search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ramajayam murder case"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பரிசோதனையின் முடிவில் நிச்சயம் குற்றவாளி குறித்த அறிவியல் ரீதியான முடிவுகள் தெரியவரும்.
    • பரிசோதனை அறிக்கை இந்த மாத இறுதிக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும்.

    திருச்சி:

    அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரும், தொழில் அதிபருமான ராமஜெயம், 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் அதிகாலையில் நடைபயிற்சியின் போது கடத்தப்பட்டு மர்மநபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கை 10 ஆண்டுகளாக பல்வேறு பிரிவு போலீசார் விசாரித்தும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    இதையடுத்து இந்த வழக்கு விசாரணை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. எஸ்.பி. ஜெயகுமார் தலைமையில், டி.எஸ்.பி. மதன் கண்காணிப்பில் 40 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமஜெயம் கொலை பாணியில் தமிழகத்தில் நடந்த பல்வேறு கொலை சம்பவங்களில் ஈடுபட்ட ரவுடிகள் மற்றும் ராமஜெயம் கொலை சம்பவம் நடந்த போது திருச்சியில் முகாமிட்டிருந்த ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில் திண்டுக்கல் மோகன் ராம், நரைமுடி கணேசன் உட்பட 13 பேர் இருந்தனர்.

    இந்த பட்டியலில் உள்ளவர்களிடம் உண்மையை கண்டறியும் பரிசோதனை நடத்த திருச்சி மாஜிஸ்திரேட் கடந்த மாதம் அனுமதித்தார். உண்மையை கண்டறியும் பரிசோதனை எப்போது நடத்தப்படும் என்ற கேள்வி தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருந்தது.

    இந்தநிலையில் 13 பேரிடமும் நாளை (17-ந்தேதி) முதல் 22-ந்தேதி வரை சென்னையில் உள்ள தடயவியல் துறை அலுவலகத்தில் அரசு நிபுணர்களின் முன்னிலையில் உண்மையை கண்டறியும் பரிசோதனை நடத்தப்போவதாக சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

    இது குறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், 13 பேருக்கும் தனித்தனியாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனையின் முடிவில் நிச்சயம் குற்றவாளி குறித்த அறிவியல் ரீதியான முடிவுகள் தெரியவரும்.

    பரிசோதனை அறிக்கை இந்த மாத இறுதிக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும். இதன் அடிப்படையில் விசாரணையில் அடுத்தகட்ட நகர்வு சிறப்பாக இருக்கும் என்றனர்.

    • கடலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் என்பவருக்கு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
    • நரைமுடி கணேசன், மோகன்ராம், கலைவாணன், தினேஷ், மாரிமுத்து ஆகிய 5 பேருக்கும் இன்று திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

    திருச்சி:

    தி.மு.க. முதன்மை செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி கே.என்.ராமஜெயம் கொலை வழக்கை தற்போது சிறப்பு புலனாய்வு குழுவினர் கடந்த 6 மாதமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் சந்தேக நபர்களான 13 பேரிடம் உண்மை கண்டறியும் பரிசோதனை நடத்த அந்த குழு முடிவு செய்தது.

    இதற்காக அந்த 13 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது சாமி ரவி, திலீப் என்கிற லட்சுமி நாராயணன், சிவா, ராஜ்குமார், சத்யராஜ், சுரேந்தர், நரைமுடி கணேசன், மோகன்ராம், கலைவாணன், தினேஷ், மாரிமுத்து, செந்தில் ஆகிய 12 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்தனர்.

    அவர்களுக்கு முழு உடல் தகுதி மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு அந்த அறிக்கையுடன் வருகிற 21-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி நேற்றைய தினம் 6 பேருக்கு இதய நோய் நிபுணர், அறுவை சிகிச்சை நிபுணர், மனநல மருத்துவர், பொது மருத்துவர் உட்பட 5 டாக்டர்கள் பரிசோதனை மேற்கொண்டனர்.

    மேலும் நேற்றைய தினம் கடலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் என்பவருக்கு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. மீதம் இருந்த நரைமுடி கணேசன், மோகன்ராம், கலைவாணன், தினேஷ், மாரிமுத்து ஆகிய 5 பேருக்கும் திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை இன்று காலை தொடங்கியது.

    இந்த பரிசோதனை அறிக்கை உடனடியாக வழங்கப்பட உள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் வருகிற 21-ந்தேதி நீதிபதி உண்மை கண்டறியும் சோதனை தொடர்பான முடிவினை அறிவிப்பார் என சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சிறப்பு புலனாய்வு குழு எஸ்.பி.ஜெயக்குமார், ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி அளிக்குமாறு மனுதாக்கல் செய்தார்.
    • ஆஜரான 13 பேரின் வழக்கறிஞர்கள் சிறப்பு புலனாய்வு குழுவினர் உண்மை கண்டறியும் சோதனை தொடர்பாக எந்த ஒரு முறையான அறிக்கையையும் பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்யவில்லை.

