என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பருப்பு வகைகள் கிலோவுக்கு ரூ.20 வரை சரிவு
    X

    பருப்பு வகைகள் கிலோவுக்கு ரூ.20 வரை சரிவு

    • உளுந்தம்பருப்பு விலை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மொத்த மார்க்கெட்டில் ரூ.125-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.115-க்கு விற்பனை ஆனது.
    • அண்டை மற்றும் வட மாநிலங்களில் பருப்பு விளைச்சல் அமோகமாக இருப்பதால், அதன் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    சென்னை:

    மளிகை பொருட்களில் முக்கியமான இடத்தில் பருப்பு வகைகள் இருக்கின்றன. மொத்த மார்க்கெட்டில் துவரம் பருப்பு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.175-க்கும், கடந்த ஆண்டில் ரூ.150-க்கும் விற்பனை ஆனது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரூ.130 என்ற நிலைக்கு வந்தது. தற்போது அதன் விலை மேலும் குறைந்து தற்போது ரூ.105 முதல் ரூ.110 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை கடைகளில் இதைவிட சற்று அதிகம் விற்கப்பட வாய்ப்புள்ளது.

    இதேபோல், உளுந்தம்பருப்பு விலை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மொத்த மார்க்கெட்டில் ரூ.125-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.115-க்கு விற்பனை ஆனது. இதுதவிர பாசிப் பருப்பை எடுத்துக் கொண்டால், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, 50 கிலோ கொண்ட மூட்டை ரூ.5 ஆயிரத்து 800 வரை விற்கப்பட்டது. தற்போது அதன் விலை ரூ.5,200 என்ற நிலைக்கு வந்திருக்கிறது. இப்படியாக பருப்பு வகைகளின் விலை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருந்த விலையைவிட கிலோவுக்கு ரூ.20 வரை குறைந்து இருப்பதை பார்க்க முடிகிறது.

    அண்டை மற்றும் வட மாநிலங்களில் பருப்பு விளைச்சல் அமோகமாக இருப்பதால், அதன் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக விலை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×