தண்டையார்பேட்டையில் பஸ் கண்டக்டரை பீர் பாட்டிலால் தாக்க முயன்ற பள்ளி மாணவர்கள் 6 பேர் கைது

பஸ் புறப்பட்ட போது பீர் பாட்டிலை பஸ்சின்படிக்கட்டில் விசி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.கண்டக்டர் சிவசங்கரன், தண்டையார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
தண்டையார்பேட்டையில் பஸ் கண்டக்டரை பீர் பாட்டிலால் தாக்க முயன்ற பள்ளி மாணவர்கள் 6 பேர் கைது
Published on

ராயபுரம்:

பிராட்வேயில் இருந்து ஐ.ஓ.சி. நோக்கி நேற்று முன்தினம் மாநகர பஸ் (எண்44) சென்றது. தண்டையார்பேட்டை தபால் நிலையம் பஸ் நிறுத்தத்தில் பஸ்நின்றபோது தண்டையார்பேட்டை, காசிமேடு பகுதியை சேர்ந்த 10 மற்றும் 11-ம் மாணவர்கள் சிலர் ஏறி பின்புற படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்தனர். இதனை கண்டக்டர் சிவசங்கரன் கண்டித்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் தண்டையார்பேட்டை மெட்ரோ ரெயில் நிலைய பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்றபோது சாலையில் இருந்த பீர் பாட்டிலால் தாக்க முயன்றனர்.

பின்னர் பஸ் புறப்பட்ட போது பீர் பாட்டிலை பஸ்சின்படிக்கட்டில் விசி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து கண்டக்டர் சிவசங்கரன், தண்டையார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக போலீசார்கள் 6 பள்ளி மாணவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களை கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com