search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kandashashti Festival"

    • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ந்தேதி தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 18-ந்தேதி அன்று மாலை 4 மணிக்கு நடைபெறும்.
    • மறுநாள் இரவு திருக்கல்யாணம் நடைபெற்று திருவிழா நிறைவு பெறும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ந்தேதி தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 18-ந்தேதி அன்று மாலை 4 மணிக்கு நடைபெறும். மறுநாள் இரவு திருக்கல்யாணம் நடைபெற்று திருவிழா நிறைவு பெறும்.

    திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும் முக்கிய நாட்களான 17, 18 ஆகிய நாட்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பக்தர்களின் பாதுகாப்பு வசதியை கருத்தில் கொண்டு போக்குவரத்து மாற்றம், வாகன நிறுத்தும் இடங்கள் மற்றும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மூலம் செய்யப்பட்டுள்ளது.

    பொது போக்குவரத்து மாற்று வழித்தடங்கள்

    தூத்துக்குடி, ஆறுமு கநேரி மார்க்கமாக திருச்செந்தூரை கடந்து குலசேகரன்பட்டினம், உவரி வழியாக கன்னியாகுமரி செல்லும் வாகனங்களும், அதே போல் திருச்செந்தூரை கடந்து உடன்குடி, திசையன்விளை, சாத்தான்குளம் வழி யாக நாகர்கோவில் செல்லும் வாகனங்களும் திருச்செந்தூரை கடந்து செல்ல முடியாதபட்சத்தில் அவைகள் ஆறுமுகநேரி டி.சி.டபிள்யு. ஜங்ஷன், நெல்லை ரோடு நல்லூர் 'வி' ஜங்ஷன், ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், காயாமொழி, பரமன்குறிச்சி வழியாக செல்லவும்.

    அல்லது வீரபாண்டி யன்பட்டிணம் சண்முகபுரம் ெரயில்வே கேட், ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், காயாமொழி, பரமன்குறிச்சி வழியாக செல்லவும்.

    குரும்பூர் மார்க்க த்தில்இருந்து திருச்செந்தூரை கடந்து குலசேகரன்பட்டினம், உவரி வழியாக கன்னியாகுமரி செல்லும் வாகனங்களும், அதே போல் திருச்செந்தூரை கடந்து உடன்குடி, திசையன்விளை, சாத்தான்குளம் வழியாக நாகர்கோவில் செல்லும் வாகனங்களும் திருச்செந்தூரை கடந்து செல்ல முடியாதபட்சத்தில் அவைகள் நெல்லை ரோடு நல்லூர் 'வி' ஜங்ஷன், ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், காயாமொழி, பரமன்குறிச்சி வழியாக செல்லவும்.

    கன்னியாகுமரி, உவரி, குலசேகரன்பட்டினம் வழியாக திருச்செந்தூரை கடந்து ஆறுமுகநேரி, தூத்துக்குடி அல்லது குரும்பூர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் திருச்செந்தூரை கடந்து செல்ல முடியாதபட்சத்தில் அவைகள் குலசேகரன்பட்டினம், உடன்குடி, பரமன்குறிச்சி, காயாமொழி, காந்திபுரம், ராணிமஹாராஜபுரம், திருநெல்வேலி ரோடு நல்லூர் 'வி' ஜங்ஷன் வழியாக செல்லவும். அல்லது ஆலந்தலை என்.முத்தையாபுரம், செந்தூர் மினரல்ஸ் வாய்க்கால் பாலம், பரமன்குறிச்சி, காயாமொழி, ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், நெல்லை ரோடு நல்லூர் 'வி' ஜங்ஷன் வழியாக செல்லவும்.

    நாகர்கோவில், திசை யன்விளை, சாத்தான்குளம் வழியாக திருச்செந்தூரை கடந்து ஆறுமுகநேரி, தூத்துக்குடி அல்லது குரும்பூர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் திருச்செந்தூரை கடந்து செல்ல முடியாதபட்சத்தில் அவைகள் பரமன்குறிச்சி, காயாமொழி, ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், நெல்லை ரோடு நல்லூர் 'வி' ஜங்ஷன் வழியாக செல்லவும்.

