என் மலர்
நீங்கள் தேடியது "salem collector rohini"
சேலம்:
சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு ரூ16.50 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை கலெக்டர் ரோகிணி நேற்று அனுப்பி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இதுவரை ரூ. 91.90 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மறுசீரமைப்பு பணிக்கு பொதுமக்கள், நிறுவனங்கள், தன்னார்வலர்கள் நிவாரணப் பொருட்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தரை தளத்தில் அமைக்கப்பட்டுள்ள நிவாரணப் பொருட்கள் பெறும் மேஜையில் வழங்கலாம்.
மேலும் ரொக்கப்பணம் மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்க விரும்புவோர் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக பேரிடர் மேலாண்மை தனி வட்டாட்சியர் ராஜேஸ் குமாரின் செல்போன் எண்ணிற்கும் 97901-86569 மாவட்ட கலெக்டர் அலுவலக முதல் தளத்தில் அறை எண்.132-ல் இயங்கி வரும் பேரிடர் மேலாண்மை பிரிவில் உள்ள 0427-2452202 தொலைபேசி எண்ணிற்கும் தொடர்பு கொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கலாம்.
வங்கி இணைய சேவை அல்லது கடன் அட்டை, பற்று அட்டையின் மூலமாக இணையதளம் வழியாக செலுத்தி ரசீதை பெற்றுக் கொள்ளலாம். பொதுமக்கள் தங்களது பங்களிப்புகளை குறுக்கு கோடிட்ட காசோலை அல்லது வங்கி வரைவோலை மூலமாக அரசு துணை செயலாளர் மற்றும் பொருளாளர், முதலமைச்சர் பொது நிவாரண நிதி, நிதித்துறை, தமிழ்நாடு அரசு, தலைமைச்செயலகம், சென்னை 600 009, என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சேலம் மாநகராட்சி சார்பில் நேற்று 2-ம் கட்டமாக ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான பொருட்ளை மாநகராட்சி கமிஷனர் சதீஷ் அனுப்பி வைத்தார். ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல் கட்டமாக ரூ.3 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பிலான பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டது. #gajacyclone #salemcollectorrohini #relief
சேலம்-சென்னை 8 வழி பசுமை விரைவு சாலைக்கு நிலம் வழங்கிய 3 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி இன்று வழங்கினார். அதே இடத்தில் தமிழக அரசின் சார்பில் பசுமை வீடுகள் கட்டி தரப்படும் என்றும் அவர் பயனாளிகளிடம் உறுதியளித்தார். பின்னர் கலெக்டர் ரோகிணி நிருபர்களிடம் கூறியதாவது:-
சேலம்-சென்னை 8 வழி சாலை அமைப்பது தொடர்பாக விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. பாதிப்பில்லாமல் அவர்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. அந்த நிலத்தில் மரங்கள், வீடுகள், மாட்டுக் கொட்டகைகள், ஆழ்துளை கிணறுகள் ஆகியவை இருந்தால் அதற்கேற்றவாறு இழப்பீடு வழங்கப்படும். சேலம் மாவட்டத்தில் பசுமை வழி சாலை 36.3 கிலோ மீட்டர் தூரம் அமைகிறது. இதற்காக 186 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. இதில் 46 ஹெக்டேர் அரசு நிலமாகும். இதுவரை 18 கிலோ மீட்டர் தூரம் நில அளவீடு பணி நிறைவு பெற்றுள்ளது.
இந்த பணி விவசாயிகளின் ஒத்துழைப்புடன் நடந்துள்ளது. சேலம் மாவட்டத்தில், மொத்தம் 853 நிலப்பட்டாதாரர்கள் உள்ளனர். ஒருசிலர் அதிக இழப்பீடு வேண்டும் என்று கேட்டுள்ளனர். ஒரு ஹெக்டேருக்கு 21.5 லட்சம் முதல் அதிகபட்சமாக 9.04 கோடி வரை இழப்பீடு வழங்க வாய்ப்பு உள்ளது. தமிழக முதல்-அமைச்சர் நிலம் வழங்கியவர்களுக்கு, அதிக இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார். அடிப்படை சந்தை மதிப்பில் நகர்ப்புறங்களில், குறைந்தபட்சம் 2 மடங்கும், அதிகபட்சம் 2½ மடங்கு முதல் 4 மடங்கு வரை இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு தென்னை மரத்திற்கு 50,000 இழப்பீடு வழங்க வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.






