search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mgr birthday function"

    • கட்சி நிர்வாகிகள் கார சாரமாக மோதிக்கொண்ட நிலையில் கொடிக்கம்பங்களையும் மாற்றி மாற்றி பறித்து எறிந்தனர்
    • அ.தி.மு.க., அ.ம.மு.க. நிர்வாகிகள் வாக்குவாதம் செய்ததால் பதட்டமான சூழல் உருவானது.

    ஆண்டிபட்டி:

    தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அ.தி.மு.க. சார்பாக வும், அ.ம.மு.க. சார்பாகவும் கட்சி க்கொடிகள் ஊன்றப்பட்டு இருந்தன. இந்நிலையில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் லோகிராஜன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவிக்க வந்தனர். அப்போது அ.ம.மு.க. நிர்வாகிகளும் மாலை அணிவிக்க வந்ததால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    கட்சி நிர்வாகிகள் கார சாரமாக மோதிக்கொண்ட நிலையில் கொடிக்கம்பங்களையும் மாற்றி மாற்றி பறித்து எறிந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் இருதரப்பின ரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இருந்தபோதும் அதனை கேட்காமல் அ.தி.மு.க., அ.ம.மு.க. நிர்வாகிகள் வாக்குவாதம் செய்ததால் பதட்டமான சூழல் உருவானது.

    கனவில் வேண்டுமானால் ஸ்டாலின் முதலமைச்சராகலாம், எந்தக் காலத்திலும் முதல்வராக முடியாது என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #EdappadiPalanisamy #Stalin
    நெல்லை:

    நெல்லையில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் பழனிசாமி இன்று பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    எம்.ஜி.ஆர் தமிழக தலைவர் மட்டுமல்ல, தேசிய தலைவர். எம்.ஜி.ஆர் காலத்தில் தான் தமிழகத்தில் நிறைய திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

    கல்வி, மருத்துவம், விளையாட்டு, மின்சாரம் உள்ளிட்ட துறைகளில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. காவிரி பிரச்னைக்காக சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றது அதிமுக அரசு. ஜெயலலிதாவின் திட்டங்கள் அனைத்தும் உயிரோட்டம் உள்ளவை. யாராலும் அழிக்க முடியாது.

    கோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர். கனவில் வேண்டுமானால் ஸ்டாலின் முதலமைச்சராகலாம். எந்தக் காலத்திலும் முதல்வராக முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #EdappadiPalanisamy #Stalin
    ×