search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.91.9 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு- கலெக்டர் ரோகிணி பேட்டி
    X

    சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.91.9 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு- கலெக்டர் ரோகிணி பேட்டி

    சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இதுவரை ரூ. 91.90 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார். #gajacyclone #salemcollectorrohini #relief

    சேலம்:

    சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு ரூ16.50 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை கலெக்டர் ரோகிணி நேற்று அனுப்பி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இதுவரை ரூ. 91.90 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மறுசீரமைப்பு பணிக்கு பொதுமக்கள், நிறுவனங்கள், தன்னார்வலர்கள் நிவாரணப் பொருட்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தரை தளத்தில் அமைக்கப்பட்டுள்ள நிவாரணப் பொருட்கள் பெறும் மேஜையில் வழங்கலாம்.

    மேலும் ரொக்கப்பணம் மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்க விரும்புவோர் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக பேரிடர் மேலாண்மை தனி வட்டாட்சியர் ராஜேஸ் குமாரின் செல்போன் எண்ணிற்கும் 97901-86569 மாவட்ட கலெக்டர் அலுவலக முதல் தளத்தில் அறை எண்.132-ல் இயங்கி வரும் பேரிடர் மேலாண்மை பிரிவில் உள்ள 0427-2452202 தொலைபேசி எண்ணிற்கும் தொடர்பு கொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கலாம்.

    வங்கி இணைய சேவை அல்லது கடன் அட்டை, பற்று அட்டையின் மூலமாக இணையதளம் வழியாக செலுத்தி ரசீதை பெற்றுக் கொள்ளலாம். பொதுமக்கள் தங்களது பங்களிப்புகளை குறுக்கு கோடிட்ட காசோலை அல்லது வங்கி வரைவோலை மூலமாக அரசு துணை செயலாளர் மற்றும் பொருளாளர், முதலமைச்சர் பொது நிவாரண நிதி, நிதித்துறை, தமிழ்நாடு அரசு, தலைமைச்செயலகம், சென்னை 600 009, என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    சேலம் மாநகராட்சி சார்பில் நேற்று 2-ம் கட்டமாக ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான பொருட்ளை மாநகராட்சி கமி‌ஷனர் சதீஷ் அனுப்பி வைத்தார். ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல் கட்டமாக ரூ.3 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பிலான பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டது. #gajacyclone #salemcollectorrohini #relief

    Next Story
    ×