என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊழல் வழக்குகள்"

    • பல்வேறு திட்டங்களை ஒதுக்கீடு செய்வதில் முன்னாள் வேளாண் மந்திரி முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
    • அப்போது அரசின் திட்டங்களை பணத்தை வாங்கிக் கொண்டு பயனாளிகளுக்கு ஒதுக்கியதாகக் கூறப்படுகிறது.

    பீஜிங்:

    சீனாவின் முன்னாள் வேளாண்மை மற்றும் கிராமப்புற விவகார மந்திரி டாங் ரெஞ்சியன் (63). இவர் தனது பதவிக் காலத்தில் பல்வேறு திட்டங்களை ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    அப்போது அரசின் திட்டங்களை பணத்தை வாங்கிக் கொண்டு பயனாளிகளுக்கு ஒதுக்கியதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பான வழக்கு ஜிலின் மாகாணம் சாங்சுன் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

    விசாரணை நிறைவடைந்த நிலையில் நலத்திட்டங்களை ஒதுக்குவதற்காக பயனாளிகளிடம் இருந்து சுமார் ரூ.336 கோடி வரை லஞ்சம் பெற்றது தெரிய வந்துள்ளது.

    இந்நிலையில், நாட்டையே உலுக்கிய இந்த ஊழல் வழக்கில் டாங் ரெஞ்சியனுக்கு கோர்ட் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

    மேலும் அந்த தொகையை அவரிடம் இருந்து கைப்பற்றி தேசிய கருவூலத்துக்கு மாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    தி.மு.க.வில் தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ள 22 பேர் மீதான ஊழல் வழக்குகளில் விரைவில் தீர்ப்பு வரும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். #TNMinister #CVShanmugam #DMKMLAs
    விழுப்புரம்:

    விழுப்புரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் விழுப்புரம் மந்தக்கரை திடலில் நடந்தது.

    இதில் அமைச்சர் சி.வி. சண்முகம் கலந்து கொண்டு பேசியதாவது:-

    எம்.ஜி.ஆர். உயிரோடு இருக்கின்ற வரையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியால் கோட்டைவாசலை மிதிக்க முடியவில்லை. அ.தி.மு.க. பிளவுபட்டதால் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. அதன்பிறகு ஜெயலலிதா கட்சியை ஒன்றிணைத்து ஆட்சியை பிடித்தார். எம்.ஜி.ஆர். உருவாக்கிய, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட இந்த இயக்கத்தை யாராலும் அழிக்கவும் முடியாது, அசைக்கவும் முடியாது.

    மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுக்கவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகின்றார். காவிரி, முல்லைப்பெரியாறு தற்போதைய மேகதாது வரை எதிர்த்து குரல் கொடுப்பது அ.தி.மு.க. மட்டுமே. அதேபோல் ராஜீவ்காந்தி கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்ய வேண்டி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது அ.தி.மு.க. தான்.

    எந்த சூழ்நிலையிலும் மத்திய அரசை எதிர்த்து தி.மு.க. குரல் கொடுத்ததும் இல்லை, தீர்மானம் நிறைவேற்றியதும் இல்லை.

    எப்படியாவது இந்த ஆட்சியை கவிழ்க்கலாம் என்று திட்டம் தீட்டுகிறார்கள். தற்போது முதல்-அமைச்சர் மீதே புகார் கூறுகிறார்கள். அண்ணா நகர் ரமேஷ், சாதிக்பாஷா மரணம் குறித்து மு.க.ஸ்டாலின் எப்போதாவது பேசியுள்ளாரா?, புதியதாக தலைமை செயலகம் கட்டியதில் ஊழல் நடைபெற்றுள்ளது என்று வழக்கு போட்டால் உடனடியாக அதற்கு தி.மு.க., கோர்ட்டில் தடை வாங்குகிறது.

    அதே நேரத்தில் அ.தி.மு.க. கொண்டு வரும் அனைத்து நல்ல திட்டங்களையும் எதிர்த்து தி.மு.க., கோர்ட்டில் வழக்கு தொடர்கிறது. அத்தனை வழக்குகளிலும் வெற்றி பெற்று மக்களுக்கு நல்ல முறையில் நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றோம்.

    எதற்கு எடுத்தாலும் அனைத்து அமைச்சர்களும் சிறை செல்வார்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். ஊழல் வழக்குகளை விசாரிப்பதற்காக சிறப்பு தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது தி.மு.க.வில் எம்.எல்.ஏ.க்களாக உள்ள 22 பேர் மீது நிலஅபகரிப்பு உள்பட ஊழல் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் தீர்ப்பு வரும், அப்போது யார் சிறைக்கு செல்வார்கள் என்று தெரியும்.

    விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டத்தை உருவாக்கியது நல்லதுதான். அப்போதுதான் இன்னும் சிறந்த நிர்வாகத்தை மக்களுக்கு தர முடியும். விழுப்புரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனை இருக்கிறது, அதனை போக்குகிற வகையில் கொள்ளிடம்- விழுப்புரம் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு வருகிற நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்க முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அமைச்சர் சி.வி. சண்முகம் பேசியது தொடர்பாக தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்முடியிடம் நிருபர்கள் கேட்டபோது, ‘‘கொடநாடு விவகாரம் தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் பழனிசாமி மீது கூறப்படும் குற்றச்சாட்டை திசைதிருப்புவதற்காக தி.மு.க.வினர் பற்றி அமைச்சர் இவ்வாறு பேசுகிறார்’’ என்றார்.  #TNMinister #CVShanmugam #DMKMLAs
    ×