search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lok Sabha Election 2019"

    தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து வருவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் மோடியிடம் தேர்தல் ஆணையம் சரணடைந்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்தல் நேற்று நிறைவடைந்தது. ஓட்டு எண்ணிக்கை வருகிற மே 23-ந் தேதி நடைபெறுகிறது.

    தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும் போது பிரதமர் மோடி கேதார்நாத் சென்றதையும், அதற்கு தொலைக்காட்சி சேனல்கள் முக்கியத்துவம் அளித்ததையும் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தை விமர்சித்துள்ளன.


    இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

    தேர்தல் பத்திரங்கள், மின்னணு எந்திர வாக்குப்பதிவை அமல்படுத்தியதில் இருந்து தேர்தல் தேதியை நிர்ணயித்தது, நமோ டி.வி.யை அனுமதித்தது, மோடியின் ராணுவம் என்ற பேச்சை ஏற்றுக்கொண்டது, இப்போது, கேதார்நாத்தில் நடந்த நாடகம் வரை தேர்தல் கமிஷன், மோடி மற்றும் அவரது குழு முன்பு சரணடைந்துவிட்டது, எல்லா இந்தியர்களுக்கும் தெளிவாக தெரிந்துவிட்டது.

    தேர்தல் ஆணையம், அச்சத்துடனும், மரியாதையுடனும் பார்க்கக்கூடியதாக முன்பு இருந்தது. இனிமேல் அப்படி இருக்காது. இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் இன்று ஏழாம் கட்டமாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் மாலை 5 மணி நிலவரப்படி 53.03 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவைவில் உள்ள 543 தொகுதிகளுக்கு, ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதில் பணப் பட்டுவாடா புகார் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள வேலூர் பாராளுமன்ற தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

    அதைதொடர்ந்து, ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி ஆறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. எட்டு மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 
     
    பிற்பகல் 5 மணி நிலவரப்படி மாநில வாரியாக பதிவான வாக்கு சதவீதம் தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

    8 மாநிலங்களையும் ஒப்பிடுகையில் அதிகபட்சமாக ஜார்கண்ட் மாநிலத்தில் 66.64 சதவீதம் வாக்குகள் பதிவாகின. 

    அதற்கு அடுத்தபடியாக, மேற்கு வங்காளம் மாநிலத்தில் 64.87 சதவீதம் வாக்குகளும், மத்தியப்பிரதேசத்தில் 59.75 சதவீதம் வாக்குகளும், இமாச்சலப்பிரதேசத்தில் 57.43 சதவீதம் வாக்குகளும், சண்டிகரில் 51.18 சதவீதம் வாக்குகளும், பஞ்சாப்பில் 50.49 சதவீதம் வாக்குகளும், பீகாரில் 46.75 சதவீதம் வாக்குகளும், உத்தரபிரதேசத்தில் மிகவும் குறைந்தபட்சமாக 47.21 சதவீதம் வாக்குகளும் பதிவாகின. 

    மேற்கண்ட 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளிலும் ஒட்டுமொத்தமாக 53.03 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
    பாராளுமன்றத்துக்கு ஆறாம் கட்டமாக இன்று நடைபெற்ற தேர்தல் நிறைவடைந்த நிலையில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் அதிகபட்சமாக 80.16 சதவீதம் வாக்குகள் பதிவானது.
    புதுடெல்லி: 

    பாராளுமன்றத்துக்கு கடந்த மாதம் 11-ந்தேதி தொடங்கி 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. ஏப்ரல் 11-ந்தேதி 91 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 18-ந்தேதி 96 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 23-ந்தேதி 116 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 29-ந்தேதி 71 தொகுதிகளுக்கும், மே 5-ம் தேதி 51 தொகுதிகளிலும் ஐந்து கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. 

    இந்நிலையில், மேற்கு வங்காளம், டெல்லி, அரியானா, உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட், மத்தியப்பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் ஆறாம் கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. 

