search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kasimedu Fishermen"

    • காசிமேட்டில் கடல் அன்னைக்கு பூஜை செய்து வழிபட்டனர். மேலும் மலர் தூவியும் பால் ஊற்றியும், கற்பூரம் ஏற்றியும் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
    • கடுமையான டீசல் விலையேற்றம் காரணமாக காசிமேட்டில் இருந்து 300 விசைப்படகுகள் என 25 சதவீத படகுகள் மட்டுமே கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுள்ளன.

    ராயபுரம்:

    தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் நேற்று வரை (14-ந்தேதி) 61 நாட்கள் இருந்தது. தடை காலம் முடிந்ததை தொடர்ந்து நேற்று நள்ளிரவு முதல் விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க புறப்பட்டனர்.

    காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகு மீனவர்கள் உற்சாகத்துடன் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.

    கரை திரும்ப ஒரு வாரத்துக்கு மேல் ஆகும் என்பதால் தேவையான டீசல், ஐஸ் கட்டிகள், தண்ணீர்கேன் என அனைத்தையும் தங்களது விசைப்படகுகளில் ஏற்றிக்கொண்டு அதிகாலை முதல் புறப்பட்டனர்.

    முன்னதாக காசிமேட்டில் கடல் அன்னைக்கு பூஜை செய்து வழிபட்டனர். மேலும் மலர் தூவியும் பால் ஊற்றியும், கற்பூரம் ஏற்றியும் சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில் திரளான மீனவர்கள் கலந்து கொண்டு வழிபட்டு ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    கடுமையான டீசல் விலையேற்றம் காரணமாக காசிமேட்டில் இருந்து 300 விசைப்படகுகள் என 25 சதவீத படகுகள் மட்டுமே கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுள்ளன.

    இதுகுறித்து விசைப்படகு உரிமையாளர் விஜேஷ் கூறும்போது, மீனவர்கள் அனைவரும் கடலை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகிறோம். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா நோய்த்தொற்றின் காரணமாகவும், பெட்ரோல் -டீசல் விலை உயர்வு காரணமாகவும் எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது.

    இந்த ஆண்டு எங்களது வாழ்வாதாரம் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக தொழிலுக்கு செல்வதற்கு முன்னதாக கடல் அன்னைக்கு பூஜை செய்து வழிபட்டோம். காசிமேட்டில் மொத்தம் 1200 விசைப்படகுகள் உள்ளன. டீசல் விலை உயர்வு காரணமாக சுமார் 300 விசைப்படகுகள் மட்டும் கடலுக்குள் சென்று உள்ளன என்றார்.

    மீன்பிடி தடைகாலம் முடிந்து உள்ளதால் வரும் நாட்களில் மீன்விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 1,200-க்கும் மேற்பட்ட விசைப்படகு, 800-க்கும் மேற்படட பைபர்படகுகளில் மீனவர்கள் மீன்படி தொழில் செய்து வருகின்றனர்.
    • விசைப்படகில் சென்று ஆழ்கடலில் மீன்பிடிக்க குறைந்தபட்சம் ரூ.6 லட்சம் வரை செலவாகும்.

    ராயபுரம்:

    தமிழகத்தில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜுன் 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் ஆண்டுதோறும் இருந்து வருகிறது. இந்த ஆண்டு மீன்பிடி தடைகாலம் இன்றுடன் (14-ந்தேதி) முடிவடைகிறது.

    இதைத்தொடர்ந்து ஆழ்கடலுக்கு செல்லும் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க தயாராகி வருகிறார்கள்.

    காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 1,200-க்கும் மேற்பட்ட விசைப்படகு, 800-க்கும் மேற்படட பைபர்படகுகளில் மீனவர்கள் மீன்படி தொழில் செய்து வருகின்றனர். மீன்பிடி தடைகாலத்தையொட்டி விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. அவர்கள் தங்களது படகுகளை சரிபார்ப்பது, வர்ணம் பூசுவது, வலைகளை சரி பார்ப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே மீன்பிடி தடைகாலம் இன்றுடன் முடிவதால் இன்று நள்ளிரவு முதல் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப் படகுகளில் மீனவர்கள் செல்ல தயார் நிலையில் உள்ளனர்.

    ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் விசைப்படகுகள் ஒரு வாரம் முதல் 15 நாட்கள் வரை நடுக்கடலில் தங்கி மீன் பிடித்து வருவவது வழக்கம். இதனால்மீனவர்கள் தங்களுக்கு தேவையான டீசல், ஐஸ் கட்டிகள், ரேஷன் பொருட்கள், தண்ணீர் கேன்கள் உள்ளிட்டவற்றை விசைப்படகுகளில் ஏற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.

    டீசல் விலை உயர்வு காரணமாக காசிமேட்டில் இருந்து 25 சதவீத விசைப்படகுகளில் மட்டுமே மீனவர்கள் மீன்பிடிக்க செல்வார்கள் என்று தெரிகிறது. 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குள் செல்ல தயார் நிலையில் உள்ளது. இதற்கிடையே விசைப்படகுகளில் கொண்டு செல்லும் ஐஸ்கட்டிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக மீனவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    விசைப்படகில் சென்று ஆழ்கடலில் மீன்பிடிக்க குறைந்தபட்சம் ரூ.6 லட்சம் வரை செலவாகும். கடுமையான டீசல் விலை உயர்வால் தொடர்ந்து இந்த தொழிலை நடத்துவதற்கு சிரமமாக உள்ளது. எதிர்பார்த்த அளவு மீன் சிக்க வில்லை என்றால் அதிக நஷ்டத்தை சந்திக்க வேண்டும். இதனால் பெரும்பாலான விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. 25 சதவீதம் அளவில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மட்டும் இன்று கடலுக்குள் மீன்பிடிக்க செல்கின்றன என்றார்.

    மீன்பிடி தடைகாலத்தில் மீன்விலை அதிகஅளவு உயர்ந்து இருந்தது. தற்போது விசைப்படகுகள் கடலுக்குள் செல்ல உள்ளதால் அடுத்த வாரம் முதல் மீன் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • கடந்த 61 நாட்களாக காசிமேடு மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லாததால் மீன்வரத்து குறைவாகவே காணப்பட்டது.
    • நாளை நள்ளிரவு செல்லும் பெரும்பாலான விசைப்படகு மீனவர்கள் வருகிற ஞாயிற்றுக்கிழமை கரை திரும்புவார்கள்.

    ராயபுரம்:

    தமிழகத்தில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் ஆண்டுதோறும் இருந்து வருகிறது.

    இந்த ஆண்டு மீன்பிடி தடைகாலம் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் நாளையுடன் (14-ந்தேதி) முடிவடைகிறது.

    இதைத்தொடர்ந்து ஆழ்கடலுக்கு செல்லும் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க தயாராகி வருகிறார்கள்.

    காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 1,200-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள், 800-க்கும் மேற்பட்ட பைபர்படகு மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். மீன்பிடி தடைகாலத்தையொட்டி விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.

    அவர்கள் தங்களது படகுகளை சரிபார்ப்பது, வர்ணம் பூசுவது, வலைகளை சரி பார்ப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே மீன்பிடி தடைகாலம் நாளையுடன் முடிவதால் நாளை நள்ளிரவு முதல் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பெரும்பாலான விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல உள்ளனர்.

    ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் விசைப்படகுகள் ஒரு வாரம் முதல் 15 நாட்கள் வரை நடுக்கடலில் தங்கி மீன் பிடித்து வருவது வழக்கம். இதனால் மீனவர்கள் தங்களுக்கு தேவையான டீசல், ஐஸ் கட்டிகள், ரேஷன் பொருட்கள், தண்ணீர் கேன்கள் உள்ளிட்டவற்றை விசைப்படகுகளில் ஏற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.

