search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Parayanam"

  • ஒவ்வொரு ஆண்டும் சத்திய ஞான சபை தொடக்க விழா கொண்டாடப்படுவது வழக்கம்
  • ஏராளமான சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டனர்.

  வடலூர்:

  கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் நிறுவிய சத்திய ஞானசபை உள்ளது. ராமலிங்க அடிகளார் 23.5.1867-ம் ஆண்டு வைகாசி மாதம் 11-ந் தேதியன்று சத்திய ஞானசபையை நிறுவினார்.

  அதன்படி ஒவ்வொரு ஆண்டும் சத்திய ஞான சபை தொடக்க விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி 158-ம் ஆண்டு தொடக்கவிழா நேற்று நடைபெற்றது.

  விழாவையொட்டி கடந்த 7 நாட்களாக அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரம் மற்றும் திரு அருட்பா முற்றோதல் நடந்தது. தொடர்ந்து தருமச்சாலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு அகவல் பாராயணம் பாடப்பட்டது. தொடர்ந்து 7.30 மணியளவில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டனர்.

  இதனைத் தொடர்ந்து தரும சாலையின் சிறப்புகள் குறித்து வில்லுப்பாட்டு, இசை நிகழ்ச்சி, ஜீவகாருண்ய ஒழுக்கம் சத் விசாரம், சொற்பொழிவு, திரு அருட்பா இன்னிசை, திரு அருட்பா 6-ஆம் திருமுறை சத் விசாரம், சன்மார்க்க நெறி சத் விசாரம், நான்கு வகை ஒழுக்கம், வள்ளலார் அருளிய ஞானசரியை ஆகியவை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன் மற்றும் வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய நிர்வாக அதிகாரி ராஜா சரவணக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

  வள்ளலாரின் திருக்கரத்தால் ஏற்றி வைக்கப்பட்ட அணையா அடுப்பு இன்று வரை தொடர்ந்து எரிந்து அன்னதானம் வழங்கப்படுகிறது. ஜீவகாருண்யத்தை பறைசாற்றும் வகையில் ஏற்படுத்தப்பட்ட சத்திய தரும சாலையானது பலரது சகாயத்தாலேயே நடைபெற்று நிலைபெற வேண்டும் என்பதால், ஜீவதயவுடைய புண்ணியர்கள் பொருள் முதலியன உதவி செய்து அதனால் வரும் லாபத்தை பாகஞ் செய்து கொள்ள வேண்டும் என்பது வள்ளலாரின் கூற்று.

  அன்று முதல் சத்திய தரும சாலையில் தினசரி 3 வேளையும் சாதி, மதம், இனம், தேசம், நிறம் என எவ்வித பேதமும் இன்றி அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மழை, வெள்ளம், புயல் என இயற்கை பேரிடர்கள் மற்றும் கொரோனா தொற்று நேரத்திலும் கூட தொடர்ந்து தினசரி மூன்று வேளையும் அன்னதானம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

  • பைரவாஷ்டகம் பாராயணம் செய்து மனதார வழிபடுங்கள்.
  • இதுவரை இருந்த எதிர்ப்புகள் அனைத்தும் அகலும்.

  மத்யாஷ்டமி எனும் அற்புதமான நாளில், பைரவரை பிரார்த்தனை செய்து, பைரவாஷ்டகம் பாராயணம் செய்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். இதுவரை இருந்த எதிர்ப்புகள் அனைத்தும் அகலும். எடுத்த காரியங்களை எல்லாம் வெற்றியாக்கி தந்தருள்வார் பைரவர்.

  பைரவ வழிபாடு சக்தி வாய்ந்தது. காலபைரவரை அனுதினமும் வழிபடலாம். எப்போது வேண்டுமானாலும் வழிபடலாம். வழக்கு முதலான சிக்கல்கள், எதிரிகள் முதலான தொல்லைகள், குடும்பத்தில் குழப்பங்கள், கடன் தொல்லையால் அவமானம் என கலங்கி தவிப்பவர்கள், அவசியம் பைரவரை வணங்கி வருவது நல்லது. அனைத்தையும் சுபமாக்கித் தருவார் காலபைரவர்.

  குறிப்பாக தேய்பிறை அஷ்டமியில், பைரவ வழிபாடு என்பது மிக மிக அவசியம். பைரவருக்கு செந்நிற மலர்கள் உகந்தவை. அரளி முதலான செந்நிற மலர்களைச் சூட்டுங்கள். எதிரிகளை அழிக்கும் வல்லமை கொண்டவர் அனுமன். மனோதிடம் தருபவர் அனுமன். அவருக்கு வடைமாலை சார்த்துவது விசேஷம். அதேபோல் பைரவருக்கும் வடைமாலை சார்த்தி வேண்டிக்கொள்வது மகோன்னத பலன்களைத் தரும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

  இன்று தேய்பிறை அஷ்டமி. இந்த நாளில், மாலையில் விளக்கேற்றி, பைரவாஷ்டகம் சொல்லி வழிபடுங்கள்.

