என் மலர்
நீங்கள் தேடியது "pm putin"
- ரஷியா-உக்ரைன் இடையே கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடங்கியது.
- 3 ஆண்டுக்கு மேலாக சண்டை நடந்துவரும் நிலையில் நேரடி பேச்சுவார்த்தை நடந்தது.
ரஷியா-உக்ரைன் இடையே கடந்த 3 ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் புதின் சம்மதம் தெரிவித்தார்.
இரு நாட்டு பிரதிநிதிகளும் நேரடி அமைதிப் பேச்சுவார்த்தைக்காக நேற்று முன்தினம் துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் கூடினர். துருக்கி நாட்டின் அதிகாரிகள் நடுநிலை வகித்தனர். இந்தச் சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நடந்தது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷிய அதிபர் புதினிடம் தொலைபேசியில் இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
இது தொடர்பான டிரம்பின் எக்ஸ் பதிவில், "ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் இரண்டு மணி நேரம் தொலைபேசியில் உரையாடினேன். ரஷ்யாவும் உக்ரைனும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் உடனடியாகத் தொடங்கும் என்று நம்புகிறேன். போர் நிறுத்தத்திற்கான நிபந்தனைகள் குறித்து இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
இந்த போர் முடிந்தவுடன் அமெரிக்காவுடன் பெரிய அளவிலான வர்த்தகம் செய்ய ரஷ்யா விரும்புகிறது. அதை நான் ஒப்புக்கொள்கிறேன். புதிய வேலைவாய்ப்புகள், மற்றும் செல்வதை உருவாக்க ரஷ்யாவிற்கு மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது. அதேபோல், உக்ரைன் தனது நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் செயல்பாட்டில் வர்த்தகத்தில் பெரும் பயனாளியாக இருக்க முடியும்" என்று பதிவிட்டுள்ளார்.
அதே சமயம், இனி எக்காலத்திலும் நேட்டோவில் உக்ரைன் சேரக்கூடாது என்றும் கிரீமியா பகுதி முழுமையாக ரஷியாவுக்கே அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் ரஷியா நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ரஷியாவுக்கு எதிரான பொருளாதார தடைகள் தொடர வேண்டும் என்று தொலைபேசியில் பேசிய டிரம்பிடம் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வலியுறுதியாக கூறப்படுகிறது
- ரஷிய அதிபர் புதினுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேசினார்.
- வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் டிரம்ப் சந்தித்து பேசினார்.
ரஷியா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். இதுதொடர்பாக ரஷிய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசினார்.
மேலும் வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் டிரம்ப் சந்திப்பின்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. போர் நிறுத்தத்துக்கு ஜெலன்ஸ்கி மறுத்ததால் டிரம்ப் அதிருப்தி அடைந்தார்.
இதையடுத்து உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை நிறுத்துவதாக டிரம்ப் அறிவித்தார். இந்நிலையில் உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்படும் வரை ரஷியா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, "போர் களத்தில் உக்ரைனுக்கு எதிராக முற்றிலும் ஒரு கடுமையான தாக்குதலை ரஷியா தொடுத்து வருகிறது. இதனால் ரஷியா மீது மிகப்பெரிய அளவிலான பொருளாதார தடைகளையும், வரிகளையும் விதிப்பது குறித்து நான் பரிசீலனை செய்து வருகிறேன். அமைதி ஏற்படுவதற்கான போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் இறுதி தீர்வுக்கான ஒப்பந்தம் ஏற்படும் வரை இந்த தடைகள் அமலில் இருக்கும். ரஷியாவும், உக்ரைனும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்" என்று தெரிவித்தார்.
இதற்கிடையே அமைதி பேச்சுவார்த்தைக்கு ரஷிய அதிபர் புதின் தயாராக இருப்பதாக ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா, ரஷியா அதிகாரிகள் இடையேயான பேச்சுவார்த்தை சவுதி அரேபியாவில் நடைபெற்றது. இந்நிலையில் உக்ரைன் அதிகாரிகளுடன் அமெரிக்கா 11-ந்தேதி சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.







