பருப்பு வகைகள் விலை உயர வாய்ப்பு

வரும் நாட்களில் தக்காளி உள்பட காய்கறிகளின் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பருப்பு வகைகள் எதிர்பார்த்த அளவுக்கு வருவது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
பருப்பு வகைகள் விலை உயர வாய்ப்பு
Published on

நாடு முழுவதும் தக்காளி விலை சில தினங்களுக்கு முன்பு உயர்ந்த நிலையில் தற்போது கணிசமான அளவுக்கு குறைந்து விட்டது. வரும் நாட்களில் தக்காளி உள்பட காய்கறிகளின் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பருப்பு வகைகளின் விலை உயர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

வடமாநிலங்களில் பெய்து வரும் மழை காரணமாக பல இடங்களில் பருப்பு வகைகள் உற்பத்தி முடங்கி உள்ளது. இதனால் பருப்பு வகைகள் எதிர்பார்த்த அளவுக்கு வருவது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. எனவே வரும் நாட்களில் பருப்பு வகைகளின் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது பண வீக்கத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com