என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "redwood smuggling"

    • ரூ.2.5 கோடி மதிப்பிலான 72 செம்மரக்கட்டைகள் பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டன.
    • சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திரா மாநிலம் ஸ்ரீ காளஹஸ்தி வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் அதிரடிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    நடத்திய வாகன சோதனையில், ரூ.2.5 கோடி மதிப்பிலான 72 செம்மரக்கட்டைகள் பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்த கடத்தலில் ஈடுபட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    கடத்தல் சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்திய வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டை அருகே புதுவாயலில் சென்னை- கொல்கத்தா நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை போலீசார் வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது போலீசாரை கண்டதும் ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற கேரளா மாநில பதிவு எண் கொண்ட லோடு வேன் நிற்காமல் வேகமாக சென்றது. பின்னர் அங்கிருந்த பேரிகார்டு தடுப்பு கம்பியில் மோதியது.

    உடனே வேனில் இருந்த 3 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். போலீசார் வேனை சோதனை செய்த போது அதில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் கடத்தி வரப்பட்டது தெரிந்தது.

    இதையடுத்து வேனுடன் செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய கும்பல் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
    ×