என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமுக நிர்வாகி பலி"

    • கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • அர்ஜுனன் உயிரிழந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்திருந்தார்.

    கோபி:

    அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக எழுச்சி பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று இரவு ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த நல்லகவுண்டன் பாளையம் பகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.

    இதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்துக்கு கோபி அருகே உள்ள கொண்டையம்பாளையத்தை சேர்ந்த அ.தி.மு.க தொண்டரான அர்ஜுனன் (43) என்பவரும் வந்திருந்தார். அவர் கூட்டம் நடந்த இடத்தின் அருகே உள்ள கோபி -சத்தியமங்கலம் மெயின் ரோட்டில் நின்றபடி எடப்பாடி பழனிசாமி பேச்சை ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார்.

    அப்போது அர்ஜுனன் திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அங்கு தயாராக இருந்த ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அர்ஜுனன் பரிதாபமாக இறந்தார்.

    மாரடைப்பு காரணமாக அவர் இறந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அர்ஜுனன் உயிரிழந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இறந்த அர்ஜுனன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சேலம் எடப்பாடியில் இருந்து கார் மூலமாக கோபிசெட்டிபாளையம் வந்தார். பின்னர் அவர் நேரடியாக கோபி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அர்ஜுனன் உடலுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

    பின்னர் அர்ஜுனன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி மாவட்ட கட்சி சார்பாக ரூ.10 லட்சத்திற்கான வரைவோலையை வழங்கினார். கட்சி தலைமை சார்பாக மேலும் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அறிவித்தார்.

    அப்போது முன்னாள் அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    சேலம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் அ.தி.மு.க. நிர்வாகி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 75). அ.தி.மு.க. அவைத் தலைவராக இருந்து வந்தார். காண்டிராக்ட் தொழிலும் செய்து வந்தார். நேற்று இவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    தீவட்டிப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது சேலத்தில் இருந்து தர்மபுரி நோக்கி சென்ற கார் ராஜகோபால் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் ராஜகோபால் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து காரை ஓட்டி வந்த ராஜனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    ×