

    12-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பா் 7 வரை பீகாா் மாநிலம், ராஜ்கிரில் நடைபெறுகிறது. நெதா்லாந்து, பெல்ஜியத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பைக்கு தகுதிப் போட்டியாக இருப்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது.

    இந்தியா, ஜப்பான், தென் கொரியா, சீனா, மலேசியா, ஓமன், சீன தைபே ஆகிய அணிகளுடன் பாகிஸ்தானும் இந்தப் போட்டியில் பங்கேற்பது வழக்கம். ஆனால், தற்போதைய சூழலில் பாகிஸ்தான் இந்தப் போட்டியில் பங்கேற்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுடன் எந்தவொரு உறவும் இருக்க கூடாது என பல்வேறு தரப்பினரும் கடுமையாக எதிர்த்து வருகின்றனா்.

    ஆனாலும் இந்த விவகாரத்தில் தற்போதைய நிலையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், மத்திய அரசின் அறிவுறுத்தலின்பேரில் இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் ஹாக்கி இந்தியா அமைப்பு தெரிவித்துள்ளது.

    பாகிஸ்தான் அணி இந்தியா வருவதற்கு மத்திய அரசு அனுமதி மறுத்தால் 7 அணிகளுடன் போட்டியை நடத்துவதா? அல்லது பாகிஸ்தானுக்கு பதில் வேறு அணியை சோ்ப்பதா என்பது குறித்து ஆசிய ஹாக்கி சம்மேளனம் அப்போது முடிவு எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமான தளத்தில் 2016-ல் பயங்கர வாதிகள் தாக்குதல் நடத்திய சில மாதங்களுக்குப் பிறகு இந்தியாவில் நடைபெற்ற ஜூனியா் உலககோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்கவில்லை. அதற்கு பதிலாக மலேசியா கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

    ×