என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிடி வாரண்ட்"

    • "கொலை வழக்கில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் ஒருவர் கூட பாஜகவின் தலைவராக முடியும்" என விமர்சித்தார்.
    • ஏற்கனவே பலமுறை சம்மன் அனுப்பியும் ராகுல் காந்தி ஆஜராகவில்லை.

    மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் வயநாடு காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்திக்கு எதிராக ஜார்க்கண்டில் உள்ள சாய்பாசா எம்.பி-எம்.எல்.ஏ நீதிமன்றம் ஜாமினில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்துள்ளது.

    ஜூன் 26 ஆம் தேதி ராகுல் காந்தி நேரில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி ராகுல் காந்தியின் வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.

    2018 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, அப்போதைய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை குறித்து தெரிவித்த கருத்துக்களுக்கு பாஜகவில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.

    அதாவது 2003 குஜராத் கலவரத்தின் பின்னணியில், "கொலை வழக்கில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் ஒருவர் கூட பாஜகவின் தலைவராக முடியும்" என்று ராகுல் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

    எனவே ராகுல் காந்தி மீது பாஜக தலைவர் பிரதாப் கட்டியார் தாக்கல் செய்த மனு விசாரகிக்கப்பட்டு வந்தது. ஏற்கனவே பலமுறை சம்மன் அனுப்பியும் ராகுல் காந்தி ஆஜராகவில்லை.

    இந்நிலையில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரிய ராகுலின் மனுவையும் சாய்பாசா நீதிமன்றம் நிராகரித்தது. மேலும் ஜாமினில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்து, ஜூன் 26 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டது. 

    • ஜிதேந்திர யாதவ் குடும்பத்தினர் மற்றும் உள்ளூர்வாசிகள் போலீசாரை தடுக்க முயன்றதால் கலவரமாக சூழல் ஏற்பட்டது.
    • சம்பவத்தில் 3 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் உட்பட 3 அதிகாரிகள் காயமடைந்தனர்.

    பீகாரில் வர தட்சணை வழக்கில் குற்றவாளியை கைது செய்ய சென்ற போலீசாரை தடுத்து உள்ளூர் மக்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள லஹேரியசராய் பகுதியில் உள்ள அபண்டா கிராமத்தில் வசிக்கும் ஜிதேந்திர யாதவை நீதிமன்ற பிடிவாரண்ட் படி கைது செய்ய நேற்று போலீஸ் குழு ஒன்று அங்கு சென்றுள்ளது.

    அப்போது ஜிதேந்திர யாதவ் குடும்பத்தினர் மற்றும் உள்ளூர்வாசிகள் போலீசாரை தடுக்க முயன்றதால் கலவரமாக சூழல் ஏற்பட்டது.

    சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்றில், ஒரு பெரிய கும்பல் காவல்துறை அதிகாரிகள் மீது கற்களை வீசி துப்பாக்கிகளை பறிக்க முயற்சிக்கின்றனர். குற்றம் சாட்டப்பட்ட ஜிதேந்திர யாதவ் வீட்டிற்கு போலீசார் வருவதைத் தடுக்க, அவர்கள் பிரதான சாலையில் டயர்களை எரித்து மறிக்க முயன்றனர்.

    சம்பவத்தில் 3 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் உட்பட 3 அதிகாரிகள் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

    போலீசாரின் கூற்றுப்படி, தாக்குதலை நிறுத்தவும் கூட்டத்தை கலைக்கவும் கூடுதல் பாதுகாப்பு படையினர் குழு அனுப்பப்பட்டது.

    இதுகுறித்து பேசிய தர்பங்கா துணைப் பிரிவு போலீஸ் அதிகாரி (SDPO) அமித் குமார், உள்ளூர் மக்கள் கூட்டத்தில் குழந்தைகள் இருந்தனர்.

    அதனால் நாங்கள் அவர்களை நோக்கி அதிகம் சுடவில்லை. அவர்கள் பாதுகாப்புப் பணியாளர்கள் மீது கற்களை வீசினர். இருப்பினும், லேசான சக்தியைப் பயன்படுத்தி நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று கூறினார்.

    இதற்கிடையே கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட ஜிதேந்திர யாதவ் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×