    திருச்சி:

    தி.மு.க. முதன்மைச்செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

    இதில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய தமிழகத்தின் பிரபல ரவுடிகள் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய முடிவெடுத்தனர். அது தொடர்பாக உரிய அனுமதி கேட்டு புலனாய்வுக்குழுவினர் திருச்சி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    இதில் மோகன்ராம், தினேஷ், நரைமுடி கணேசன், சத்யராஜ், கலைவாணன், மாரிமுத்து, தீலீப் என்கிற லட்சுமி நாராயணன், ராஜ்குமார், சுரேந்தர், சண்முகம், சிவா என்ற குணசேகரன் ஆகியோரும், கடலூர் சிறையிலிருந்த செந்தில் ஆகிய 13 பேரும் கடந்த 1-ந்தேதி திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6-ல் நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் ஆஜராகினர்.

    பின்னர் வழக்கு 7-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அன்றைய தினம் சிறப்பு புலனாய்வு குழு எஸ்.பி.ஜெயக்குமார், ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி அளிக்குமாறு மனுதாக்கல் செய்தார். அதில் ஆஜரான 13 பேரின் வழக்கறிஞர்கள் சிறப்பு புலனாய்வு குழுவினர் உண்மை கண்டறியும் சோதனை தொடர்பாக எந்த ஒரு முறையான அறிக்கையையும் பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்யவில்லை.

    எனவே இது முறையாக பின்பற்றப்பட வாய்ப்பில்லை. என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது என்பது தொடர்பாக அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனையடுத்து அந்த வழக்கை 14-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டார்.

    பின்னர் கடந்த 14-ந் தேதி சத்யராஜ், லெட்சுமி நாரயணன், சாமி ரவி, ராஜ்குமார், சிவா என்ற குணசேகரன், சுரேந்தர், கலைவாணன், மாரிமுத்து ஆகிய 8 பேர் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6-ல் நீதிபதி சிவக்குமார் முன்பு ஆஜராகி உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக்கொண்டனர்.

    தென்கோவன் என்ற சண்முகம் என்பவர் மட்டும் இந்த சோதனைக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்த வழக்கில் மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ், செந்தில் ஆகியோர் நேரில் ஆஜராகாத நிலையில் அவர்கள் இன்று (17-ந்தேதி) நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

    அதன்படி இன்று அந்த நான்கு பேரும் திருச்சி 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி அளிப்பது தொடர்பான முடிவை வருகிற 21-ந்தேதி அளிப்பதாக நீதிபதி சிவக்குமார் தெரிவித்தார். தொடர்ந்து வழக்கு வருகிற 21-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    அன்றைய தினம் சம்மதம் தெரிவித்துள்ள 12 பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்து ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    அவ்வாறு அனுமதி அளித்தவுடன் டெல்லியில் சிறப்பு அனுமதி பெறப்பட்டு விரைவில் இந்த 12 பேருக்கும் சென்னையில் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சிறப்பு புலனாய்வுக்குழுவினர் தெரிவித்தனர்.

    ராமஜெயம் கொலை வழக்கில் உள்ளூர் போலீசார், சி.பி.சி.ஐ.டி., சி.பி.ஐ. விசாரணையில் இதுவரை துப்பு துலங்காத நிலையில், சிறப்பு புலனாய்வுக்குழு மூலம் கொலை குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கையுடன் வழக்கு மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது.

    • 13 பேரின் வழக்கறிஞர்கள் சிறப்பு புலனாய்வு குழுவினர் உண்மை கண்டறியும் சோதனை தொடர்பாக எந்த ஒரு முறையான அறிக்கையையும் பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்யவில்லை.
    • வழக்கில் மோகன் ராம், நரைமுடி கணேசன், திணேஷ், செந்தில் ஆகியோர் நேரில் ஆஜராகாத நிலையில் அவர்களை வரும் 17-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

    திருச்சி:

    தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரும், தொழிலதிபருமான கே.என்.ராமஜெயம் 2012 மார்ச் 29 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார்.

    அவரது உடல் கல்லணை செல்லும் சாலையில் வீசப்பட்டு கிடந்தது. இது தொடர்பாக உள்ளூர் போலீசார் சி.பி.ஐ. மற்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் எந்த துப்பும் துலங்காத நிலையில் சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. அதன் பின்னர் தமிழகத்தில் பிரபல ரவுடிகள் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய முடிவெடுத்தனர். இது தொடர்பாக நீதிமன்றத்தின் அனுமதியை நாடி சிறப்பு புலனாய்வு குழு தரப்பில் திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    மோகன்ராம், தினேஷ், நரைமுடி கணேசன், சத்யராஜ், கலைவாணன், மாரிமுத்து, தீலீப் என்கிற லட்சுமி நாராயணன், ராஜ்குமார், சுரேந்தர், சண்முகம், சிவா (எ) குணசேகரன் ஆகியோரும் கடலூர் சிறையிலிருந்த செந்தில் ஆகிய 13 பேரும் கடந்த 1-ந்தேதி திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6-ல் நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் ஆஜராகினர்.

