search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rice shop"

    • கடையின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு இருந்தது.
    • ரொக்கம் ரூ.49 ஆயிரம் திருடப்பட்டிருந்தது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரது மகன் வேணுகோபால்( வயது 37). இவர் பல்லடம் - பூமலூர் ரோட்டில் அரிசி கடை வைத்து நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு கடையை பூட்டிவிட்டு, வீடு சென்ற அவர் வழக்கம்போல நேற்று காலை கடையை திறக்க வந்த போது, கடையின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு இருந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடையின் ஷட்டரைத் திறந்து உள்ளே சென்று பார்த்த போது, அங்கிருந்த கல்லாப்பெட்டி பூட்டை உடைத்து அதில் வைத்திருந்த ரொக்கம் ரூ.49 ஆயிரம் திருடப்பட்டிருந்தது.

    இந்த திருட்டு குறித்து அவர் பல்லடம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • இரவு வியாபாரத்தை முடித்து கொண்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் நல்லூர் அடுத்த அமராவதிபாளையம் கருமாங்காடு தோட்டத்தை சேர்ந்தவர் முத்துக்குமார்(வயது 39). இவர் அப்பகுதியில் அரிசி கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு வியாபாரத்தை முடித்து கொண்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.மறுநாள் காலை கடையை திறப்பதற்காக வந்த போது கடையின் பூட்டு உடைந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் .பின்னர் உள்ளே சென்று பார்த்த போது அங்கு கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ. 60 ஆயிரம் பணம், மற்றும் செல்போன் திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துக்குமார் நல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அதே பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் டீ மாஸ்டராக வேலை செய்து வரும் திண்டுக்கல், வேடச்சந்தூரை சேர்ந்த குமார் (20) என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    திருவொற்றியூரில் அரிசி கடையில் ரூ.25 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர், மார்க்கெட் பகுதியில் அரிசி கடை நடத்தி வருபவர் காமாட்சி. திருவொற்றியூர் நாடார் உறவின் முறை சங்க செயலாளராக உள்ளார்.

    நேற்று இரவு அவர் வியாபாரம் முடிந்ததும் அரிசி கடையை பூட்டிவிட்டு சென்றார். இன்று காலை கடையை திறந்த போது பணப் பெட்டியில் இருந்த ரூ.25 ஆயிரத்தை காணவில்லை.

    மேலும் சுவற்றில் இருந்த வெப்பக்காற்றை வெளியேற்ற பொருத்தி இருந்த விசிறி கழற்றப்பட்டு இருந்தது. அதன் துளை வழியாக புகுந்த மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிய வந்தது.

    பின்புறமாக உள்ள மரக்கடை வழியாக வந்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.

    இதேபோல் நேற்று இரவு திருவொற்றியூர் போலீஸ் நிலையம் எதிரே உள்ள நகை கடையில் வியாபாரி மீது மிளகாய் பொடியை தூவி 6 பவுன் நகையை மர்ம நபர் பறித்து சென்றார்.

    இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து திருவொற்றியூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள். #tamilnews
    ×