என் மலர்
நீங்கள் தேடியது "Marxist Communist State Secretary"
- மாநாட்டில், தன்னை பதவிகளில் இருந்து விடுவிக்குமாறு கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை வைத்தார்.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில புதிய செயலாளராக சண்முகம் தேர்வு.
விழுப்புரம் மாநில மாநாட்டில் இன்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில புதிய செயலாளராக தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவரும், கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான சண்முகம் தேர்வு செய்யப்பட்டார்.
விழுப்புரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாட்டில், 80 உறுப்பினர்களால் சண்முகம் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில புதிய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சண்முகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தமிழ் மாநிலச் செயலாளராகப் பொறுப்பேற்றிருக்கும் தோழர் பெ.சண்முகம் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் விவசாயத் தோழர்களுக்காகவும் உழைத்த அவருக்கு கடந்த ஆண்டு அண்ணல் அம்பேத்கர் விருதை கழக அரசு வழங்கியது. அத்தகைய சிறப்புக்குரிய தோழர் சண்முகம் சிபிஐஎம்-ன் மாநில புதிய மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
கடந்த பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற சக்திகளின் ஒருங்கிணைப்புக்கும், கழகக் கூட்டணியின் அனைத்து வெற்றிகளுக்கும் எந்நாளும் உழைத்த தோழர் கே. பாலகிருஷ்ணன் அவர்களின் பணிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடைபெற்றிருந்தாலும் மக்கள் பணிக்கு விடைகொடுக்காமல் நாளும் உழைப்பவர் தோழர் கே.பாலகிருஷ்ணன் என்பதை நாடறியும்.
இரு தோழர்களும் தங்கள் பணியைத் தொய்வின்றித் தொடர வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:-
அன்புமணி ராமதாஸ் பாராளுமன்ற தேர்தலில் டெபாசிட் இழப்பார். அ.தி.மு.க. கூட்டணிக்கு யார் தலைமை ஏற்கின்றனர் என்றே தெரியவில்லை. ஒற்றுமையில்லாத கூட்டணி அ.தி.மு.க. கூட்டணிக்கு நீட் தேர்வு ரத்து, எட்டுவழி சாலை, மது ஒழிப்பு போன்ற பிரச்சினைகளில் ஒன்றுமையில்லை.
ஆட்சி முடியும் போது ராமதாஸ் 10 கோரிக்கைகளை கொடுத்து என்ன பயன். வாக்குசாவடியை கைப்பற்றுவோம் என பேசிய பாராளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தேர்தலில் வன்முறையை உருவாக்க வேண்டும் என்பதே நோக்கமாக கொண்டு பேசுகிறார்.
தேர்தல் ஆணையம் அன்புமணியை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நரேந்திர மோடி விவசாய கடன்களை ரத்து செய்யவில்லை. டெல்லியில் போராடிய விவசாயிகளை அழைத்து பேசவில்லை. மாறாக வசதி படைத்த தொழிலதிபர்களின் 36,200 கோடியை ரத்து செய்துள்ளார்.
பிரதமர் விவசாய கடன்களை செய்து செய்வாரா. பா.ம.க. சாதியை சொல்லி மக்களை திரட்டுகிறது. சாதி பெயரால் ஒரு குடும்பமே வாழ்கிறது. சண்டைகளை உருவாக்குகிறது பா.ம.க. வன்னிய இளைஞர்களுக்கு ராமதாஸ் என்ன செய்தார். பி.ஜே.பி. மதக் கலவரங்களை உருவாக்குகிறது. மகாத்மாவை படுகொலை செய்த இயக்க ஆர்.எஸ்.எஸ்., அ.தி.மு.க. குழப்பத்திற்கான கூட்டணி. 18 தொகுதி இடைத்தேர்தல், 40 தொகுதிகளிலும் வெற்றிபெற்று விரைவில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்பார்.
இவ்வாறு அவர் பேசினார். #tamilnews