    அது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவின் எஸ்.பி தான் மனு தாக்கல் செய்ய முடியும் என எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்த நிலையில் அந்த வழக்கை நவம்பர் 7-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழு எஸ்.பி. மனு தாக்கல் செய்தார். வழக்கின் விசாரணை 7-ந்தேதி அன்று நடைபெற்றது.

    அதில் ஆஜரான 13 பேரின் வழக்கறிஞர்கள் சிறப்பு புலனாய்வு குழுவினர் உண்மை கண்டறியும் சோதனை தொடர்பாக எந்த ஒரு முறையான அறிக்கையையும் பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்யவில்லை. எனவே இது முறையாக பின்பற்றப்பட வாய்ப்பில்லை. என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது என்பது தொடர்பாக அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    அதனையடுத்து அந்த வழக்கை 14-ந்தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டார். அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் உண்மை கண்டறியும் சோதனைக்கு சத்யராஜ், லெட்சுமி நாரயணன், சாமி ரவி, ராஜ் குமார், சிவா (எ) குணசேகரன், சுரேந்தர், கலைவாணன், மாரிமுத்து ஆகியோர் இன்று திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6 நீதிபதி சிவக்குமார் முன்பு ஆஜராகி உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக்கொண்டனர்.

    தென்கோவன் (எ) சண்முகம் சோதனைக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்த வழக்கில் மோகன் ராம், நரைமுடி கணேசன், திணேஷ், செந்தில் ஆகியோர் நேரில் ஆஜராகாத நிலையில் அவர்களை வரும் 17-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

    • சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை அதிகாரியும், எஸ்.பி.யுமான ஜெயக்குமார் தொழிலதிபர் வழக்கு தொடர்பாக ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி தருமாறு மனு தாக்கல் செய்தார்.
    • வழக்கு விசாரணையின் போது கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், நம்பத்தகுந்த, ஆனால் உறுதி செய்யப்படாத தகவலின் அடிப்படையில் 13 ரவுடிகள் மீது விசாரணை நடத்த வேண்டியுள்ளது என்று மனுவில் தெரிவித்து இருந்தார்.

    திருச்சி:

    தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி தொழிலதிபர் கே.என்.ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.

    சி.பி.சி.ஐ.டி. மற்றும் சி.பி.ஐ. விசாரணையில் துப்பு துலங்காத நிலையில் இந்த கொலை வழக்கு சிறப்பு புலனாய்வுக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில், டி.எஸ்.பி. மதன்குமார் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் விசாரித்து வருகிறார்கள்.

    இவ்வழக்கில் திடீர் திருப்பமாக, சென்னையை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., எம்.கே.பாலன் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய நபர்கள் உள்பட பிரபல ரவுடிகள் 20 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையை கடந்த 22-ந்தேதி சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி ஷகில் அக்தர் நடத்தினார். அதன் அடிப்படையில் அதில் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.

    பின்னர் சாமி ரவி, திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேசன், மாரிமுத்து, சீர்காழி சத்யராஜ், தினேஷ், திலீப் என்கிற லட்சுமி நாராயணன், தென்போவன் என்கிற சண்முகம், ராஜ்குமார், சிவ குணசேகரன், சுரேந்தர், கலைவாணன், லெப்ட் ரவி ஆகிய 13 ரவுடிகளுக்கு இன்று திருச்சி கோர்ட்டில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது.

    அதன்படி 13 பேரும் கடந்த 1-ந்தேதி திருச்சி கோர்ட்டுக்கு வந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி சிவக்குமார், புலனாய்வுக் குழு விசாரணை அதிகாரியான டி.எஸ்.பி. மதன்குமார் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முறையாக மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கினை 7-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து இன்று கடலூர் லெப்ட் செந்தில், திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேசன், திண்டுக்கல் தினேஷ் ஆகிய 4 ரவுடிகள் தவிர்த்து மீதமுள்ள 9 ரவுடிகளும், திருச்சி 6-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜராகினர்.

