search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "seydunganallur"

    • பேராசிரியர் கற்பகம் வாழை மூலம் தயாரிக்கப்படும் மதிப்பூட்டிய பொருட்கள் சந்தைபடுத்துதல் பற்றி விரிவாக கூறினார்.
    • வாழை சாகுபடிக்கான காணொலி காட்சிகள் காண்பிக்கப்பட்டன.

    செய்துங்கநல்லூர்:

    ஸ்ரீவைகுண்டம் வட்டாரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் அட்மா திட்டத்தின் மூலம் தோட்டக்கலைத்துறை சார்பில் ஸ்ரீவைகுண்டம் வட்டார விவசாயிகளை மாநில அளவிலான கல்வி கண்டுநர் சுற்றுலா தோட்டக்கலை உதவி இயக்குநர் செல்வபிரபு தலைமையில் வாழை சாகுபடி மற்றும் மதிப்பு கூட்டுதல் என்ற தலைப்பில் திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    இக்கண்டுநர் சுற்றுலாவில் முதலாவதாக தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் விரிவாக்க பேராசிரியர் கற்பகம் ஆராய்ச்சி மையத்தின் நோக்கம், செயல்பாடுகள், வாழை சாகுபடியிலுள்ள நவீன தொழில்நுட்பங்கள், வாழை மூலம் தயாரிக்கப்படும் மதிப்பூட்டிய பொருட்கள் சந்தைபடுத்துதல் பற்றி விரிவாக கூறினார்.

    அடுத்தபடியாக வாழை சாகுபடி மற்றும் மதிப்பு கூட்டுதல் பற்றி சிவா கூறுகையில், வாழை பழத்தின் நன்மைகள் வாழை இலையின் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். விவசாயிகள் பயன்பெறும் வகையில் வாழை சாகுபடிக்கான காணொலி காட்சிகள் காண்பிக்கப்பட்டன. இதனைக் கண்டு விவசாயிகள் தங்களது சந்தேகங்களை கேட்டறிந்தனர்.

    முடிவில் வாழை செயலாக்க மையத்தில் விவசாயிகளுக்கு வாழை பழத்திலிருந்து தயாரிக்கப்படும் மதிப்பூட்டப்பட்ட பொருளான பனானா சாக்லேட் செயல் விளக்கமாக விவசாயிகளுக்கு செய்து காண்பிக்கப்பட்டது. இதற்கான செய்முறை விளக்கத்தை ரவிச்சாமி விவசாயிகளுக்கு எடுத்து ரைத்தார்.

    சுற்றுலாவில் கலந்து கொண்ட விவசாயிகள் வாழை சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் பற்றி விரிவாக தெரிந்து கொண்டதாக கூறி ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர்களுக்கு நன்றி கூறினர். இச்சுற்றுலாவிற்கான ஏற்பாடுகளை உதவி தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் அட்மா அலுவலர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

    • செய்துங்கநல்லூரில் பயிர்கழிவு மேலாண்மை குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடந்தது.
    • வாகைகுளம் வேளாண் அறிவியல் மைய பொருட்சிறப்பறிஞர் முருகன் பயிர் கழிவு மேலாண்மையின் முக்கியத்துவம் மற்றும் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைப்பட்டது

    செய்துங்கநல்லூர்:

    செய்துங்கநல்லூரில் பயிர்கழிவு மேலாண்மை குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடந்தது.

    கருங்குளம் வட்டார வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் மாநில விரிவாக்க திட்டங்கள் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமமான செய்துங்கநல்லூரில் பயிர்கழிவு மேலாண்மை குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் கருங்குளம் வேளாண்மை உதவி இயக்குனர் இசக்கியப்பன் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார். வாகைகுளம் வேளாண் அறிவியல் மைய பொருட்சிறப்பறிஞர் முருகன் பயிர் கழிவு மேலாண்மையின் முக்கியத்துவம் மற்றும் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி மேலாண்மை அலுவலர் ரகுநாத் மற்றும் அட்மா தொழில்நுட்ப மேலாளர்கள் மகேஸ்வரி, முத்துசங்கரி ஆகியோர் செய்திருந்தனர். பயிற்சிக்கு செய்துங்கநல்லூர், விட்டிலாபுரம் கோவில்பத்து கிராமத்தைச் சேர்ந்த 40 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • வெப்பச்சலனம் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மாலை பல்வேறு இடங்களில் மழை பெய்தது.
    • மின்னல் தாக்கி சரவணசெல்வி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    செய்துங்கநல்லூர்:

    வெப்பச்சலனம் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மாலை பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சங்கம்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி சரவணசெல்வி (வயது 40). அந்தப்பகுதியில் இவர்ளுக்கு சொந்தமான நிலத்தில் பருத்தி பயிரிட்டுள்ளனர்.

