என் மலர்
நீங்கள் தேடியது "விமானம் தாமதம்"
- அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
- வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு கடந்த மாதம் 12-ந்தேதி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானத்தில் விமானத்தில் பயணித்த 241 பேர் (மொத்தம் 260பேர்) உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் விமான பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே, சில இடங்களில் விமானம் புறப்படும் நேரத்தில் பறவை மோதல் போன்ற சம்பவங்களால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சூரத் மாநிலத்தில் இருந்து ஜெய்பூருக்கு புறப்பட வேண்டிய விமானத்தை தேனீக்கள் சூழ்ந்ததால் சுமார் 1 மணிநேரத்திற்கு மேலாக பயணிகள் காத்திருந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சூரத் சர்வதேச விமான நிலையத்தில் ஜெய்ப்பூருக்கு செல்ல இண்டிகோ விமானம் தயாரானது. விமானத்தில், பைலட்கள், பயணிகள் என அனைவரும் வந்து அமர்ந்திருக்க, விமானத்தின் லக்கேஜ் கதவு திறப்பின் ஒரு பகுதியில் தேனீக்கள் சூழ்ந்து கொண்டதால் செய்வதறியாது விமான ஊழியர்கள் தவித்தனர். இதனால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, தேனீக்களை விரட்ட முதலில் புகை பயன்படுத்தப்பட்டது. ஆனால் அது வேலை செய்யவில்லை. கடைசியாக, ஒரு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு லக்கேஜ் கதவில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. இதையடுத்து தேனீக்கள் அப்புறப்படுத்தப்பட்டு சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு விமானம் தாமதமாக ஜெய்ப்பூருக்கு புறப்பட்டு சென்றது.
இந்த சம்பவத்தால் விமான நிலைய பகுதியில் சில மணிநேரம் பரபரப்பு சூழ்ந்து காணப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- குடிநீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கூட வழங்கப்படவில்லை என பயணிகள் புகார்.
- விமான நிறுவன நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக கூறி பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சியில் இருந்து துபாய்க்கு செல்ல வேண்டிய விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
அதிகாலை 4 மணிக்கு புறப்பட இருந்த விமானம், 6 மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
குடிநீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கூட வழங்கப்படவில்லை என பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், விமான நிறுவன நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக கூறி பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட விமானம் 113 பயணிகளுடன் ரன் வேயில் சிறிது தூரம் புறப்பட்டு சென்று தொழில்நுட்ப கோளாறால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- ஜி20 மாநாட்டில் பங்கேற்க கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா வந்திருந்தார்.
- அவர் இன்று புறப்பட்டு செல்ல வேண்டிய விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது.
புதுடெல்லி:
டெல்லியில் நடைபெற்ற ஜி20உச்சி மாநாட்டில் பங்கேற்க கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா வந்துள்ளார்.
மாநாடு நிறைவுற்ற நிலையில், பல்வேறு நாட்டு தலைவர்கள் நாடு திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ புறப்பட வேண்டிய விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானத்தை சரிபார்க்கும் வேலைகள் நடந்து வருகின்றன.
விமானம் சரியாகும் வரையில் அவர் இந்தியாவில் இருப்பார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செல்ல வேண்டிய விமானம் இரவு 8 மணிக்கு புறப்பட்டிருக்க வேண்டும். திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதால் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, கனடா பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனடா பிரதமர் செல்ல வேண்டிய சிஎப்சி 001 விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதை ஒரே நாள் இரவில் சரிசெய்துவிட முடியாது என்பதால், மாற்று ஏற்பாடு வரும் வரையில் கனடா பிரதமரின் குழுவினர் இந்தியாவில் இருப்பார்கள் என தெரிவித்துள்ளது.






