search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "public tribute"

    கிருஷ்ணகிரியில் உடல்நலகுறைவால் பாதிக்கப்பட்டிருந்த 112 வயது மூதாட்டி உயிரிழந்தார். அவருக்கு பேரன், பேத்திகள், உறவினர்கள் உட்பட அப்பகுதி பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியில் உள்ள செந்தில் நகரில் வசித்து வந்தவர் முனுசாமி. கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த முனுசாமி கடந்த 1947-ம் ஆண்டு இறந்து விட்டார். 

    இவரது மனைவி லட்சுமியம்மாள் (வயது112). இவரது ஒரே மகன் தன்ராஜ். மருமகள் சரோஜா (96). இவர்களுக்கு 5 ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். கடந்த மே மாத ம் 112-வது பிறந்தநாளை, தனது 74 பேரன், பேத்திகளுடன் கொண்டாடினர். 

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நலகுறைவால் பாதிக்கப்பட்டிருந்த லட்சுமியம்மாள் நேற்று உயிரிழந்தார். அவருக்கு பேரன், பேத்திகள், உறவினர்கள் உட்பட அப்பகுதி பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். 

    லட்சுமியம்மாள், சைவம் உணவு மட்டுமே உண்டு, சத்தான காய்கறிகள், கீரைகள், சிறு தானிய உணவுகள் மட்டுமே சாப்பிட்டு வந்து 112 வயது வரை வாழ்ந்து உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
    மணிகண்டத்தில் இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு பொதுமக்கள் மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
    மணிகண்டம்:

    மணிகண்டத்தை சேர்ந்தவர் பழனியாண்டி(வயது 50). விவசாயியான இவர் சிறுவயதில் இருந்தே மாடுபிடி வீரராகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த 10 வருடத்திற்கு முன்பு ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வாங்கி அதற்கு செவளக்காளை என்று பெயரிட்டு அன்பாக வளர்த்து வந்தார். அந்த காளை, புகழ்பெற்ற அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு, தென்னலூர், சூரியூர் உள்பட பல்வேறு ஜல்லிக்கட்டுகளில் பங்கு பெற்று மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் தங்கம், வெள்ளி நாணயங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் உள்பட பரிசுளை பெற்று உள்ளது. கடைசியாக நவலூர்குட்டப்பட்டு ஜல்லிக்கட்டில் களம் இறங்கி அடக்க முடியாத காளையாக பரிசு பெற்றது. இந்த காளையை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மதுரையை சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர் ஒருவர் ரூ. 15 லட்சத்திற்கு கேட்டார். ஆனால் காளையின் உரிமையாளர் கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் செவளக் காளைக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அந்த காளைக்கு கால்நடை மருத்துவர்களை கொண்டு சிகிச்சை அளித்தும் நேற்றுமுன்தினம் இரவு பரிதாபமாக இறந்தது. இதைபார்த்த காளையின் உரிமையாளர் பழனியாண்டி மற்றும் அவரது குடும்பத்தினர் காளையை கட்டிப்பிடித்து கதறி அழுதனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் வந்து அந்த காளைக்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அந்த காளை தாரை, தப்பட்டை, வாண வேடிக்கைகள் முழங்க, பழனியாண்டி வீட்டின் அருகே பொக்லைன் எந்திரத்தின் மூலம் குழிதோண்டி அதில் காளையை அடக்கம் செய்தனர்.
    இன்று வாஜ்பாய் அஸ்தி புதுவை நகர பகுதியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக ரதத்தில் கொண்டுவந்து வைக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
    புதுச்சேரி:

    மறைந்த பாரத பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி நாடு முழுவதும் புனித நதிகளிலும், கடலிலும் கரைக்கப்பட உள்ளது.

    இதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் பா.ஜனதா நிர்வாகிகள் அஸ்தியை கொண்டுவந்துள்ளனர். இந்த அஸ்திக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுவைக்கு அஸ்தியை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் விமானம் மூலம் புதுவைக்கு நேற்று கொண்டுவந்தார்.