    இந்த தேர்தலில்  ஓட்டுரிமை பெற்ற 10 கோடியே 17 லட்சத்து 82 ஆயிரத்து 472 வாக்காளர்கள் 979 வேட்பாளர்களின் அரசியல் தலைவிதியை நிர்ணயிப்பதற்காக 1 லட்சத்து 13 ஆயிரத்து 167 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 

    இன்று காலையில் தொடங்கிய வாக்குப்பதிவு நிறைவடைந்து, இரவு 6 மணி நிலவரப்படி கிடைத்த தகவலின்படி மேற்கு வங்காளம் மாநிலத்தில் மிக அதிகபட்சமாக 80.16 சதவீதம் வாக்குகளும் டெல்லியில் 58.01 சதவீதம் வாக்குகளும் அரியானாவில் 65.48 சதவீதம் வாக்குகளும் பதிவாகின. 

    உத்தரப்பிரதேசத்தில் 54.24 சதவீதம் வாக்குகளும் பீகாரில் 59.29 சதவீதம் வாக்குகளும் ஜார்கண்டில் 64.50 சதவீதம் வாக்குகளும் மத்தியப்பிரதேசத்தில் 62.06 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன. 

    மேற்கண்ட 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக  62.27 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.
    குஜராத்தில் நிறுவப்பட்டு உள்ள, உலகின் உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலையை காங்கிரஸ் தலைவர்கள் இதுவரை பார்வையிடாதது ஏன்? என பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். #LokSabhaElection #SardarPatel #Nehru #PMModi
    அம்ரேலி:

    குஜராத்தில் நிறுவப்பட்டு உள்ள, உலகின் உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலையை காங்கிரஸ் தலைவர்கள் இதுவரை பார்வையிடாதது ஏன்? என பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.

    சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை மந்திரியான சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத்தின் நர்மதை நதிக்கரையில் 182 மீட்டர் உயரத்தில் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. சுமார் ரூ.2,389 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ள இந்த சிலை பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

    இந்த சிலையை நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். எனினும் இதை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னணி தலைவர்கள் யாரும் இதுவரை பார்வையிடவில்லை என பிரதமர் மோடி குற்றம் சாட்டி உள்ளார்.

    குஜராத்தின் அம்ரேலி தொகுதியில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்தியாவின் இரும்பு மனிதரான சர்தார் படேலின் சிலையை இதுவரை 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து சென்றிருக்கின்றனர். ஆனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னணி தலைவர்களில் ஒருவர் கூட இதுவரை படேல் சிலையை பார்க்க வரவில்லை. படேலை தங்கள் கட்சியை சேர்ந்தவர் என சொந்தம் கொண்டாடிவரும் காங்கிரசார் அவரது சிலையை பார்க்க வராதது ஏன்?

    ஜவஹர்லால் நேருவை அவமதிப்பதற்காகவோ, சிறுமைப்படுத்துவதற்காகவோ படேல் சிலையை நிறுவவில்லை. இது (படேல் சிலை), நான் உள்பட லட்சக்கணக்கான இந்தியர்களின் உண்மை மற்றும் மரியாதை சார்ந்த விஷயம். ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிய போது, நாட்டை ஒருங்கிணைத்த படேலுக்கு நாம் செலுத்தவேண்டிய நன்றிக்கடன் இது.

    நாடு சுதந்திரம் பெற்ற பின் காஷ்மீர் விவகாரத்தை படேலிடம் கொடுக்காமல், நேரு தன்னுடனேயே வைத்துக்கொண்டதால் 70 ஆண்டுகள் கடந்த பிறகும் காஷ்மீர் பிரச்சினை தீர்க்க முடியாமல் இருந்து வருகிறது. உண்மையை சொல்லப்போனால் அரசியல் ஆதாயத்துக்காக காஷ்மீர் பிரச்சினையை தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருப்பது காங்கிரசின் கொள்கை ஆகும்.

