என் மலர்

    செய்திகள்

    நிலக்கோட்டை அருகே கல்லூரி மாணவியை கடத்திய வாலிபர்
    X

    நிலக்கோட்டை அருகே கல்லூரி மாணவியை கடத்திய வாலிபர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நிலக்கோட்டை அருகே கல்லூரி மாணவியை கடத்தியதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார்பட்டியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. அவரது மகள் கிறிஸ்டினா மேரி (வயது 19). இவர் பெரியகுளம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து வந்தார். இவர் தினசரி கல்லூரிக்கு பஸ்சில் செல்வது வழக்கம். அதன்படி நேற்று கல்லூரிக்கு சென்ற கிறிஸ்டினா மேரி இரவு வரை வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த ஆரோக்கியசாமி தனது மகளை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து நிலக்கோட்டை போலீசில் புகார் செய்தார். புகார் மனுவில் சிலுக்குவார் பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியம் மகன் அருளப்பன் (27) என்பவர் கடத்திச் சென்று விட்டதாக கூறியுள்ளார்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் கருப்பசாமி தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து கிறிஸ்டினா மேரியை கடத்திச் சென்று விட்டதாக அருளப்பனை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×