    விமான நிலையத்திலிருந்து அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அஸ்தியை உழவர்கரை நகராட்சி, அரியாங்குப்பம், பாகூர், நெட்டப்பாக்கம் ஆகிய கொம்யூன் பகுதிகளுக்கு கொண்டுசென்றனர். அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக அஸ்தி வைக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    இந்நிலையில் இன்று வாஜ்பாய் அஸ்தி புதுவை நகர பகுதியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக ரதத்தில் கொண்டுவந்து வைக்கப்பட்டது. நெல்லித் தோப்பு லெனின்வீதி காமராஜர் சிலை அருகிலும், உருளையன்பேட்டை கட்சி அலுவலகம், முத்தியால் பேட்டை மணிக்கூண்டு, நேருவீதி, காந்திவீதி சந்திப்பு, புஸ்சி வீதி மணிக்கூண்டு, உழவர் சந்தை, முதலியார்பேட்டை வானொலி திடல் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அஸ்தி ரதம் வைக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    இன்று மாலை வில்லியனூர், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பகுதிகளில் பொதுமக்கள் அஞ்சலிக்காக ரதம் செல்கிறது. நாளை பா.ஜனதா கட்சி தலைமை அலுவலகத்திலிருந்து அஸ்தி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கடற்கரை சாலை காந்தி திடலின் பின்புறம் கடலில் கரைக்கப்படுகிறது.

    முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி விமானம் மூலம் நேற்று சென்னை கொண்டு வரப்பட்டது. அவருடைய அஸ்தி தமிழக பா.ஜ.க. அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. #Vajpayee #BJP
    சென்னை:

    முன்னாள் பிரதமரும், பா.ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான வாஜ்பாய் கடந்த 16-ந்தேதி டெல்லியில் காலமானார். அவரது உடல் மறுநாள் தகனம் செய்யப்பட்டது. இந்த அஸ்தியை நாடு முழுவதும் உள்ள புனித நதிகளில் கரைக்க பா.ஜனதா முடிவு செய்தது. அதன்படி அஸ்தியின் ஒரு பகுதியை ஹரித்வார் கங்கை நதியில் வாஜ்பாய் குடும்பத்தினர் கரைத்தனர்.

    டெல்லியில் அவரது அஸ்தி கலசங்களை பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நேற்று மாநில தலைவர்களிடம் ஒப்படைத்தார். இதில் 7 கலசங்களை தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பெற்றுக்கொண்டார். அவருடன் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் முருகன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், சுஷ்மா சுவராஜ் மற்றும் வாஜ்பாய் குடும்பத்தினர் பங்கேற்றனர்.

    டெல்லியில் இருந்து விமானம் மூலம் வாஜ்பாய் அஸ்தியை தமிழக தலைவர்கள் சென்னை எடுத்து வந்தனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வேனில் வாஜ்பாயின் அஸ்தி கலசங்கள் தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகமான கமலாலயத்துக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.

    இந்த ஊர்வலத்தில் பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், செயலாளர் கரு.நாகராஜன், துணைத்தலைவர் பி.டி.அரசகுமார், இளைஞரணி செயலாளர் ஜி.கே.எஸ்., ஊடகப்பிரிவு தலைவர் பிரசாத், முன்னாள் எம்.எல்.ஏ. கோ.ரவிராஜ் உள்பட பலரும் பங்கேற்றனர். ரதத்தின் முன்பும், பின்பும் பா.ஜ.க.வினர் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் அணிவகுத்து வந்தனர்.

    வாஜ்பாய் அஸ்தி நேற்று இரவு 7.20 மணிக்கு கமலாலயம் கொண்டு வரப்பட்டு அங்குள்ள பாரதமாதா சிலையின் கீழே வைக்கப்பட்டது. வாஜ்பாய் அஸ்திக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், மனிதநேய மைய அறக்கட்டளை தலைவரும், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான சைதை துரைசாமி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன் யாதவ், நடிகர் விஜயகுமார், துறைமுகம் பொறுப்புக்கழக உறுப்பினர் பிரகாஷ், சென்னை நாடார் சங்க செயலாளர் விஜயகுமார் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.