    காஷ்மீர் மாநிலம் முழுவதும் பரவி இருந்த பயங்கரவாதத்தை 2½ மாவட்டங்களுக்குள்ளாக நாங்கள் சுருக்கி விட்டோம். கடந்த 5 ஆண்டுகளில் வேறு எந்த பகுதிகளிலும் குண்டுவெடிப்பு நிகழவில்லை.

    கடந்த காலங்களில் புனே, ஆமதாபாத், காஷ்மீர், காசி, ஜம்மு என சீரான இடைவெளிகளில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்து வந்தன. ஆனால் தற்போது அனைத்து பகுதிகளிலும் அமைதி நிலவுகிறது. இது நாட்டுக்கான சேவையாக நீங்கள் பார்க்கவில்லையா? தற்போது நீங்கள் பாதுகாப்பாக உணரவில்லையா?

    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட்டில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதால் பாகிஸ்தான் முதல் முறையாக கதறியது. மோடி தயவுசெய்து போனை எடுங்கள் என அலறினர். அவர்களை அந்த நிலைக்கு நாம் தள்ளிவிட்டோம்.

    டோக்லாமில் 2017-ம் ஆண்டு சீனப்படையினரின் கட்டுமான பணிகளை இந்தியா தடுத்து நிறுத்தியதால் ஏற்பட்ட பதற்றத்தின் போது, நாட்டின் பிற பகுதிகளை சேர்ந்த மக்கள் என்னிடம், கூடுதல் கவனமாக இருக்குமாறு தெரிவித்தனர். ஆனால் எனது சொந்த மாநிலமான குஜராத்தை சேர்ந்த மக்களோ, எனது மன உறுதியை வலுப்படுத்தினர். இதற்காக நன்றி கூறிக்கொள்கிறேன்.

    நாடு சுதந்திரம் பெற்ற பின் முதல் முறையாக கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் குறைவான தொகுதிகளை காங்கிரஸ் பெற்றது. அதைப்போல முதல் முறையாக இந்த தேர்தலில்தான் அந்த கட்சி குறைவான இடங்களில் போட்டியிடுகிறது. இதுதான் குஜராத்தை சேர்ந்த ஒரு தேநீர் வியாபாரியின் சக்தி ஆகும்.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.  #LokSabhaElection #SardarPatel #Nehru #PMModi 
    ஏப்ரல் 1-ந்தேதிக்கு பிறகு எல்லா மாநிலங்களிலும் காங்கிரசுக்கு ஆதரவாக தனது சுற்றுப்பயணத்தை தொடங்குவதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #Congress #Kushboo
    சென்னை:

    காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு நட்சத்திர பேச்சாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மன்மோகன்சிங், அசாருதீன், சித்து, ஜோதிர் ஆதித்யா சிந்தியா, சச்சின் பைலட், குஷ்பு, நக்மா, விஜயசாந்தி, ராஜ்பப்பர் உள்பட 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை காங்கிரஸ் நேற்று அறிவித்தது.


    காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக எப்போது தேர்தல் பிரசாரத்தை தொடங்கப் போகிறீர்கள் என்று நடிகை குஷ்புவிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

    வேட்புமனு தாக்கல் இன்றுதான் முடிகிறது. அதை தொடர்ந்து மனுக்கள் பரிசீலனை செய்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அதனால் எனது தேர்தல் சுற்றுப்பயணத்தை இன்னும் முடிவு செய்யவில்லை.

    நான் கன்வீனராகவும் இருப்பதால் தலைமையில் கேட்டுதான் முடிவு செய்ய வேண்டும்.

    மேலும் தமிழகத்தில் மட்டும் நான் தேர்தல் பிரசாரம் செய்யவில்லை. எல்லா மாநிலங்களிலும் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய இருக்கிறேன். ஏப்ரல் 1-ந்தேதிக்கு பிறகு எனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #Congress #Kushboo
    ×