    கடந்த 61 நாட்களாக காசிமேடு மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லாததால் மீன்வரத்து குறைவாகவே காணப்பட்டது. இதனால் மீன்களின் விலை அதிகமாக இருந்தது.

    நாளை நள்ளிரவு செல்லும் பெரும்பாலான விசைப்படகு மீனவர்கள் வருகிற ஞாயிற்றுக்கிழமை கரை திரும்புவார்கள். எனவே அடுத்த வாரம் முதல் பெரியவகை மீன்கள் விற்பனைக்கு வரும் என்றும் மீன் விலையும் குறையும் என்று அசைவ பிரியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் தருவைகுளம், வேம்பார், தாளமுத்து நகர், வெள்ளப்பட்டி, திரேஸ்புரம், இனிகோ நகர், தெர்மல் நகர், புன்னைக் காயல், மணப்பாடு, பெரிய தாழை உள்பட மாவட்டம் முழுவதும் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகு கள் மூலம் சுமார் 10 ஆயிரம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க தயாராகி வருகிறார்கள்.

    மீனவர்கள் நாளை நள்ளிரவு மீன்பிடிக்கச் செல்ல தயாராகி வருகின்றனர். அதன்படி தொண்டி, ராமேசுவரம், மண்டபம், பாம்பன், கீழக்கரை, பெரியபட்டினம், முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள ஆயிரக் கணக்கான மீனவர்கள் கடலுக்கு செல்வ தற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    பெய்ட்டி புயல் காரணமாக காசிமேடு மீனவர்கள் 300 பேர் ஆந்திராவில் தஞ்சம் அடைந்து உள்ளனர். #KasimeduFishermen

    சென்னை:

    காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 1200-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலில் மீன்பிடித்து வருகிறார்கள்.

    பெய்ட்டி புயல் காரணமாக கடலுக்குள் சென்ற மீனவர்கள் கரை திரும்பும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் குறைந்த தூரத்தில் இருந்த மீனவர்கள் உடனடியாக கரை திரும்பினர்.

    ஆனால் ஆழ்கடலில் மீன்பிடித்த 100-க்கும் மேற்பட்ட விசைப்படகில் இருந்த 300 மீனவர்கள் கரை திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து அவர்களை அருகில் உள்ள ஆந்திரா பகுதிக்கு செல்லுமாறு வயர்லெஸ் மூலம் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காசிமேடு மீனவர்கள் ஆந்திரா மாநிலம் கிருஷ்ணாபட்டினம் அருகே பத்திரமாக கரை சேர்ந்தனர்.

    300 மீனவர்கள் அங்கு தஞ்சம் அடைந்து உள்ளனர். காசிமேடு மீனவர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக மீன்வளத்துறை உதவி இயக்குனர் சுதா தெரிவித்தார். #KasimeduFishermen

    காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்க சென்று கரை திரும்பாமல் மாயமான 6 மீனவர்கள் நள்ளிரவு 1 மணிக்கு கரை திரும்பினார்கள். #Fishermen
    ராயபுரம்:

    புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த விஜயகுமார், ஆசைத்தம்பி, மணி, முத்து, சுரேஷ், முருகேசன் ஆகிய 6 மீனவர்கள் பைபர் படகில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் 1-ந்தேதி கரை திரும்பி இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் கரை திரும்பாமல் மாயமானார்கள்.

    இதையடுத்து கடலோர காவல் படையினர் 2 படகுகளில் கடலுக்கு சென்று மாயமான மீனவர்களை தேடினார்கள். இந்த நிலையில் மாயமான 6 மீனவர்களும் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு கரை திரும்பினார்கள். அவர்கள் சென்ற படகு 2 என்ஜின்களை கொண்ட பைபர் படகு ஆகும். அதில் ஒரு என்ஜின் பழுதானது. ஜி.பி.ஆர்.எஸ். கருவியும் வேலை செய்யவில்லை. இதனால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஒரு என்ஜின் மூலம் படகை மெதுவாக இயக்கி கரைவந்து சேர்ந்தோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார். #Fishermen


    ×