என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அண்ணாமாலை"

    • நயினார் நாகேந்திரன் 'தமிழகம் தலைநிமிர; தமிழனின் பயணம்' என்ற பெயரில் பிரசார பயணத்தை தொடங்குகிறார்.
    • நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை உரையாற்றினார்.

    தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக இயங்கி வருகின்றன.

    குறிப்பாக, பெரும்பான்மையான அரசியல் கட்சித் தலைவர்கள் மக்கள் சந்திப்புகளை முன்னெடுத்து வருகின்றனர்.

    அந்த வகையில், தமிழ்நாடு பாஜக சார்பில், அக்கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் 'தமிழகம் தலைநிமிர; தமிழனின் பயணம்' என்ற பெயரில் பிரசார பயணத்தை தொடங்குகிறார்.

    அதற்கான தொடக்க நிகழ்ச்சி இன்று மதுரையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்,

    தமிழக பாஜக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை உரையாற்றினார்.

    இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இன்றைய தினம் மாலை, பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வழிகாட்டுதலுடன், தமிழக பாஜக மாநில தலைவர் மரியாதைக்குரிய அண்ணன் நயினார் நாகேந்திரன் அவர்கள் துவங்கியிருக்கும் "தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்" என்ற மாபெரும் மக்கள் சந்திப்பு பயணத்தின் துவக்க விழாவில் பங்கேற்று உரையாற்றியதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

    தமிழகத்தில் திமுக அரசு இறுமாப்போடு அமர்ந்து கொண்டிருக்கிறது. பணத்தை வைத்து வாக்குகளை வாங்கிவிடலாம் என்ற இறுமாப்பு. ஆனால், திமுகவினர் கண்ணாடி கூண்டுக்குள் அமர்ந்துகொண்டு கல்லெறிந்து கொண்டு இருக்கிறார்கள். தனது குடும்பத்தின் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் திமுக ஆட்சி அகற்றப்பட்டு, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையவேண்டும் என்று ஒவ்வொரு திமுக தொண்டனுக்கும் கூட தெரியும்.

    திமுக ஆட்சி அமைந்த பிறகு கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகத்தில் 88 பேர் கள்ளசாராயத்தால் உயிரிழந்துள்ளனர். கரூரில் 41 அப்பாவி மக்கள் உயிரிழந்தார்கள். அவர்கள் என்ன தவறு செய்தார்கள்?

    உண்மை என்னவென்றால், கரூரில் 100 காவலர்கள் கூட பாதுகாப்பிற்காக இல்லை. ஆனால், நேற்று பகுஜன் சமாஜ் கட்சி கொலைவழக்கில் முதல் குற்றவாளியின் இறுதி ஊர்வலத்திற்கு 6 துணை ஆணையர்கள், 3 இணை ஆணையர்கள், 42 காவல் ஆய்வாளர்கள், 87 துணை ஆய்வாளர்கள் உட்பட 1,100 காவலர்களை அனுப்பியது திமுக அரசு.

    இதிலிருந்தே, திமுக அரசின் அக்கறை எங்கே இருக்கிறது என்று மக்களுக்கு தெரியும். இப்படிப்பட்ட திமுக ஆட்சி 2026 தேர்தலில் அகற்றப்படவேண்டும். அதற்காக பாஜகவின் ஒவ்வொரு நிர்வாகியும், தொண்டனும் கடுமையாக உழைக்கவேண்டும்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • பக்தர்களின் காணிக்கை, உண்டியல் பணங்கள் சுரண்டப்படுகிறது.
    • வடிவேலு கிணற்றை காணோம் என்று சொன்னது போல் திருச்செந்தூர் கோவிலில் மாடுகளை காணவில்லை என அண்ணாமலை கூறி உள்ளார்

    சென்னை:

    தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை வள்ளூவர் கோட்டத்தில் இன்று போராட்டம் நடைபெற்றது.

    இந்த போராட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:-

    திருக்கோவிலின் மரபுகள் மீறப்படுகிறது. கணக்கில்லாமல் கோவில்கள் இடிக்கப்படுகிறது. புராதன கோவில்களின் நகைகள் உருக்கப்படுகிறது. பக்தர்களின் காணிக்கை உண்டியல் பணங்கள் சுரண்டப்படுகிறது. பூஜை புனஷ்காரங்கள் நிறுத்தப்படுகிறது. பக்தர்கள் வருகைகள் தவிர்க்கப்படுகிறது. கோவில் கும்பாபிஷேகங்கள் மறுக்கப்படுகிறது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் நமக்கு எல்லாம் தெரியும் எனது உறவினர்கள், உங்கள் உறவினர்கள், தெரிந்தவர்கள் எல்லோரும் கடவுளுக்கு வேண்டிக்கொண்டு பசு மாட்டை கொடுப்போம். திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடந்த தணிக்கை அறிக்கையில் ஒரு பத்தியை படித்து பார்த்தால் 5 ஆயிரத்து 309 மாட்டை காணவில்லை.

    அதாவது பக்தர்கள் மாட்டை கொடுத்த பதிவுகள் உள்ளது. யார் ஏலம் விட்டது? மாடுகளை சைடில் திருடி உறவினர், திமுக கிளைச்செயலாளருக்கெல்லாம்  கொடுத்து விற்றுவிட்டீர்களா? 5 ஆயிரத்து 309 மாடுகளை திருச்செந்தூர் கோவிலில் நடத்தப்பட்ட தணிக்கையில் காணவில்லை. 'வடிவேலு கிணற்றை காணோம் என்று சொன்னது போல்' திருச்செந்தூர் கோவிலில் 5 ஆயிரத்து 309 மாட்டை காணவில்லை. அப்படி இருக்கும்போது எந்த தைரியத்தில் இந்து சமய அறநிலையத்துறை என்ற துறையை வைத்துக்கொண்டு வெள்ளை, காவி உடையுடன் அமைச்சர் காலை முதல் மாலை வரை சுற்றிக்கொண்டுள்ளார்?

    இவ்வாறு அண்ணாமலை பேசினார். 

    ×