என் மலர்
நீங்கள் தேடியது "வைகுண்டம்"
- பெருமை மிக்க ஸ்ரீரங்கம், ஒருகாலத்தில் அழகிய தீவு போல் அமைந்திருந்ததாகச் சொல்கிறது புராணம்.
- ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்கழி மாதம் மட்டுமின்றி, ஆடி மற்றும் தை மாதங்களிலும் அரையர் சேவை உண்டு.
நம் வாழ்க்கையில் என்ன செய்தாலும், எத்தனை நல்லவை செய்திருப்பினும், எவ்வளவு அல்லவை செய்திருந்தாலும், அரங்கனை, ரங்கநாதனை, ரங்கநாதப் பெருமாளை இறுதியில் சரணடைந்துவிட்டால் மோட்சம் நிச்சயம்; வைகுண்டத்தில் சொர்க்கவாசல் நமக்குத் திறக்கப்படும் என்று புராணம் சொல்லிவைத்த மாபெரும் விஷயத்தை மிக எளிதாக உணர்த்தியிருக்கிறார்கள்,
இத்தனை பெருமை மிக்க ஸ்ரீரங்கம், ஒருகாலத்தில் அழகிய தீவு போல் அமைந்திருந்ததாகச் சொல்கிறது புராணம். காவிரி - கொள்ளிடம் ஆறுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம், இன்றைக்கும் தன் அழகுடன், தனியழகுடன், மிகுந்த சாந்நித்தியத்துடன் அமைந்திருக்கிறது. சயனித்த திருக்கோலத்தில் இருந்தபடி, இந்த உலகுக்கும் உலக மக்களுக்கும் விடியலைத் தந்து சேவை சாதித்துக் கொண்டிருக்கிறார் ரங்கநாதப் பெருமாள். வைகுண்டத்தை திருநாடு என்று போற்றுவார்கள். அந்தத் திருநாட்டிற்குச் செல்பவர்கள் எப்போதும் பெருமாளைத் தரிசிக்கும் பாக்கியம் பெறுவர். அவர்களுக்கு நித்யசூரிகள் என்று பெயர். இவர்களுக்கு பசி, தாகம், உறக்கம் எனும் எந்த உணர்வும் இருக்காது. பேரானந்தத்தில் மூழ்கி இருப்பார்களாம்.
தமிழகத்தில் ஸ்ரீரங்கம், ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய மூன்று திவ்யதேசங்களில் மட்டும் வைகுண்ட ஏகாதசியையொட்டி அரையர் சேவை நடக்கிறது. வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய பத்துநாட்களை பகல் 10 என்றும், (மார்கழி அமாவாசைக்கு அடுத்த பிரதமை முதல் தசமி வரை) வைகுண்ட ஏகாதசிக்கு பிறகு வரும் 10 நாட்களை (ஏகாதசி முதல் பஞ்சமி வரை) ராப்பத்து நாட்களாகவும் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்கழி மாதம் மட்டுமின்றி, ஆடி மற்றும் தை மாதங்களிலும் அரையர் சேவை உண்டு.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மேல்கோட்டை ஸ்ரீநரசிம்ம பெருமாள் கோவிலில், அபிநயம் இல்லாமல் தாளத்தோடு மட்டும் அரையர் சேவை இன்றைக்கும் நடந்து வருகிறது.
ஆழ்வார்கள் பாடிய பாடல்களைத் தொகுத்தவர் நாதமுனிகள். இதுவே நாலாயிர திவ்ய பிரபந்தம் எனப்படுகிறது. இவர் ஒருமுறை கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள் மீதான 'ஆராவமுதே' என்று தொடங்கும் திவ்யபிரபந்த பாசுரத்தை சிலர் பாடக்கேட்டு அதில் மெய்மறந்து போனார்.
அதில் 'ஓராயிரத்துள் இப்பத்தும்' எனும் அடி வந்தது. அவர்களிடம், ''நீங்கள் பாடிய பாடலின் பொருள்படி, ஆயிரத்தில் பத்து பாடல் போக மீதி 990 பாடல்கள் எங்கே?'' என்று கேட்டார். ஆனால், அவர்களுக்குத் தெரியவில்லை. எனவே நாதமுனிகள் ஆழ்வார் திருநகரி சென்று இந்தக் கேள்வியை மதுரகவி ஆழ்வாரின் வம்சாவளியினரிடம் கேட்டார்.அவர்கள் பாசுரங்களைப் பெறுவதற்கு ஒரு வழியைக் கூறினர். மதுரகவி ஆழ்வாரின் பாசுரங்களை 12 ஆயிரம் முறை யார் ஒருவர் பாடுகிறாரோ, அவர் முன் ஆழ்வாரே தோன்றி அருள் செய்வார். அவரிடம் விபரம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார். நாதமுனிகளும் 12 ஆயிரம் முறை மதுரகவி ஆழ்வாரின் பாசுரத்தைப் படித்தார்.
ஆழ்வாரின் அருளால் ஆழ்வார்கள் பாடிய அனைத்துப் பாசுரங்களையும் பெற்றார்.
அந்தப் பாடல்களுக்கு தமிழ்ப்பண் அமைப்பில் இசையமைத்து திவ்ய பிரபந்தம் என்று பெயரிட்டார். தனது சீடர்களான உய்யக்கொண்டார், குருகைக்காவலப்பன், மேலையகத்தாழ்வான் மூலம் அந்தப் பாசுரங்களை திவ்யதேசங்கள் எங்கும் பாடச் செய்தார் என்கிறது ஸ்ரீரங்கம் புராணம்.
