என் மலர்
நீங்கள் தேடியது "பருப்பு வகைகள்"
- வாரத்திற்கு 5 அவுன்ஸ் வால்நட்ஸ் எடுத்துக்கொள்ளலாம். ஒரு அவுன்ஸ் வால்நட்டில் 190 கலோரிகள் உள்ளன.
- வால்நட்ஸில் உள்ள ஆரோக்கிய நன்மைகளை அப்படியேப்பெற உப்பு சேர்க்காத வால்நட்ஸ் சாப்பிடுவது நல்லது.
ஆரோக்கிய உணவுமுறை பட்டியல் என்று இப்போது எடுத்தால் அதில் கண்டிப்பாக நட்ஸ் இருக்கும். ஏனெனில் கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் தற்போது நமது உணவுகள் சத்தானதாக இல்லை. அதனால் உடல் ஆரோக்கியத்தைப்பெற பழங்கள், நட்ஸ் போன்றவற்றை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நிலை உள்ளது. அப்படிப்பட்ட நட்ஸ் வகைகளில் முக்கியமான ஒன்றுதான் அக்ரூட் பருப்பு, அதாவது வால்நட்ஸ். ஒருகாலத்தில் அரச குடும்பத்தினர் மட்டுமே இதனை சாப்பிட்டு வந்தார்கள். அப்படி அரச குடும்பத்தினர் மட்டும் பயன்படுத்த வேண்டும் என சொல்லப்பட்டதற்கு காரணமாக இருந்த வால்நட்ஸில் உள்ள ஊட்டச்சத்து நன்மைகள் குறித்து பார்ப்போம்.
இதய ஆரோக்கியம்
வால்நட்ஸ் ஒமேகா-3 கொழுப்பு அமிலமான ஆல்பா-லினோலெனிக் அமிலத்தின் (ALA) சிறந்த மூலமாகும். ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் காணப்படும் ஒரே பருப்புவகை வால்நட்ஸ் ஆகும். அதிக கொழுப்பு பெரும்பாலும் உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும். இது இதய நோய்களை ஏற்படுத்துகிறது. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் வீக்கத்தைக் குறைக்கின்றன.
மூளை ஆரோக்கியம்
வால்நட்ஸில் காணப்படும் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பாலிபினால்கள் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மேலும் வயதாகும்போது ஏற்படும் அறிவாற்றல் குறைபாட்டை மெதுவாக்கும் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குடல் ஆரோக்கியம்
குடல் பாக்டீரியாக்கள் ஆரோக்கியத்திற்கு அவசியமானவை. ஆரோக்கியமான குடல் பாக்டீரியாக்கள், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், செரிமானத்தை எளிதாக்கவும், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவும் உதவுகின்றன. வால்நட்ஸ் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். தினமும் வால்நட் சாப்பிடும் பெரியவர்களுக்கு குடலின் நுண்ணுயிர் உற்பத்தி அதிகமாக இருப்பதாகக் நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசன் வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு அவுன்ஸ் வால்நட்டில் 190 கலோரிகள் உள்ளன
புற்றுநோய் தடுப்பு
குடலில் உள்ள நுண்ணுயிரிகள் வால்நட்ஸில் காணப்படும் சேர்மங்களை கொண்டு யூரோலிதின் (தசைகளின் வலிமையை மேம்படுத்த உதவும் ) கலவையை உற்பத்தி செய்கின்றன. இந்த யூரோலிதின்கள் சில புற்றுநோய்களுக்கான ஆபத்தைக் குறைக்க உதவும். குறிப்பாக வயிறு மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆபத்தைக் குறைக்கும்.
எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும்?
அமெரிக்க விவசாயத் துறை பரிந்துரைப்படி, அமெரிக்காவில் வாரத்திற்கு 5 அவுன்ஸ் வால்நட்ஸ் எடுத்துக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. அதிகமாக எடுத்துக் கொண்டால் கலோரி அளவு அதிகமாகி விடும். ஒரு அவுன்ஸ் வால்நட்டில் 190 கலோரிகள் உள்ளன. கலோரிகளைப் போலவே வால்நட்ஸில் ஊட்டச்சத்துக்களும் அதிகமாக உள்ளன. வால்நட்டில் உள்ள ஆரோக்கியமான நிறைவுறா கொழுப்புகள் நீண்டநேரம் வயிறு நிரம்பிய உணர்வை தரும். இதனால் எளிதில் பசி எடுக்காது. மேலும் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியத்தை தருகிறது.
எப்படி எடுத்துக்கொள்ளவேண்டும்?
வால்நட்ஸில் உள்ள ஆரோக்கிய நன்மைகளை அப்படியேப்பெற பச்சையாக எடுத்துக்கொள்ளவேண்டும். வாங்கும்போது உப்பு சேர்க்காததாக பார்த்து வாங்குங்கள். ஓட்மீலில் கலந்து சாப்பிடலாம்.
- உளுந்தம்பருப்பு விலை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மொத்த மார்க்கெட்டில் ரூ.125-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.115-க்கு விற்பனை ஆனது.
- அண்டை மற்றும் வட மாநிலங்களில் பருப்பு விளைச்சல் அமோகமாக இருப்பதால், அதன் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
சென்னை:
மளிகை பொருட்களில் முக்கியமான இடத்தில் பருப்பு வகைகள் இருக்கின்றன. மொத்த மார்க்கெட்டில் துவரம் பருப்பு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.175-க்கும், கடந்த ஆண்டில் ரூ.150-க்கும் விற்பனை ஆனது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரூ.130 என்ற நிலைக்கு வந்தது. தற்போது அதன் விலை மேலும் குறைந்து தற்போது ரூ.105 முதல் ரூ.110 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை கடைகளில் இதைவிட சற்று அதிகம் விற்கப்பட வாய்ப்புள்ளது.
