search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kilbhavani"

    திருப்பூர்:

    கீழ்பவானி முறை நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் இன்று திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    கீழ்பவானி கால்வாயில் தண்ணீர் கடைமடை பகுதியான மங்கலப்பட்டிக்கும்மங்களப்பட்டியை அடுத்துள்ள மொஞ்சனூர், அஞ்சூர் கிராமங்களுக்கு முற்றாக வராமல் நின்றுபோனது.மங்களப்பட்டி பகுதிக்கு மிகமிகக் குறைவான அளவில் தண்ணீர் வந்துவயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

    நெல் நாற்றங்கால் தயாரிக்கநாற்றங்கால்களுக்கு தண்ணீர் விட முடியாமலும் மிகப்பெரிய சிக்கலுக்கு ஆளாகியுள்ளோம். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கீழ் பவானிக் கால்வாயில் திருப்பூர்மாவட்டத்தில் உள்ள ஆயக்கட்டு நிலங்களுக்கு போதிய தண்ணீரைப் பெற்று கொடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

    • 2 ஆயிரம் கன அடி வரை கால்வாய்களின் இரு கரைகளையும் தொட்டபடி பாய்ந்து சென்று வருகிறது.
    • தண்ணீர் அதிக அளவு செல்வதாலும், உயிருக்கு ஆபத்தான விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    வெள்ளகோவில்

    திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே வள்ளியரச்சல் பஸ் நிறுத்தம் அருகில் தென்புறம் கீழ்பவானி பாசன கால்வாய் செல்கிறது.அணையில் இருந்து கீழ்பவானி பாசன பிரதான கால்வாயில் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் இப்பகுதியை கடந்து செல்லும் தண்ணீர் தற்போது வினாடிக்கு சுமார் 2 ஆயிரம் கன அடி வரை கால்வாய்களின் இரு கரைகளையும் தொட்டபடி பாய்ந்து சென்று வருகிறது.

    இந்த நிலையில் வள்ளியரச்சல் பஸ் நிறுத்தம் அருகில் செல்லும் கீழ்பவானி பாசன கால்வாய் பாலத்தின் இருபுறமும் இப்பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்கள் மற்றும் அருகில் உள்ள நகர, கிராம பகுதிகளை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள், தனியார் நிறுவன ஊழியர்கள், வடமாநில தொழிலாளர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் நேரில் வந்து கால்வாயின் உள்ளே படிக்கட்டுகளில் இறங்கி நீரில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்து உள்ளனர்.

    இதுபற்றி போலீசார் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- வள்ளியரச்சல் கீழ்பவானி பாசன கால்வாய் பாலத்தின் இருபுறமும் அகலமாகவும், உள் பகுதி மிகவும் ஆழமான பகுதியாக இருப்பதாலும், கால்வாயில் தற்போது தண்ணீர் அதிக அளவு செல்வதாலும், உயிருக்கு ஆபத்தான விபத்து ஏற்படும் அபாயம் உள்ள பகுதி என்றும், இங்கு தண்ணீரில் இறங்கி குளிப்பவர்கள் எதிர்பாராதவிதமாக உள்ளே தவறி விழுந்து நீரில் வேகமாக அடித்து செல்ல வாய்ப்பு உள்ளது என்றும், இதனால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது என கருதி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். மேலும் இப்பகுதியில் கீழ்பவானி பாசன கால்வாயில் குளிப்பதற்கு தடை என போலீசார் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைத்து உள்ளனர்.மேலும் இந்த கீழ்பவானி பாசன கால்வாய் பகுதியில் மேல்புற பகுதிகளில் பாலத்தின் மேலே அமர்ந்து இரவு நேரங்களில் மது அருந்தவும், போதை நிலையில் தண்ணீரில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்படுவதாகவும், இதை மீறுபவர்கள் மீது உரிய சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • அ.தி.மு.க. ஆட்சியில் மத்திய அரசால் ரூ.940 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பிரதமா் மோடி கீழ்பவானி பாசனக் கால்வாய் புனரமைப்பு துவக்கிவைத்தாா்
    • சில விவசாய சங்கங்கள் சாா்பில் கால்வாய்களுக்கு கான்கிரீட் தளம் போடக்கூடாது என எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    வெள்ளகோவில் :

    வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே கீழ்பவானி பாசனக் கால்வாய் புனரமைப்பு செய்வது குறித்து பா.ஜ.க. சாா்பில் ஆய்வு செய்யும் பணி தொடங்கப்பட்டது. முத்தூா் மங்களப்பட்டியில் பா.ஜ.க. விவசாய அணி மாநிலத் தலைவா் ஜி.கே.நாகராஜ் இதனை தொடங்கி வைத்தாா்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மத்திய அரசால் ரூ.940 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பிரதமா் மோடி இதனை துவக்கிவைத்தாா்.ஆனால், சில விவசாய சங்கங்கள் சாா்பில் கால்வாய்களுக்கு கான்கிரீட் தளம் போடக்கூடாது என எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. அச்சமயத்தில் நடந்த தோ்தல் பிரசாரத்தில் விவசாயிகளின் கருத்தறிந்து திட்டம் நிறைவேற்றப்படும் என தி.மு.க. தலைவா் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தாா்.

    விவசாயிகளின் மற்றொரு தரப்பினா் கால்வாய்களுக்கு கான்கிரீட் போட வேண்டும் என்றனா்.இந்நிலையில், கீழ்பவானி வாய்க்காலில் மங்களப்பட்டி முதல் அரச்சலூா் வரை மதகுகள், கரைகள் எப்படி இருக்கிறது என்பது குறித்துநேரடியாக ஆய்வு செய்து, விவசாயிகளிடம் கருத்துக்களைக் கேட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு அறிக்கை சமா்ப்பிக்கப்படும் என்று பா.ஜ.க.வினா் தெரிவித்தனா்.

    ×