மார்கழி மாதத்தில் ஏதேனும் ஒருநாளில், திருச்சி ஸ்ரீரங்கத்துக்கு வந்து ஸ்ரீரங்கரையும் ரங்கநாயகித் தாயாரையும் ஒருமுறை வழிபட்டாலே, நம் பாவங்கள் அனைத்தும் விலகும்; பட்ட கஷ்டங்கள் அனைத்தும் தீரும். அரங்கனின்சந்நிதிக்கு வருவோம்.
அவனின் பேரருளைப் பெறுவோம்!
- அம்பரீஷ மகாராஜாவை திருமாலின் சுதர்சன் சக்கரம் காத்தது என பாகவத புராணம் தெரிவிக்கின்றது.
- இந்த ஏகாதசி விரதம் கோரிய பலன்களை தட்டாமல் தரும்.
ராவணின் கொடுமைகளை சகிக்கமுடியாத தேவர்கள் பிரம்மாவுடன் வைகுண்டம் சென்று மார்கழிமாத வளர்பிறை ஏகாதசியன்று நாராயணனை வணங்கி தங்கள் துன்பங்களை கூறினர்.
பகவானும் பிரம்மதேவர்களுக்கு தரிசனமளித்து அவர்களை காத்திருளினார்.
திருமாலின் அவதாரமான ஸ்ரீ ராமனே பங்குனி மாதத்தில் விஜயா என்ற ஏகாதசி விரதத்தை இருந்து பின் கடலை கடந்து சென்று தசக்ரீவனை அழித்து இலங்கையைவென்றார் என புராணம் தெரிவிக்கின்றது.
இந்தயோசனையை அவருக்கு பக்தாப்யர் என்ற முனிவர் கூறினார்.
இந்த ஏகாதசி விரதம் கோரிய பலன்களை தட்டாமல் தரும். மேலும் சீதா தேவியின் அருளையும் பெறலாம்.
ஒருவருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருந்து, துவாதசிப்பாரணை முடித்த அம்பரீஷ மகா ராஜாவை தவத்தில் சிறந்த துர்வாச முனிவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.
அம்பரீஷ மகாராஜாவை திருமாலின் சுதர்சன் சக்கரம் காத்தது என பாகவத புராணம் தெரிவிக்கின்றது.
திருக்குறுங்குடி எனும் தலத்தில் பாணர் குலத்தைசேர்ந்த நம்பாடுவான் ஏகாதசியன்று எம்பெருமானை பாடி தானும் உயர்வு பெற்றதோடு தன்னை அழிக்கவந்த பிரம்மராட்சசனுக்கும் சாப விமோசனத்தை அளித்ததை கைசிக புராணம் தெரிவிக்கின்றது.
ருக்மாங்கதன் எனும் மாமன்னன் இந்த விரத்தை தானும் கடைப்பிடித்து தன்நாட்டவரும் பின்பற்றுமாறு செய்ததால் அவன் பெற்ற பெரும் பயனனை ரும்மாங்கத சரித்திரம் தெரிவிக்கின்றது.
பீமன் ஒர் ஆண்டுமுழுவதும் இந்த விரதத்தை செய்ய முடியாத நிலையில் ஆனி மாத சுக்ல பட்ச ஏகாதசியாகிய நிர்ஜலா எனும் விரதத்தை மட்டுமே நிறைவேற்றி ஓர் ஆண்டில் முழுபயனையும் பெற்றதாக பத்மபுராணம் தெரிவிக்கின்றது.
பாற்கடலில் மந்தார மலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும் கொண்டு எம்பெருமான் அமுதத்தை கடைந்து எடுத்த ஒப்பற்ற நாள் வைகுண்ட ஏகாதசி ஆகும்.
குருசேத்திர போரில் பார்த்தனுக்கு கீதையை உபதேசித்த நாள் இந்த நாள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
- வசந்த உற்சவத்தின் போது 9 நாட்களும் வசந்த மண்டபத்தில் சூர்ணாபிஷேகம் என்றழைக்கப்படும்
- வசந்த உற்சவ நாட்களில் இரவு 8 மணிக்கு பிறகு ஆரியபடாள் வாசலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
திருச்சி:
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு தோறும் வசந்த உற்சவம் நடைபெறும். வசந்த உற்சவத்தின் போது நம்பெருமாள் கோவிலின் நான்காம் பிரகாரமான ஆலிநாடன் திருச்சுற்றில் சக்கரத்தாழ்வார் சன்னதி வடபுறம் அமைந்துள்ள அழகிய தோட்டத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளுவார்.
உற்சவத்தையொட்டி தினமும் மாலை 5 மணிக்கு நம்பெருமாள் மூலஸ் தனத்திலிருந்து புறப்பட்டு வசந்த மண்டபதிற்கு மாலை 6 மணிக்கு சென்றடைவார். அங்கு மண்டபத்தில் நடுவில் நம்பெருமாள் ஒய்யாரமாக வீற்றிருப்பார்.
வசந்த உற்சவத்தின் போது 9 நாட்களும் வசந்த மண்டபத்தில் சூர்ணாபிஷேகம் என்றழைக்கப்படும் மஞ்சள் பொடியினை நம்பெருமாள் மீது தூவும் நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு நடைபெறும். வசந்த உற்சவத்தின் முதல் நாளான நேற்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கு அலங்காரம், அமுது செய்து சூர்ணா பிஷேகம் கண்டருளினார். பின்னர் வசந்த மண்டபத்திலிருந்து இரவு 9மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

வசந்த உற்சவ விழாவின் 7ம் நாளான்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளி நெல்லளவு கண்டருளுகிறார். 9ம் திருநாள் அன்று நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார். தீர்த்தவாரி மற்றும் திருமஞ்சனம் கண்டருளுவார்.
வசந்த உற்சவ நாட்களில் இரவு 8 மணிக்கு பிறகு ஆரியபடாள் வாசலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரியப்பன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.