    முன்னதாக சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது, “வாஜ்பாய் வழியில் இந்த தமிழகத்தை வழிநடத்த வேண்டும் என்ற உறுதிப்பாட்டோடு இந்த அஸ்தியை நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். அஸ்தி கமலாலயத்தில் இன்று (வியாழக்கிழமை) பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இதில் கட்சி எல்லை, மொழி எல்லை, கொள்கை எல்லை ஆகியவற்றை கடந்து வந்து அஞ்சலி செலுத்தலாம்” என்றார்.

    மத்திய இணை-மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், “தமிழகம் முழுவதும் இந்த அஸ்தி யாத்திரை செல்லும். எந்த மக்களுக்காக வாஜ்பாய் வாழ்ந்தாரோ, அதே மக்களின் தரிசனத்துக்காக அவரது அஸ்தி கொண்டு செல்லப்படுகிறது” என்றார்.

    வாஜ்பாய் அஸ்திக்கு இன்று (வியாழக்கிழமை) முழுவதும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதைத்தொடர்ந்து மாலை 6.30 மணியளவில் அஸ்தியை கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட உள்ளது.

    வாஜ்பாய் அஸ்தியை சென்னை, மதுரை, திருச்சி, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், ஈரோடு (பவானி) ஆகிய 6 இடங்களில் கரைக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. 7 கலசங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதால் கூடுதலாக தஞ்சை காவிரி ஆற்றிலும் அஸ்தியை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 
    கரூரில் அப்துல்கலாம் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
    கரூர்:

    தமிழகத்தில் உள்ள ராமேசுவரத்தில் பிறந்த அப்துல்கலாம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) விஞ்ஞானியாக பணியாற்றி அணு ஆயுத சோதனையில் முக்கிய பங்காற்றினார். அதோடு மட்டும் அல்லாமல் இந்திய ஜனாதிபதியாக பொறுப்பேற்று நாட்டிற்கு அளப்பரியா பணிகளை செய்தார். நேற்று அப்துல்கலாமின் நினைவு தினத்தையொட்டி கரூரில் உள்ள பல்வேறு பள்ளிகளிலும் அவரது உருவப்படத்திற்கு மாணவ- மாணவிகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதேபோல் கரூர் கோட்டையண்ணன் கோவில் தெருவிலுள்ள ஒரு டீக்கடையில் அப்துல்கலாம் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அங்கு வரும் பொதுமக்கள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. விஞ்ஞான ரீதியாக பெரிய அளவில் ஆய்வு மேற்கொண்ட போதிலும், மரக்கன்று நட்டு உலக சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்கிற செயல்பாட்டில் தனது வாழ்நாள் முழுவதும் தீவிரமாக இருந்தவர் அப்துல்கலாம்.

    எனவே அவரது நினைவு தினத்தையொட்டி அனைவரும் மரக்கன்று நட வேண்டும் என பொதுமக்கள் உறுதிமொழியேற்றனர். இதேபோல் கரூரில் பல்வேறு தெருக்களிலும் பொதுமக்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் சார்பில் அப்துல்கலாம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கரூரை அடுத்துள்ள பசுபதிபாளையம் முடி திருத்துவோர் மருத்துவ சங்கம் சார்பில் கரூர் அருகே உள்ள செல்லாண்டிப்பட்டி ஸ்ரீ ராகவேந்திரா அறக்கட்டளையில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கினர். முன்னதாக அப்துல்கலாம் உருவப்படத்திற்கு சங்க நிர்வாகிகள் மற்றும் குழந்தைகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் சங்க நிர்வாகிகள் சுரேஷ், முருகராஜ், பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ×