என் மலர்
நீங்கள் தேடியது "செக்கச்சிவந்த வானம்"
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் செக்கச்சிவந்த வானம் படம் ரிலீசாகும் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. #CCV #ChekkaChivanthaVaanam
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘செக்கச்சிவந்த வானம்’. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ள இப்படத்தில், அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், அருண் விஜய், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது.
சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு, கடந்த ஜூன் மாதம் செர்பியாவில் நிறைவடைந்தது. தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
September 28 it is!#ChekkaChivanthaVaanam#CCV@MadrasTalkies_pic.twitter.com/WCIUFne6oR
— Lyca Productions (@LycaProductions) August 10, 2018
இந்நிலையில், இப்படம் செப்டம்பர் 28-ம் தேதி ரிலீசாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப் படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ‘நவாப்’ என்ற பெயரில் ரிலீசாக இருக்கிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் சிம்பு பற்றி பல்வேறு சர்ச்சைகள் வரும் நிலையில், படப்பிடிப்புக்கு குறித்த நேரத்திற்கு முன்னதாகவே வந்ததை பார்த்து ஆச்சரியமடைந்ததாக அரவிந்த்சாமி கூறியுள்ளார். #STR #Simbu
சிம்பு மணிரத்னம் இயக்கும் செக்கச்சிவந்த வானம் படத்தில் நடிக்கிறார் என்று செய்தி வந்ததுமே மணிரத்னத்தின் நிலை என்ன ஆகப்போகிறதோ என்ற ரீதியில் கிண்டல்கள் வந்தன. ஆனால் இத்தனை நாட்களாய் இருந்த சிம்புவுக்கு நேர் எதிரான சிம்புவை செக்கச்சிவந்த வானம் படப்பிடிப்பில் பார்த்து இருக்கிறார்கள்.
காலையில் படப்பிடிப்பு என்றால் மாலையில் தான் வருவார். திடீர் என்று படப்பிடிப்பை ரத்து செய்வார் என்று எல்லாம் சிம்புவை குறை சொன்ன நிலையில் சிம்புவின் ஒழுக்கம் பற்றி அரவிந்த்சாமி ஒரு பேட்டியில் விளக்கி உள்ளார்.

‘அவரைப் பற்றி நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன். அவரின் மற்ற படங்களைப் பற்றி எனக்கு தெரியாது. ஆனால் இந்தப் படத்துக்கு அவர் மிகவும் ஒழுக்கமாக இருக்கார். எங்கள் எல்லோருக்கும் முன்பே வந்து அமர்ந்திருப்பார். காலையில் ஆறு மணிக்கு படப்பிடிப்பு என்றால் நான் 5.40க்கு செல்வேன்.
ஆனால் அவர் ஐந்து மணிக்கே வந்து உட்கார்ந்துவிடுவார்’ என்று கூறி இருக்கிறார். இது சிம்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் எழுமின் பட விழாவில் சிம்பு பேசும் போது, இனி படப்பிடிப்பு தளத்துக்கு தாமதமாக வரமாட்டேன் என்று உறுதி அளிக்கிறேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #STR #Simbu #CCV






