search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "South Kallikulam"

    • வள்ளியூர் அருகே உள்ள தெற்குகள்ளிகுளம் புனித அந்தோணியார் ஆலயத்திருவிழா கடந்த 8-ந் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • நள்ளிரவு 12 மணிக்கு புனித அந்தோணியாரின் தேர்ப்பவனி தொடங்கியது.

    வள்ளியூர்:

    வள்ளியூர் அருகே உள்ள தெற்குகள்ளிகுளம் புனித அந்தோணியார் ஆலயத்திருவிழா கடந்த 8-ந் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவில் தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த் புனித கொடியேற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து அருட்தந்தை ஒய்.தேவ ராஜன் அடிகளார் தலை மையில் மாலை ஆராதனை மற்றும் நற்கருணை ஆசீர்வாதம் நடைபெற்றது.

    குருவானவர் பீட்டர் பாஸ்டியான், ஓ.எல்.எஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் அசன உணவு வழங்கப்பட்டது.

    திருவிழா தொ டர்ந்து 10 நாட்கள் கொண் டாடப்பட்டது. திருவிழா நாட்களில் தினமும் காலை திருப்பலியும் இரவு மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெற்றது. 8-ம் திருவிழா அதிகாலை கோலப்போட்டி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு திருப்பலியும் பின்னர் விளை யாட்டுப் போட்டிகளும் நடைபெற்றது.

    16-ந் தேதி 9-ம் திருவிழா கொண்டாடப்பட்டது. அன்று மாலை அருட்தந்தை ஒய்.தேவராஜன் அடிகளார் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடைபெற்றது. கிழவனேரி பங்கு தந்தை ப்ராக்ரஸ் மறையுரை வழங்கினார். சிறப்பு ஆராதனையில் பணகுடி பங்குதந்தை வளன், தெற்குகள்ளிகுளம் அதிசய பனிமாதா பேராலய பங்கு தந்தை ஜெரால்டு எஸ்.ரவி, உதவி பங்கு தந்தை சிபுஜோசப் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு புனித அந்தோணியாரின் தேர்ப்பவனி தொடங்கியது. முன்னதாக தேர்களை பங்கு தந்தை ஜெரால்டு எஸ்.ரவி ஜெபம் செய்து அர்ச்சித்தார். தேர்ப்பவனி கோவிலைச் சுற்றியுள்ள ரதவீதிகளில் வலம் வந்து அதிகாலை 5 மணிக்கு நிலைக்கு வந்து சேர்ந்தது. தேர்ப்பவனியின் போது பக்தர்கள் உப்பு, மிளகு, பூமாலை காணிக்கை செலுத்தி வழிபட்டனர். நேற்று 10-ம் திருவிழா கொண்டாடப்பட்டது. அதிகாலை 5.30 மணிக்கு அருட்தந்தை நெல்சன் பால்ராஜ் அடிகளார் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னர் பகல் 11 மணிக்கு புனித அந்தோணியாரின் தேர்ப்பவனி நடைபெற்றது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த் தலைமையில் பங்கு தந்தை ஜெரால்டு எஸ்.ரவி, உதவி பங்கு தந்தை சிபுஜோசப் மற்றும் அருட்சகோதரிகள், பங்கு மக்கள் செய்திருந்தனர்.

    • சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ஸ்கேடிங் விளையாட்டு போட்டியில் 25 பள்ளிகளில் இருந்து சுமார் 750-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர்.
    • வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் மணி அந்தோணி ராயப்பன், பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.

