என் மலர்
நீங்கள் தேடியது "kidnapped college student"
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள புள்ளிமான் கோம்பை தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் சுருளிவேல். இவரது மகள் வைத்தீஸ்வரி (வயது 17). திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
அதே கல்லூரியில் மதுரை மாவட்டம் உத்தப்ப நாயக்கனூர் பாறைப் பட்டியைச் சேர்ந்த மதி என்பவரும் படித்து வந்துள்ளார். வைத்தீஸ்வரிக்கு அம்மை நோய் ஏற்பட்டதால் கடந்த சில நாட்களாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். செல்போனில் பேசி வந்த மதி யாருக்கும் தெரியாமல் வைத்தீஸ்வரியை கடத்திச் சென்று விட்டார்.
இது குறித்து சுருளிவேல் ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் கடத்தப்பட்ட மாணவியையும் அவரை கடத்திச் சென்ற வாலிபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை:
தி.நகர் கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜூ. இவரது மகள் விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 10-ந்தேதி கல்லூரிக்கு சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து அசோக் நகர் மகளிர் போலிசில் ராஜூ புகார் அளித்தார். மாணவியை வாலிபர் ஒருவர் காஞ்சீபுரம் அருகே கடத்தி சென்றது தெரியவந்தது. உடனடியாக மாணவியை மீட்ட போலீசார் மாணவியை கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த தி.நகர் கக்கன் காலனியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அசோக்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார்பட்டியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. அவரது மகள் கிறிஸ்டினா மேரி (வயது 19). இவர் பெரியகுளம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து வந்தார். இவர் தினசரி கல்லூரிக்கு பஸ்சில் செல்வது வழக்கம். அதன்படி நேற்று கல்லூரிக்கு சென்ற கிறிஸ்டினா மேரி இரவு வரை வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த ஆரோக்கியசாமி தனது மகளை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து நிலக்கோட்டை போலீசில் புகார் செய்தார். புகார் மனுவில் சிலுக்குவார் பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியம் மகன் அருளப்பன் (27) என்பவர் கடத்திச் சென்று விட்டதாக கூறியுள்ளார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் கருப்பசாமி தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து கிறிஸ்டினா மேரியை கடத்திச் சென்று விட்டதாக அருளப்பனை தேடி வருகிறார்கள்.
மதுரை:
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அய்யூரை சேர்ந்தவர் சின்னழகன். இவரது மகள் பாண்டிமீனா (வயது 19). கல்லூரி மாணவி.
இவர் அழகர்நாயக்கன் பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டில் சில நாட்கள் தங்கி இருந்தார். இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து கல்லூரிக்கு செல்வதற்காக அய்யூர் புறப்பட்டதாக தெரிகிறது.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற வாலிபர் பாண்டிமீனாவை கடத்தி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அலங்கா நல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட மாணவியை தேடி வருகிறார்கள்.






