search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "skating competition"

    • ஸ்கேட்டிங் போட்டிகள் அவிநாசி அருகேயுள்ள தனியாா் பள்ளியில் நடைபெற்றன.
    • காவல் ஆணையா் பிரவின்குமாா் அபிநபு தொடங்கி வைத்தாா்.

    திருப்பூர் : 

    திருப்பூா் மாவட்ட ரோலா் ஸ்போா்ட்ஸ் அசோசியேஷன், தமிழ்நாடு ஸ்பீடு ஸ்கேட்டிங் அசோசியேஷன், திருப்பூா் ரோல்ஸ்ப்ரோ அகாதெமி சாா்பில் ஸ்கேட்டிங் போட்டிகள் அவிநாசி அருகேயுள்ள தனியாா் பள்ளியில் நடைபெற்றன. 200 மீட்டா், 400 மீட்டா், 1000 மீட்டா் பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளை திருப்பூா் மாநகர காவல் ஆணையா் பிரவின்குமாா் அபிநபு தொடங்கி வைத்தாா்.இதில் 4 வயது முதல் 19 வயதுக்குள்பட்ட 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

    போட்டிகளை மாவட்ட ரோலா் ஸ்போா்ட்ஸ் அசோசியேஷன் மாவட்டச் செயலாளா் பிரகாஷ், தலைவா் தெய்வராஜ், துணைச்செயலாளா் ஜெயகுமாா் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

    அறக்கட்டளை நிா்வாக இயக்குநா் இந்திரா சுந்தர்ராஜம் கூறுகையில், மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் சென்னையில் விரைவில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனா் என்றாா்.

    • யோகா மற்றும் ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டிகள் லிட்டில் பிளவர் பள்ளியில் நடைபெற்றது.
    • விளையாட்டு போட்டியில் ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட யோகாசன சங்கம் சார்பில் யோகா மற்றும் ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டிகள் பேட்டை கோடீஸ்வரன் நகரில் உள்ள லிட்டில் பிளவர் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி சேர்மன் மரியசூசை தலைமை தாங்கினார். அமல் தாமஸ் முன்னிலை வகித்தார். அழகேசராஜா வரவேற்றார். பள்ளி முதல்வர் ரெனால்ட் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து யோகா மற்றும் ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டியில் ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

    போட்டிகளில் வெற்றி பெற்ற சுமார் 100 மாணவ-மாணவிகளுக்கு தேசிய இளைஞர் தின விருதுகள் மற்றும் சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட யோகாசன சங்கத்தின் அழகேச ராஜா செய்திருந்தார். முடிவில் சத்யா நன்றி கூறினார்.

    19வயதுக்குட்பட்டோருக்கான ரிங்க்-1 ஸ்கேட்டிங் போட்டியில் கலந்துகொண்டு முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்று பள்ளிக்குப் பெருமைசேர்த்துள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூர், காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக்சீனியர் செகண்டரி பள்ளியின் 12-ம் வகுப்பு மாணவன் சஞ்சய்ராஜ்குமார் தென்மண்டல சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையிலான 19வயதுக்குட்பட்டோருக்கான ரிங்க்-1 ஸ்கேட்டிங் போட்டியில் கலந்துகொண்டு முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்று பள்ளிக்குப் பெருமைசேர்த்துள்ளார்.

    தேசிய அளவில் சாதித்த மாணவன் சஞ்சய் ராஜ்குமாரைப் பள்ளியின்தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி, பள்ளியின் முதல்வர் பிரமோதினி, ஒருங்கிணைப்பாளர் மோகனா மற்றும் பள்ளியின்ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டினர்.

    • சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ஸ்கேடிங் விளையாட்டு போட்டியில் 25 பள்ளிகளில் இருந்து சுமார் 750-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர்.
    • வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் மணி அந்தோணி ராயப்பன், பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.

    வள்ளியூர்:

    சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ஸ்கேடிங் விளையாட்டு போட்டியில் 25 பள்ளிகளில் இருந்து சுமார் 750-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர். தெற்கு கள்ளிகுளம் ஓ.எல்.எஸ் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு முதல், 2 மற்றும் 3-ம் பரிசுகளை பெற்றனர். சாம் சந்தோஷ், டைலன், அஸ்வின், ஜெவின், டேனியல் முதல் பரிசையும், தர்சன், முகில் பாலன், பனிமைக்கிள் டோனி, டெடி 2-ம் பரிசையும், ஸ்ரீரா பின், நவின், மோசஸ், ரினோசன் 3-ம் பரிசையும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் மணி அந்தோணி ராயப்பன், பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • பல்லடம் அருகே ஊஞ்சபாளையத்தில் திருப்பூர் ஸ்கேட்டிங் அசோசியேன்மற்றும் தனியார் ஸ்கேட்டிங் அகாடமி சார்பில் திருப்பூர் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள் நடைபெற்றது.
    • 6 வயது முதல் 16 வயது வரையிலான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே ஊஞ்சபாளையத்தில் திருப்பூர் ஸ்கேட்டிங் அசோசியேன்மற்றும் தனியார் ஸ்கேட்டிங் அகாடமி சார்பில் திருப்பூர் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள் நடைபெற்றது. இதில் பல்லடம், திருப்பூர், தாராபுரம், காங்கேயம், உடுமலை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் 6 வயது முதல் 16 வயது வரையிலான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் பதக்கங்களை அணிவித்து பாராட்டினார்.

    ×