    II அரசு சிறப்பு பேருந்துகள் வந்து செல்லும் வழித்தடங்கள் மற்றும் தற்காலிக பேருந்து நிலையம் சம்மந்தமான விபரங்கள்.

    1.தூத்துக்குடி, ஆறுமுகநேரி வழியாக திருச்செந்தூர் வரும் அரசு சிறப்பு பஸ்கள் அனைத்தும் திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையத்தில் நிறுத்தி, திரும்ப செல்லும் போது அதே வழித்தடம் வழியாக செல்லவும்.

    2.நெல்லை, குரும்பூர் வழியாக திருச்செந்தூர் வரும் அரசு சிறப்பு பேருந்துகள் அனைத்தும் நெல்லை ரோட்டில் உள்ள ஷபி டிரேடர்ஸ் கீழ்புறம் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்தி, திரும்ப செல்லும்போது அதே வழித்தடம் வழியாக செல்லவும்.

    3.கன்னியாகுமரி, உவரி, குலசேகரன்பட்டினம் வழியாக திருச்செந்தூர் வரும் அரசு சிறப்பு பேருந்துகள் அனைத்தும் திருச்செந்தூர் தெப்பகுளம் (முருகாமடம்) பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்தி, திரும்ப செல்லும்போது அதே வழித்தடம் வழியாக செல்லவும்.

    4.நாகர்கோவில், திசை யன்விளை, சாத்தான்குளம், பரமன்குறிச்சி வழியாக திருச்செந்தூர் வரும் அரசு சிறப்பு பேருந்துகள் அனைத்தும் திருச்செந்தூர் தெப்பகுளம் (முருகாமடம்) பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்தி, திரும்ப செல்லும்போது அதே வழித்தடம் வழியாக செல்லவும்.

    திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் தனியார் வாகனங்கள் வந்து செல்லும் வழித்தடம் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடம் சம்மந்தமான விபரங்கள்.

    திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தங்கள் வாகனங்களில் சிரமமின்றியும், போக்குவரத்து நெரிசலின்றியும், பாதுகாப்பாக வந்து செல்வதற்கு சில வழிப்பாதைகள் ஒரு வழிப்பாதையாக மாற்றப் பட்டுள்ளது.

    மேலும் பக்தர்கள் தங்கள் வாகனங்களை பாதுகாப் பாக நிறுத்துவதற்கு தூத்துக்குடி சாலையில் 5 வாகன நிறுத்துமிடங்களும், நெல்லை சாலையில் 6 வாகன நிறுத்துமிடங்களும், பரமன்குறிச்சி சாலையில் 4 வாகன நிறுத்துமிடங்களும் மற்றும் திருச்செந்தூர் டிபி சாலையில் 1 வாகன நிறுத்துமிடமும் சேர்த்து மொத்தம் 16 வாகன நிறுத்துமிடங்கள் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    எனவே திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூறாக சாலையோரங்களில் நிறுத்தாமலும், அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடங்களில் குறுக்கு நெடுக்காக வாகனங்களை நிறுத்தாமல் காவலர்கள் குறிப்பிடும் இடத்தில் வரிசையாக வாகனங்களை நிறுத்தி காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    தூத்துக்குடி, ஆறுமுகநேரி சாலை மார்க்கமாக வந்து திரும்பிச் செல்லும் வாகனங்கள். தூத்துக்குடி, ஆறுமுகநேரி மார்க்கமாக திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் தனியார் வாகனங்கள் தூத்துக்குடி சாலையில் உள்ள ராஜ்கண்ணா நகர் வழியாக ஜெ.ஜெ. நகர் வாகன நிறுத்துமிடம், சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபம் எதிரே உள்ள வாகன நிறுத்துமிடம், அரசு தொழிற்பயிற்சி பள்ளி வளாக வாகன நிறுத்துமிடம், மற்றும் ஆதித்தனார் கல்லூரி மாணவர் விடுதி எதிரே உள்ள வாகன நிறுத்துமிடம் ