என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தண்டையார்பேட்டை"

    • அரசு அச்சகப் பணியாளர்களுக்கு தண்டையார்பேட்டை - காமராஜர் நகரில் நவீன வசதிகளுடன் கூடிய குடியிருப்புகள் கட்டித் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
    • குடியிருப்புகளுக்கு தேவையான மின் இணைப்பு, மின்தூக்கி வசதி, தீயணைப்பு உபகரணம், குடிநீர் வசதி, கழிவுநீர் இணைப்பு, உட்புற அணுகு சாலை, தெரு விளக்கு, சுற்றுச் சுவர் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2022-2023-ம் ஆண்டுக்கான எழுது பொருள் மற்றும் அச்சுத் துறை மானியக் கோரிக்கையில், அரசு அச்சகப் பணியாளர்களுக்கு சென்னை, தண்டையார்பேட்டை - காமராஜர் நகரில் நவீன வசதிகளுடன் கூடிய குடியிருப்புகள் கட்டித் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அந்த அறிவிப்பிற்கிணங்க, சென்னை, தண்டையார்பேட்டை, காமராஜர் நகரில் 39 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் 79 ஆயிரம் சதுரடி பரப்பளவில், 96 குடியிருப்புகளுடன், தரை மற்றும் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு அச்சகப் பணியாளர் குடியிருப்பினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்து, பணியாளர்களுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டிற்கான ஆணைகளை வழங்கினார்.

    இக்குடியிருப்பின் தரைத்தளத்தில் வாகன நிறுத்துமிடம், மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வுதளம், முதல் தளம் முதல் 6-ம் தளம் வரை உள்ள ஒவ்வொரு குடியிருப்பும் தலா 450 சதுரடியுடன், குடியிருப்புகளுக்கு தேவையான மின் இணைப்பு, மின்தூக்கி வசதி, தீயணைப்பு உபகரணம், குடிநீர் வசதி, கழிவுநீர் இணைப்பு, உட்புற அணுகு சாலை, தெரு விளக்கு, சுற்றுச் சுவர் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

    இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பஸ் புறப்பட்ட போது பீர் பாட்டிலை பஸ்சின்படிக்கட்டில் விசி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
    • கண்டக்டர் சிவசங்கரன், தண்டையார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    ராயபுரம்:

    பிராட்வேயில் இருந்து ஐ.ஓ.சி. நோக்கி நேற்று முன்தினம் மாநகர பஸ் (எண்44) சென்றது. தண்டையார்பேட்டை தபால் நிலையம் பஸ் நிறுத்தத்தில் பஸ்நின்றபோது தண்டையார்பேட்டை, காசிமேடு பகுதியை சேர்ந்த 10 மற்றும் 11-ம் மாணவர்கள் சிலர் ஏறி பின்புற படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்தனர். இதனை கண்டக்டர் சிவசங்கரன் கண்டித்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் தண்டையார்பேட்டை மெட்ரோ ரெயில் நிலைய பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்றபோது சாலையில் இருந்த பீர் பாட்டிலால் தாக்க முயன்றனர்.

    பின்னர் பஸ் புறப்பட்ட போது பீர் பாட்டிலை பஸ்சின்படிக்கட்டில் விசி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இதுகுறித்து கண்டக்டர் சிவசங்கரன், தண்டையார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இது தொடர்பாக போலீசார்கள் 6 பள்ளி மாணவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களை கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

    • கார் வந்து கொண்டிருந்தபோது திடீரென்று காரில் இருந்து புகை வந்தது.
    • காசிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராயபுரம்:

    சென்னை பழைய வண்ணாரப்பேட்டை தாண்டவராயன் தெருவை சேர்ந்தவர் காசி (வயது 55). லாரி டிரைவர். இவர் குடும்பத்துடன் கோவிலுக்கு செல்வதற்காக திருவொற்றியூர் டோல்கேட்டில் உள்ள பார்க்கிங்கில் காரை நிறுத்தி இருந்தார். அந்த காரை அவரது மகன் யோகராஜ் (22) அங்கிருந்து ஓட்டி வந்தார்.

    தண்டையார்பேட்டை கும்பாளம்மன் கோவில் அருகே கார் வந்து கொண்டிருந்தபோது திடீரென்று காரில் இருந்து புகை வந்தது. இதைப்பார்த்த யோகராஜ் காரை நிறுத்திவிட்டு உடனே வெளியே ஓடி வந்தார். சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிய தொடங்கி மளமளவென்று தீ பரவியது. அப்போது அதே பகுதியில் உள்ள விநாயகபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த ஜெயராஜ் (41) என்பவர் ஏற்கனவே அங்கு சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த காரும் தீ பிடித்து எரிய தொடங்கியது.

    இதையடுத்து தண்டையார்பேட்டை தீயணைப்பு நிலைய அதிகாரி முத்து வீரப்பன் தலைமையில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். ஆனால் தீயில் 2 கார்களும் எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக யோகராஜ் புகை வந்தவுடன் காரை நிறுத்திவிட்டு வெளியே ஓடி வந்ததால் தப்பினார். இதுகுறித்து காசிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
    • பெருமாள் கோவில் தெரு, வீரக்குட்டி தெரு, கே.ஜி. கார்டன், மேயர் பாசுதேவ் தெரு.

    சென்னை:

    தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் வருகிற 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி நடைபெறுகிறது. எனவே பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    தண்டையார்பேட்டை பகுதியில் கும்மாளம்மன் கோவில் தெரு, ஜி.ஏ.ரோடு, டி.எச்.ரோடு ஒரு பகுதி, சோலையப்பன் தெரு, கப்பல்போலு தெரு, வி.பி.கோவில் தெரு, தாண்டவராயன் தெரு, ரெய்னி மருத்துவமனை, ஸ்ரீ ரங்கம்மாள் தெரு, ராமானுஜம் தெரு, சஞ்சீவராயன் தெரு, சுப்புராயன் தெரு, பாலுமுதலி தெரு, பழைய வண்ணாரப்பேட்டை, இளைய தெரு ஒருபகுதி, மன்னப்பன் தெரு ஒரு பகுதி, தங்கவேல் தெரு, நைனியப்பன் தெரு, பெருமாள் கோவில் தெரு, வீரக்குட்டி தெரு, கே.ஜி. கார்டன், மேயர் பாசுதேவ் தெரு.

    பள்ளிக்கரணை பகுதிகள், அசாம் பவன், ஒடிசா பவன், எச்.எல்.எல் எச்.டி. சேவை, காமாட்சி மருத்துவமனை, மயிலை பாலாஜி நகர்-பகுதி 1 முதல் பகுதி 4, தந்தைபெரியார் நகர், சீனிவாசா நகர், சிலிக்கான் டவர், ஜாஸ்மின் இன்போ டெக், சிடிஎஸ், என்.ஐ. டபுள்யூ.இ. எச்.டி., கார்ப்பரேஷன் டம்ப் யார்டு, வேளச்சேரி குடியிருப்புகள், வேளச்சேரி குடியிருப்புகள் பிரதான சாலை, ஆர்.வி கோபுரங்கள் ஆகிய பகுதி யில் மின்சாரம் இருக்கிறது.

    மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×