  பைரவாஷ்டகம்

  தேவராஜ ஸேவ்யமான பாவநாங்க்ரி பங்கஜம்

  வ்யால யஜ்ஞஸூத்ர மிந்துஸேகரம் க்ருபாகரம்

  நாரதாதி யோகி ப்ருந்த வந்திதம் திகம்பரம்

  காஸிகா புராதி நாத கால பைரவம் பஜே


  பானு கோடி பாஸ்வரம் பவாப்தி தார கம்பரம்

  நீலகண்ட மீப்ஸிதார்த்த தாயகம் த்ரிலோஸனம்

  கால காலமம் புஜாக்ஷ மஸ்த ஸூல மக்ஷரம்

  காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே


  ஸூல டங்க பாஸ தண்ட பாணி மாதி காரணம்

  ஸ்யாம காய மாதி தேவ மக்ஷரம் நிராமயம்

  பீம விக்ர மம் ப்ரபும் விஸித்ர தாண்டவ ப்ரியம்

  காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே


  புக்தி முக்தி தாயகம் ப்ரஸஸ்த சாரு விக்ரஹம்

  பக்த வத்ஸலம் ஸ்திரம் ஸமஸ்த லோக விக்ரஹம்

  நிக்வணத் மனோஜ்ஞ ஹேம கிங்கிணீ லஸத்கடிம்

  காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே


  தர்ம ஸேது பாலகம் த்வதர்ம மார்க்க நாஸகம்

  கர்மபாஸ மோசகம் ஸுசர்ம தாயகம் விபும்

  ஸ்வர்ண வர்ண கேஸ பாஸ ஸோபிதாங்க நிர்மலம்

  காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே


  ரத்ன பாதுகா ப்ரபாபி ராம பாத யுக்மகம்

  நித்ய மத்வி தீயமிஷ்ட தைவதம் நிரஞ்ஜனம்

  ம்ருத்யு தர்ப்ப நாஸனம் கரால தம்ஷ்ட்ர பூஷணம்

  காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே


  அட்டஹாஸ பின்ன பத்மஜாண்ட கோஸ ஸந்ததிம்

  த்ருஷ்டி பாத நஷ்ட பாப ஜாலமுக்ர ஸாஸனம்

  அஷ்ட ஸித்தி தாயகம் கபால மாலி காதரம்

  காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே


  பூத ஸங்க நாயகம் விஸால கீர்த்தி தாயகம்

  காஸி வாஸி லோக புண்ய பாப ஸோதகம் விபும்

  நீதி மார்க்க கோவிதம் புராதனம் ஜகத் பதிம்

  காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே


  கால பைரவாஷ்டகம் படந்தி யே மனோஹரம்

  ஜ்ஞான முக்தி ஸாதனம் விஸித்ர புண்ய வர்த்தனம்

  ஸோக மோஹ லோப தைன்ய கோப தாப

  நாஸனம்

  தே ப்ரயாந்தி கால பைரவாங்க்ரி ஸந்நிதிம்

  த்ருவம்

  இந்த நன்னாளில், பைரவாஷ்டகம் சொல்லி பைரவ வழிபாடு செய்யுங்கள். முக்கியமாக, தெருநாய்களுக்கு இரண்டு ரூபாய் பிஸ்கட் பாக்கெட்டாவது வழங்குங்கள். எதிரிகள் தொல்லைகள் ஒழியும். எதிர்ப்புகள் அகலும். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். வாழ்வில் காரியத்தில் வெற்றியைக் காண்பீர்கள்.

  • லலிதா சகஸ்ரநாம பாராயணம் நாளை நடக்கிறது.
  • மதுரையில் இருந்து சுமார் 300 பேரும் இந்த பாராயணத்தை ஒன்று சேர சொல்கிறார்கள்.

  மதுரை

  மதுரை கற்பகவல்லி நவ கோடி லலிதா சகஸ்ரநாம பாராயண குழு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  கற்பகாம்பாள் உடனாய கபாலீஸ்வர சுவாமியின் ஆசீர்வாதத்தால் கற்பகவல்லி நவ கோடி லலிதா சகஸ்ரநாம பாராயண குழு மதுரையில் இன்று (22-ந் தேதி) மற்றும் நாளை (23-ந் தேதி)களில் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை லோக சேமத்திற்காகவும், நம்மை சுற்றியுள்ள துர் சக்திகள் நீங்கி நல்ல வளத்தோடு அனைவரும் வாழ வேண்டியும், சென்னை கற்பகவல்லி நவகோடி லலிதா சகஸ்ரநாம பாராயண குழுவால் பாராயணம் நடத்தப்படுகிறது. சென்னையில் இருந்து கற்பகாம்பாளுடன் 70 பேரும், மதுரையில் இருந்து சுமார் 300 பேரும் இந்த பாராயணத்தை ஒன்று சேர சொல்கிறார்கள்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  ×