என் மலர்
நீங்கள் தேடியது "கொடி நாள்"
- ஆசைகளையெல்லாம் குறுக்கி, பகைவர்களை விரட்டும் ஒப்பற்ற செயலை மேற்கொள்கின்ற படை வீரர்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்து தருவது நம் மகத்தான கடமை.
- நம் இல்லத்தைப் பார்த்துக்கொள்ள நாடே அணிதிரண்டு நிற்கிறது என்கிற நன்னம்பிக்கை ஒளிவீச, கொடி நாளுக்கு கொடுக்கும் நம் கொடையே அத்தாட்சி.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள கொடி நாள் வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-
இல்லத்தை மறந்து, எல்லையோரத்தில் பல இன்னல்களைத் தாங்கி, நாட்டுப்பற்று என்கிற நம்பிக்கையை மட்டும் இதயத்தில் ஏந்தி, இந்திய ஒருமைப்பாட்டுக்காக தவம் இருக்கிற முப்படை வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்து, நம் சேமிப்பின் ஒரு பகுதியை ஒப்படைக்கும் உன்னதத் திருநாள், இந்த கொடிநாள்.
பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்து, நாட்டின் அத்தனை பகுதிகளையும் பத்திரப்படுத்தும் உத்தமச் செயலை சமரசம் செய்து கொள்ளாமல், உயிரைத் துச்சமென மதித்து, சீருடைக்குள் தங்கள் எண்ணச் சிறகுகளையெல்லாம் ஒடுக்கி, ஆசைகளையெல்லாம் குறுக்கி, பகைவர்களை விரட்டும் ஒப்பற்ற செயலை மேற்கொள்கின்ற படை வீரர்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்து தருவது நம் மகத்தான கடமை.
படை வீரர்களின் வாழ்க்கை, 'நம் இல்லத்தைப் பார்த்துக்கொள்ள நாடே அணிதிரண்டு நிற்கிறது' என்கிற நன்னம்பிக்கை ஒளிவீச, கொடி நாளுக்கு கொடுக்கும் நம் கொடையே அத்தாட்சி. அது அவர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு வகைகளில் பயன் தரும்.
கொடி நாளில் பெரும் தொகையை வசூலித்து தருகிற செயலில் தமிழ்நாடு எப்போதும் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. இந்த ஆண்டும் பெருமளவில் நிதி வழங்கி, அவர்தம் குடும்பத்தினருக்கு வணக்கத்தையும், நன்றியையும் காணிக்கையாக்கிட, உங்களுக்கு என் கோரிக்கையை வைக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- முன்னாள் படை வீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தோா்களிடம் இருந்து 13 மனுக்கள் பெறப்பட்டன.
- முன்னாள் படை வீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தோருக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் முகாம் நடைபெற்றது.
திருப்பூர் :
திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படை வீரா் நலத் துறை சாா்பில் படைவீரா் கொடி நாள் விழா, முன்னாள் படை வீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தோருக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் முகாம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் தலைமை வகித்தாா்.
இதில், தமிழக அரசு மற்றும் மத்திய முப்படை வீரா் வாரியத்தால் முன்னாள் படை வீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தோருக்கு வழங்கப்படும் பல்வேறு நலத் திட்ட உதவிகள் தொடா்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 2021ம் ஆண்டில் முன்னாள் படை வீரா் கொடி நாளுக்காக அரசால் ரூ.1.24 கோடி நிதி வசூலிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டதில், ரூ.1.37 கோடி நிதி வசூலிக்கப்பட்டது. அதேபோல, நிகழாண்டு ரூ.1.31 கோடி நிதி வசூலிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் முன்னாள் படை வீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தோா்களிடம் இருந்து 13 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து துறை அலுவலா்களையும் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெய்பீம் அறிவுறுத்தினாா்.
இந்த நிகழ்ச்சியில், திருப்பூா் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன், உதவி இயக்குநா் (முன்னாள் படை வீரா் நலன்) மணிவண்ணன், முன்னாள் படை வீரா் நல அலுவலக அமைப்பாளா் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
- கொடி நாள் வசூல் பணி தொடங்கப்பட்டுள்ளது
- நடப்பாண்டு ரூ.34.60 லட்சம் இலக்கு
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் கொடி நாள் வசூல் பணியை கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தொடக்கி வைத்தார். ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொடிநாள் வசூல் உண்டியலில் நிதியை அளித்து அவர் தெரிவித்தாவது:-
நமது தாயகத்தைக் காக்கும் முப்படைகளிலும் பணிகளில் ஈடுபட்டுள்ள படைவீரர்கள் மற்றும் படைப்பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ள முன்னாள் படைவீரர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் கெரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 7-ம் நாளன்று படைவீரர் கொடிநாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நாளன்று அரசால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கொடி நாள் நிதி வசூல் தொடக்கப்படுகிறது.