    வள்ளியூர்:

    சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ஸ்கேடிங் விளையாட்டு போட்டியில் 25 பள்ளிகளில் இருந்து சுமார் 750-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர். தெற்கு கள்ளிகுளம் ஓ.எல்.எஸ் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு முதல், 2 மற்றும் 3-ம் பரிசுகளை பெற்றனர். சாம் சந்தோஷ், டைலன், அஸ்வின், ஜெவின், டேனியல் முதல் பரிசையும், தர்சன், முகில் பாலன், பனிமைக்கிள் டோனி, டெடி 2-ம் பரிசையும், ஸ்ரீரா பின், நவின், மோசஸ், ரினோசன் 3-ம் பரிசையும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் மணி அந்தோணி ராயப்பன், பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • புனித அலோசியஸ் கலையரங்கத்தில் வைத்து ஆண்டு விழா நிகழ்ச்சிகள் மாலையில் நடந்தது.
    • 9,11-ம் வகுப்பு மாணவிகள் நடனம் ஆடினர். தலைமையாசிரியர் வேளாங்கண்ணி செல்வி ஆண்டறிக்கை வாசித்தார்.

    வள்ளியூர்:

    தெற்கு கள்ளிகுளம் புனித அலோசி யஸ் மேல்நிலைப்பள்ளியில் 66-வது விளையாட்டு விழா பள்ளி மைதானத்தில் நடந்தது. உதவி பங்குதந்தை ஒலிம்பிக் தீபம் ஏற்றி விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

    புனித அலோசியஸ் கலையரங்கத்தில் வைத்து ஆண்டு விழா நிகழ்ச்சிகள் மாைலயில் நடந்தது. உதவி தலைமையாசிரியர் பெர்டினான்ட் மோரிஸ் வரவேற்று பேசினார். 9,11-ம் வகுப்பு மாணவிகள் நடனம் ஆடினர். தலைமையாசிரியர் வேளாங்கண்ணி செல்வி ஆண்டறிக்கை வாசித்தார், வள்ளியூர் டி.ஜே.ஆர். கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் தேவேந்திரன் விளையாட்டு பரிசு வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

    தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா பேராலய தர்மகர்த்தா டாக்டர் ஜெபஸ்டின் ஆனந்த் மற்றும் வள்ளியூர் டி.டி.என் கல்விக்குழுமம் உரிமையாளர் டி.டி.என்.லாரன்ஸ் கல்வி பரிசு வழங்கி சிறப்புரை ஆற்றினார். முனைவர் ஜெரால்டு ரவி ஆசியுரை வழங்கினார். உடற்கல்வி ஆசிரியர் அலெக்ஸ் ரெனோ நன்றி கூறினார்.

    • பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணி சாமி தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடைபெற்றதது.
    • திரளான பக்தர்கள் பங்கேற்று உப்பு, மிளகு காணிக்கை செலுத்தி வழிபட்டனர்.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா அலங்கார தேர் பவனி நடைபெற்றது.

    கடந்த 4-ந்தேதி 9-ம் திருவிழா கொண்டாடப் பட்டது. மாலை 6 மணிக்கு இரக்கத்தின் ஆண்டவர் கெபிதிறப்பு விழா நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணி சாமி தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடைபெற்றதது.

    இரவு 10 மணிக்கு மலை யாளத்தில் திருப்பலியும் அதையடுத்து வானவேடிக்கையும் நடைபெற்றது.இரவு 12 மணிக்கு திருப்பலியும், அதனைத் தொடர்ந்து அதிசய பனிமாதா அன்னையின் அலங்கார தேர்ப்பவனி நடைபெற்றது.

    இப்பவனியில் திரளான பக்தர்கள் பங்கேற்று உப்பு, மிளகு காணிக்கை செலுத்தி வழிபட்டனர். நேற்று 10-ம் திருவிழாவில் அதிகாலை 5.15 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணி சாமி தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடை–பெற்றது. மாலை 3 மணிக்கு அன்னையின் தேர்ப்பவனியும் மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீர்வாதமும் நடை–பெற்று திருவிழா நிறைவு அடைந்தது. இன்று சனிக்கிழமை மாலை6.30 மணிக்கு அன்னையின் திருச்சுரூப பவனி திருபலி முதல்சனி வழிபாடுகளும் நடைபெறுகிறது.

    திருவிழா ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த், பங்குதந்தை ஜெரால்டு ரவி, உதவி பங்கு தந்தை சிபு ஜோசப் மற்றும் பங்கு மக்கள் செய்துள்ளனர்.

    ×