என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைத்தறி நெசவு"

    • பல்வேறு வடிவமைப்புடன் கூடிய போர்வைகள் தயாரிக்கப்படுகிறது.
    • கைத்தறி மூலம் சுதந்திர போராட்ட வீரர்களின் படங்களை போர்வையில் நெய்யப்பட்டது.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் கைத்தறி மூலம் தயாரிக்கப்படும் போர்வை உலக அளவில் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது.

    கைத்தறி மூலம் பல்வேறு வடிவமைப்புடன் கூடிய போர்வைகள் தயாரிக்கப்படுகிறது. கைத்தறி மூலம் காந்தி, கிரிக்கெட் வீரர் டோனி மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் படங்களை போர்வையில் நெய்யப்பட்டது.

    இந்நிலையில் சென்னிமலையின் பாரம்பரியத்தின் அடையாளமான கைத்தறி போர்வையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம், மேஜர் முகுந்த் வரதராஜனின் படமும் இணைந்து கைத்தறி நெசவாளர் அப்புசாமி என்பவரால் நெய்யப்பட்டது.

    இந்த போர்வையை சென்னிமலை ஒன்றிய தலைமை சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்தின் சார்பிலும், நெசவாளர்கள் அப்புசாமி இணைந்து நடிகர் சிவகார்த்திகேயனை நேரில் சந்தித்து கைத்தறி போர்வையை பரிசாக வழங்கினர். 

    • பயிற்சியானது 45 நாட்களுக்கு வழங்கப்பட உள்ளது.
    • தினசரி ரூ.300 வீதம் ஊக்கத்தொகை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளன.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் இந்திய அரசின் ஜவுளித்துறை மற்றும் சேலம் நெசவாளர் சேவை மையம், இணைந்து கைத்தறி நெசவு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியானது ஆகஸ்ட் மாதம் 8 ந்தேதி வரை 45 நாட்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியை நெசவாளர் சேவை மைய உதவி இயக்குனர் கார்த்திகேயன் துவக்கி வைத்தார். பயிற்சிக்கு 20 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு தினசரி ரூ.300 வீதம் ஊக்கத்தொகை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளன.

    நேற்று பயிற்சிக்கு வந்தவர்களுக்கு பயிற்சிக்கான கையேடுகளும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தியாகராயர் தொழிற்சங்க பொதுச் செயலாளர் கே.ஜி. நட்ராஜ் செய்திருந்தார்.

    • தீபாவளி பண்டிகையையொட்டி, கைத்தறி நெசவு ஆர்டர் அதிகரித்துள்ளது.
    • விற்பனை அதிகரிப்பால், இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு 10 சதவீதம் கூடுதலாக ஆர்டர் கிடைத்துள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் கைத்தறி நெசவு கூடங்கள் உள்ளன.இத்தொழிலை நம்பி நெசவு செய்பவர்கள், விற்பனையாளர்கள், என நேரடியாகவும், மறைமுகமாகவும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயன்பெறுகின்றனர்.

    தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி, கைத்தறி நெசவு ஆர்டர் அதிகரித்துள்ளது.

    இது குறித்து கோவை, திருப்பூர் மாவட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளன தலைவர் ஜெகநாதன் கூறியதாவது :-

    தீபாவளி பண்டிகைக்கு கடந்த ஆண்டு கூட்டுறவு சங்கங்களின் மூலம் 20 கோடி ரூபாய்க்கும், தனியார் மூலம் 30 கோடி ரூபாய்க்கும் ஆர்டர் கிடைத்தது. கூட்டுறவு சங்கங்களின் மூலம் வரும் ஆர்டர் வகைகள் அனைத்தும் கோ ஆப்டெக்ஸ் மூலம் விற்கப்படுகிறது. அங்கு தள்ளுபடியில் விற்பனை நடைபெறும் போது, அதன் விலை குறைவாக கிடைக்கும். இதனால் விற்பனை அதிகரிக்கும்.

    இதன்மூலம் எங்களுக்கு உற்பத்திக்கான ஆர்டர் அதிகமாக கிடைக்கும். தொடர்ந்து வேலை இருந்து கொண்டே இருக்கும். வருவாய் அதிகரிக்கும். தள்ளுபடி விற்பனை வரவேற்கத்தக்கது.

    தற்போது நூல் விலை குறைந்துள்ளது. ஒரு தரமான பட்டு சேலை 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ரூபாய்க்கு எடுக்கலாம். விலை குறைவாக கிடைப்பதால், ஏழைகள், சாதாரண நடுத்தர மக்கள் முதல் கல்லுாரி மாணவிகள் வரை அதிக அளவில் வாங்குகின்றனர். இதனால் விற்பனை அதிகரித்துள்ளது.

    விற்பனை அதிகரிப்பால், இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு 10 சதவீதம் கூடுதலாக ஆர்டர் கிடைத்துள்ளது. கோவை, திருப்பூரில், வெண்பட்டு, கோரா பேஷன், டை அண்டு டை, பியூர் காட்டன் உள்ளிட்ட வகை ஆடைகளை மக்கள் அதிகளவில் விரும்புகின்றனர்.இவ்வகை சேலைகள் பல டிசைன்களில் கிடைப்பதால் வசதி படைத்தவர் கூட வாங்கி உடுத்துகின்றனர். இவ்வாறு ஜெகநாதன் கூறினார்.

    ×