இதேபோல், உளுந்தம்பருப்பு விலை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மொத்த மார்க்கெட்டில் ரூ.125-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.115-க்கு விற்பனை ஆனது. இதுதவிர பாசிப் பருப்பை எடுத்துக் கொண்டால், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, 50 கிலோ கொண்ட மூட்டை ரூ.5 ஆயிரத்து 800 வரை விற்கப்பட்டது. தற்போது அதன் விலை ரூ.5,200 என்ற நிலைக்கு வந்திருக்கிறது. இப்படியாக பருப்பு வகைகளின் விலை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருந்த விலையைவிட கிலோவுக்கு ரூ.20 வரை குறைந்து இருப்பதை பார்க்க முடிகிறது.
அண்டை மற்றும் வட மாநிலங்களில் பருப்பு விளைச்சல் அமோகமாக இருப்பதால், அதன் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக விலை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- வரும் நாட்களில் தக்காளி உள்பட காய்கறிகளின் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பருப்பு வகைகள் எதிர்பார்த்த அளவுக்கு வருவது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
நாடு முழுவதும் தக்காளி விலை சில தினங்களுக்கு முன்பு உயர்ந்த நிலையில் தற்போது கணிசமான அளவுக்கு குறைந்து விட்டது. வரும் நாட்களில் தக்காளி உள்பட காய்கறிகளின் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பருப்பு வகைகளின் விலை உயர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
வடமாநிலங்களில் பெய்து வரும் மழை காரணமாக பல இடங்களில் பருப்பு வகைகள் உற்பத்தி முடங்கி உள்ளது. இதனால் பருப்பு வகைகள் எதிர்பார்த்த அளவுக்கு வருவது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. எனவே வரும் நாட்களில் பருப்பு வகைகளின் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது பண வீக்கத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
- எண்ணெய் இறக்குமதிக்கான வரி 25 சதவீதம் உயர்வு.
- லிட்டருக்கு ரூ.30 வரை கூடியுள்ளது.
சென்னை:
எண்ணெய் இறக்குமதிக்கான வரியை மத்திய அரசு 25 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது. இதனால் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
பெட்ரோல், டீசல், தங்கம், வெள்ளியை போல எண்ணெய் விலையும் தினமும் நிர்ணயிக்கப்படுகிறது.
அனைத்து சமையல் எண்ணெய், கடலை எண்ணெய், தீப எண்ணெய் வகைகள் திடீரென உயர்ந்துள்ளன. எண்ணெய் மார்க்கெட்டில் தினசரி நிர்ணயிக்கப்படும் விலை கடந்த 3 நாட்களாக அதிகரித்துள்ளது.

பாமாயில் ஒரு லிட்டருக்கு ரூ.15 உயர்ந்துள்ளது. 90 ரூபாய்க்கு விற்கப்பட்ட பாமாயில் மளிகை கடைகளில் தற்போது ரூ.110 வரை விற்கப்படுகிறது.
சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணை போன்றவை லிட்டருக்கு ரூ.30 வரை கூடியுள்ளது. சில்லரை வியபாரிகள் மொத்த வியாபாரிகளிடம் எண்ணெய் ஆர்டர் கொடுக் கும் போது விலையேற்றத்தை கூறியதோடு மட்டுமின்றி இன்னும் விலை உயர வாய்ப்பு இருப்பதாக தெரி வித்தனர்.
மளிகைக் கடைகளில் உயர்த்தப்பட்ட திடீர் எண்ணெய் விலையை கேட்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து மளிகை கடை வியாபாரிகள் கூறும்போது, எல்லா எண்ணெய் வகைகளும் 3 நாட்களில் உயர்ந்து விட்டன. மத்திய அரசின் இறக்குமதி வரி உயர்வின் காரணமாக இந்த விலையேற்றம் ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படு கிறார்கள்.
தற்போது பண்டிகை காலம் என்பதால் எண்ணெய் பயன்பாடு அதிகரித்து உள்ளது. ஓட்டல்களில், இனிப்பு, காரம் தயாரிப்பு களுக்கு பயன்படுத்தப்படும் பாமாயில் விலை உயர்வு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
தீபாவளி பண்டு பிரித்து இருப்பவர்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு எண்ணெய், இனிப்பு வழங்கு வார்கள். இந்த விலை உயர்வு அவர்களையும் பாதித்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சென்னையில் உள்ள எண்ணெய் உற்பத்தி நிறுவனம் தரப்பில் கூறும்போது, இறக்குமதி வரியின் காரணமாக எல்லா எண்ணெய் வகைகளும் உயந்துள்ளன. பாமாயில் விலை 10 பாக்கெட்டுகள் கொண்ட பெட்டிக்கு ரூ.100 உயர்ந்தது. தீப எண்ணெய் பெட்டி ரூ.1035-ல் இருந்து ரூ.1230 ஆக உயர்ந்தது என்றார்.

கடலை பருப்பு
இதே போல கடலை பருப்பு விலை கிலோவிற்கு 15 ரூபாய் கூடியுள்ளது. ரூ.90-க்கு விற்கப்பட்டது. தற்போது ரூ.105 ஆக கூடியுள்ளது. பச்சை பட்டாணி, வெள்ளை மூக்கடலை போன்றவற்றின் விலையும் உயர்ந்துள்ளது.