    கடந்த சில நாட்களாக பருத்தி அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று மாலை சரவணசெல்வி பருத்தி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அதில் மின்னல் தாக்கி சரவணசெல்வி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர், கருங்குளம், ராமானுஜர் புதூர், சேரகுளம், காரசேரி, நாட்டார்குளம் உள்பட பல்வேறு பகுதியில் திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ள நீர் ஓடியது.

    செய்துங்கநல்லூரில் புதன்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தை மிகவும் சிறப்பு பெற்றது. இந்த சந்தையில் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தங்களது பொருட்களை வியாபாரம் செய்ய கொண்டு வருவார்கள். அதே போல் செய்துங்கநல்லூரைச் சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் இந்த சந்தையில் பொருட்கள் வாங்கிச் செல்வார்கள்.

    திடீரென பெய்த மழையால் இந்த வார சந்தை வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. தெருச்சாக்கடைகள் அனைத்தும் வாரச்சந்தையில் புகுந்ததால் வியாபாரிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். சந்தைக்கு வந்த பொதுமக்கள் மழையால் ஆங்காங்கே ஒதுங்கி நின்றனர்.

    சாயர்புரத்தை சுற்றியுள்ள முள்ளன்விளை , புளியநகர், செபத்தையாபுரம், நடுவைகுறிச்சி, சுப்பிரமணியபுரம், நந்தகோபாலபுரம் ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சமூக நீதி மாணவர் இயக்கம், மனித நேய மக்கள் கட்சி இணைந்து செய்துங்கநல்லூரில் கைப்பந்து போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் 8 அணியினர் பங்கேற்றனர்.
    செய்துங்கநல்லூர்:

    தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சமூக நீதி மாணவர் இயக்கம், மனித நேய மக்கள் கட்சி இணைந்து செய்துங்கநல்லூரில் கைப்பந்து போட்டி நடத்தப்பட்டது. த.மு.மு.க ஒன்றிய தலைவர் ஒலிபிக் மீரான் தலைமை வகித்தார். மாவட்ட வர்த்தக அணி செயலாளர் இம்ரான்கான், சமூக நீதி மாணவர் இயக்க மாவட்ட செயலாளர் அசார், த.மு.மு.க கிளை தலைவர் கிர்ஷாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியில் 8 அணியினர் பங்கேற்றனர்.

    இறுதி போட்டியில் என்.எஸ்.கே. அணியினரும், எஸ்.டி.என்.ஆர் அணியினரும் மோதினர். போட்டி நடுவராக மாஹீன், ஆதில் ஆகியோர் பணியாற்றினார். இதில் 2க்கு 1 என்ற கணக்கில் என்.எஸ்.கே அணி வெற்றி பெற்றது. 3-வது பரிசை டி.எம்.எம்.கே அணி பெற்றது.

    போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. முதல் பரிசை த.மு.மு.க கிளையும், இரண்டாவது பரிசை கொம்பையா பாண்டியனும், மூன்றாவது பரிசை ராஜ்பாண்டியனும் வழங்கினர். நிகழ்ச்சியில் மாநில அமைப்பு செயலாளர் உஸ்மான்கான், பா.ம.க. மாநில துணை தலைவர் கசாலி, தோணி அப்துல் காதர், த.மு.மு.க மாவட்ட தலைவர் ஆசாத், ம.ம.க மாவட்ட செயலாளர் மோத்தி, மாவட்ட செயற்குழு காஜா முகைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை பிரகான், ஹாரிஸ், நிய முத்துல்லா, பைசல்சமீர், ஆமீர், செய்யது, இம்ரான், அபுஹீரைரா முஸ்தாக், போத்திஸ் தமீம், ஜாவித், அப்சர், முசரப் ஜலால், ரில்வான், உளவஸ், யூசுப் உள்பட பலர் செய்திருந்தனர். #tamilnews
    செய்துங்கநல்லூரில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்தது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செய்துங்கநல்லூர்:

    செய்துங்கநல்லூர் அருகே உள்ள சந்தையடியூர் வேலன் காட்டான் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது40). டிரைவர். இவரது மனைவி ஆனந்த ஈஸ்வரி (36). இவர் நர்சிங் படித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவர்களுக்கு பூஜா (4) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த 4-ந்தேதி ஆனந்த ஈஸ்வரியை பூச்சி கடித்ததாக கூறப்படுகிறது. 

    இதையடுத்து அவர் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இதையடுத்து அவர் கடந்த 6-ந்தேதி வீடு திரும்பினார். கடந்த 7-ந்தேதி மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரது தந்தை பெரியசாமி, ஆனந்த ஈஸ்வரியை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து செய்துங்க நல்லூர் போலீசில் பெரியசாமி புகார் செய்தார். புகாரில் அவர் தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதால் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என கூறியிருந்தார்.

    அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஆனந்த ஈஸ்வரிக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் தூத்துக்குடி ஆர்.டி.ஓ. தலைமையில் விசாரணை நடைபெறுகிறது.
    ×