    அதைத்தொடர்ந்து சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை அதிகாரியும், எஸ்.பி.யுமான ஜெயக்குமார் தொழிலதிபர் வழக்கு தொடர்பாக மேற்கண்ட ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி தருமாறு மனு தாக்கல் செய்தார். அதில் வழக்கு விசாரணையின் போது கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், நம்பத்தகுந்த, ஆனால் உறுதி செய்யப்படாத தகவலின் அடிப்படையில் மேற்கண்ட, 13 ரவுடிகள் மீது விசாரணை நடத்த வேண்டியுள்ளது என்று மனுவில் தெரிவித்து இருந்தார்.

    மேலும் உண்மை கண்டறியும் சோதனைக்கு ரவுடிகள் அனைவரும் ஒப்புக்கொண்டு, கையெழுத்திட்டு தந்திருப்பதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே ரவுடிகள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் உண்மை கண்டறியும் சோதனை மருத்துவர்கள் மற்றும் வக்கீல்கள் முன்னிலையில் நடத்த வேண்டும் மற்றும் உண்மை கண்டறியும் சோதனையின்போது என்னென்ன கேள்விகள் கேட்க போகிறார்கள் என்பதை ஆவணமாக தாக்கல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சிவக்குமார் மனுவை ஏற்றுக்கொண்டு வழக்கு விசாரணையை வருகிற 14-ந்தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் ரவுடிகள் தரப்பில் ஆட்சேபனை மனுக்கள் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். அதன் பின்னர் நடைபெறும் வாதங்களின் அடிப்படையில் உண்மை கண்டறியும் சோதனைக்கு நீதிபதி அனுமதி அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • தமிழகத்தின் பிரபல ரவுடிகள் 12 பேர் மீது உண்மை கண்டறியும் சோதனை செய்ய முடிவு.
    • ராமஜெயம் கொலை வழக்கில் பல ஆண்டுகள் ஆகியும் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

    தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரரும், தொழில் அதிபருமான கே.என்.ராமஜெயம் கடந்த 2012-ம் வருடம் மார்ச் 29-ந்தேதி மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார்.

    திருச்சி தில்லைநகரில் நடந்த இந்த கொலை வழக்கில் பல ஆண்டுகள் ஆகியும் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

    இதனிடையே ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலன் விசாரணை குழுவினர் இவ்வழக்கு சம்பந்தமாக தமிழகத்தின் பிரபல ரவுடிகள் 12 பேர் மீது உண்மை கண்டறியும் சோதனை செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தமிழகத்தின் பிரபல ரவுடிகள் 12 நபர்களான திண்டுக்கல் மோகன்ராம், சாமி ரவி, நரைமுடி கணேசன், சீர்காழி சத்யராஜ், மாரிமுத்து, தினேஷ், திலீப் என்கிற லட்சுமி நாராயணன், தென்கோவன் என்கிற சண்முகம், ராஜ்குமார், சுரேந்தர், சிவகுணசேகரன், கலைவாணன் உள்ளிட்டவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடைபெற உள்ளது.

    கடந்த ஒரு மாத காலமாக சந்தேகத்துக்கு உட்பட்ட சுமார் 2,500 வாகனங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக விசாரணை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
    திருச்சி:

    தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். தொழில் அதிபரான இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் 29-ந்தேதி அதிகாலை 5 மணியளவில் நடைபயிற்சி சென்றபோது மர்மநபர்களால் கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

    கொலையாளிகள் அவரது உடலை கட்டு கம்பியால் கட்டி திருச்சி கல்லணை சாலையில் திருவளர்ச்சோலை பொன்னி டெல்டா பகுதியில் காவிரி ஆற்றின் கரையோரம் வீசிவிட்டு தப்பிச் சென்றனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. மற்றும் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது. 10 ஆண்டுகள் ஆகியும் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

    இதையடுத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் மீண்டும் ராமஜெயம் கொலை வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிட்டது. அதன்படி சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 15 நாட்களுக்கு ஒரு முறை விசாரணை அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனர்.

    அதன் பின்னர் கோர்ட்டுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதால் இந்த மாதம் வருகிற 8-ந் தேதி ஒருமாத விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளனர். இதில் பிரபல ரவுடிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகப்படும் வெர்ஷா மாருதி வாகன உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறார்கள்.

    இதுபற்றி விசாரணை அதிகாரி ஒருவர் கூறும் போது, கடந்த ஒரு மாத காலமாக சந்தேகத்துக்கு உட்பட்ட சுமார் 2,500 வாகனங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. வெளிமாநிலங்களில் இருக்கும் வாகனங்களையும் விசாரிக்க இருக்கிறோம். பொதுமக்கள் நிறைய பேர் பல்வேறு தகவல்களை அளிக்கிறார்கள். பெரும்பாலான தகவல்கள் ஏற்கனவே கிடைத்த தகவல்களாகவே இருக்கின்றன. விரைவில் வழக்கில் முன்னேற்றம் கிடைக்கும் என நம்புகிறோம் என்றார்.

    ×