என் மலர்

  நீங்கள் தேடியது "sabarimalai issue"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கேரளாவின் கலாச்சாரத்தை அவமதிக்க இடதுசாரி அரசு எப்படி முயற்சி செய்கிறது என்பதற்கு சபரிமலை விவகாரமே உதாரணமாக விளங்குகிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். #PMModi #Sabarimalaissue #KeralaLeftgovt
  திருவனந்தபுரம்:

  கேரள மாநிலம் கொச்சியில் அமைந்துள்ள பிபிசி நிறுவன விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று கேரளா வந்தார். அதன்பின்னர், திருச்சூரில் பா.ஜ.க இளைஞரணியினர் மத்தியில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

  கேரள கலாச்சாரத்தை அவமதிக்க இடதுசாரி அரசு எப்படி முயற்சி செய்கிறது என்பதற்கு சபரிமலை விவகாரமே உதாரணமாக விளங்குகிறது.

  சபரிமலை விவகாரம் ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் ஈர்த்தது. கேரள மாநிலத்தின் கலாச்சாரத்தை அழிக்க இடதுசாரி அரசு எப்படியெல்லாம் முயற்சி செய்தது என்பதை இந்திய மக்கள் அறிவார்கள். இடதுசாரி அரசு மாநிலத்தின் கலாச்சாரத்தை சிதைப்பது ஏன்? துரதிஷ்டவசமாக கேரளாவின் பண்பாடும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இவையனைத்து மாநிலத்தில் ஆட்சி செய்யும் கம்யூனிஸ்ட் அரசால் ஏற்பட்டது.  காங்கிரசும், இடதுசாரிகளும் ஜனநாயகம் பற்றி பேசுவது மிகவும் வேடிக்கையானது. எதிர்க்கட்சிகள் என்னை எப்படி வேண்டுமென்றாலும் தாக்கி பேசலாம், ஆனால் அவர்களால் விவசாயிகளை தவறாக வழிநடத்த முடியாது. இளைஞர்களுக்கான வாய்ப்புகளில் எதிர்க்கட்சிகள் இடையூறு ஏற்படுத்தக் கூடாது.

  சபரிமலை விவகாரத்தில் கேரளாவிலும், டெல்லியிலும் காங்கிரஸ் முரண்பட்ட நிலைபாட்டில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி அரசில் விஞ்ஞானி நம்பி நாராயணனை அரசியல் ஆதாயத்துக்காக பொய்வழக்கில் சிக்க வைத்தனர். அரசியல் ஆதாயத்துக்கு தேச நலனை சேதப்படுத்தியதுடன் தேசப்பற்றுமிக்க விஞ்ஞானிக்கும் தொல்லை தந்தனர். வலிமையான இந்தியாவை உருவாக்க உழைக்கும் ஒவ்வொருவரையும் நாங்கள் மதிக்கிறோம் என தெரிவித்துள்ளார். #PMModi #Sabarimalaissue #KeralaLeftgovt
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கேரளாவில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து முதல்வர் பினராயி விஜயனிடம் அறிக்கை கேட்ட ஆளுநர் சதாசிவம், மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என அறிவுறுத்தினார். #Sabarimalai #KeralaShutdown #Sathasivam #PinarayiVijayan
  திருவனந்தபுரம்:

  சபரிமலை ஐயப்பன் கோவிலில் இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகின்றன. 
   
  உச்ச நீதிமன்ற உத்தரவிற்குப் பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டபோது, 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் பலர், சபரிமலைக்கு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், பக்தர்களின் கடும் எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக அவர்களால் செல்ல முடியவில்லை. 

  இதற்கிடையே, நேற்று அதிகாலை கேரளாவைச் சேர்ந்த 50 வயதுக்குட்பட்ட 2 பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.  சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது.

  இதுதொடர்பாக, கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்தால் பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. முக்கிய சாலைகள் வாகன நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. மாநிலம் முழுவதும் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. சுமார் 60க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் மீது தாக்குதல் கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.  கேரளாவில் வன்முறையில் ஈடுபட்ட 250க்கும் மேற்பட்டோரை மாநில போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், 300க்கு மேற்பட்டவர்களை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

  இந்நிலையில், கேரள மாநில முதல் மந்திரி பினராயி விஜயனிடம் சட்டம், ஒழுங்கு தொடர்பாக அறிக்கை அளிக்க வேண்டும் என ஆளுநர் சதாசிவம் உத்தரவிட்டு உள்ளார்.

  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர் போராட்டம் காரணமாக சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன. எனவே, அனைத்து தரப்பு மக்களும் அமைதியாக இருப்பதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். #Sabarimalai #KeralaShutdown #Sathasivam #PinarayiVijayan
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள சட்டப்பேரவை தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் ஒத்திவைக்கப்பட்டது. #KeralaAssemblySession #SabarimalaTempleIssue
  திருவனந்தபுரம் :

  கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. அங்கு தற்போது மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு உள்ள நிலையில் இந்து அமைப்புகளின் போராட்டத்தை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
   
  அதன்படி பம்பை, நிலக்கல் மற்றும் சன்னிதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளதுடன், பக்தர்கள் அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே சபரிமலையில் அனுமதிக்கப்படுகின்றனர். போலீசாரின் இத்தகைய கெடுபிடிகளுக்கு கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

  கேரள சட்டசபை கூட்டத்தொடர் தற்போது நடந்து வரும் நிலையில் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் சட்டசபையில் எழுப்பி அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை கடந்த இரு தினங்களாக ஒத்திவைக்கப்பட்டது.  இந்நிலையில், 3-வது நாளாக இன்றும் கேரள சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

  சபரிமலை கோவில் விவகாரம் குறித்து அவையில் விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் தலைமையிலான யூடிஎப் கூட்டணி எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

  அவை நடவடிக்கைகளை ரத்து செய்து விட்டு ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து சபரிமலை விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், சபாநாயகர், உறுப்பினர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை.

  அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, சபரிமலையில் பக்தர்கள் நுழைவதை தடுக்கும்வகையில் பாஜகவும், தற்போது ஆட்சியில் உள்ள சிபிஐ அரசும் மறைமுகமாக கூட்டு சேர்ந்துள்ளன என கடுமையாக குற்றம் சாட்டினார். 

  இதைத்தொடர்ந்து அங்கு கூச்சல் குழப்பம் நிலவியதால் சபாநாயகர் அவையை மூன்றாவது நாளாக ஒத்திவைத்தார். #KeralaAssemblySession #SabarimalaTempleIssue 
  ×