அதன் படி அரியலூர் மாவட்டத்தில் கடந்தாண்டு கொடிநாள் நிதி வசூல் இலக்கு ரூ.32,75,000 நிர்ணயிக்கப்பட்டது . ஆனால் அனைத்து துறை அலுவலர்களின் ஒத்து ழைப்போடு நிர்ணயித்த இலக்கைவிட கூடுதலாக ரூ.40,75,000 நிதி வசூலித்து சாதனையை எட்டியுள்ளது.
அதே போல நிகழாண்டு ரூ.34,60,000 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை போல கொடிநாள் நிதி வசூலில் அனைத்து றைகளின் ஒத்துழை ப்புடன் நிர்ணயி க்கப்பட்டுள்ள இலக்கைவிட கூடுதலாக வசூலித்து, சாதனை படைக்க வேண்டும் என்றார். முன்னதாக அவர், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு கல்வி உதவித்தொகை, கண்கண்ணாடி, திரும ணநிதியுதவி உள்ளிட்ட திட்டத்தின் கீழ் 29 நபருக்கு ரூ.5,61,000 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் படைவீரர் நல அலுவலக கண்காணி ப்பாளர் ம.கலையரசி காந்திமதி, முன்னாள் படைவீரர் நல அமைப்பாளர் சி.சடையன் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
- கடைக்காரர்கள் தாங்களாகவே முன்வந்து நிதி செலுத்தினர்
- மாணவர்கள், அரசு ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகம் சார்பில் நேற்று கொடி நாள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
ஊர்வலம் நாட்டறம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே இருந்து தொடங்கியது. ஊர்வலத்தை நாட்டறம்பள்ளிதாசில் தார் க.குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பூபதி கவுண்டர் தெரு, போலீஸ் ஸ்டேஷன் ரோடு, ஆர்.சி.எஸ். மெயின் ரோடு வழியாக சென்று தாலுகா அலுவலகத்தில் ஊர்வலம் முடிந்தது. ஊர்வலத்தின்போது பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகள், சாலையோரம் உள்ள கடைக்கா ரர்கள் தாங்களாகவே முன்வந்து கொடி நாள் நிதி செலுத்தினர்.
இந்த ஊர்வலத்தில் மண்டலதுணை தாசில்தார் அரிதாஸ், வருவாய் ஆய்வாளர்கள் அன்னலட்சுமி, கவுரி, பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை:
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் 7-ந் தேதியன்று, முப்படையினர் கொடி நாளை நாம் கடைப்பிடிக்கிறோம். இந்த நாளன்று நமது முப்படையினரின் தளர்வில்லாத துணிச்சல், தியாகம், தேசபக்தி ஆகியவற்றுக்கு நாம் பாராட்டுக்களை செலுத்துகிறோம். இவர்கள் தாம் நமது தேசத்தின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையின் உறுதியான தூண்களாக இருக்கின்றார்கள்.
அவர்களை கவுரவப்படுத்துவதில் நமக்கிருக்கும் ஒட்டுமொத்த பொறுப்பையும் படைவீரர்கள் கொடிநாள் நினைவூட்டுகிறது.
முப்படையினர் கொடி நாள் நிதியளிப்பில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணி வகித்து வருகிறது. மாநில அரசும் கூட, முன்னாள் படையினருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் சலுகைகள், விலக்குகள், இட ஒதுக்கீடுகள் ஆகியவற்றை கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் அளித்து வருகிறது. நாம் முப்படையினர் கொடிநாளைக் கடைப்பிடிக்கும் வேளையிலே, நமது பாதுகாப்புப் படையினர், மூத்த முன்னாள் ராணுவத்தார் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு ஆதரவாக இருப்பதில் நமது அர்ப்பணிப்பை நாம் மீள் உறுதி செய்வோம்.
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடிமகனும், முப்படையினர் கொடிநாளுக்குத் தாராளமாக நிதியளிக்க முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நாம் படையினரின் பால் நமது நன்றியறிதலை சொற்களில் மட்டுமல்ல, செயல்களிலும் கூட நமது ஆழமான மரியாதையையும், பாராட்டுதல்களையும் பிரதிபலிக்கச் செய்வோம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






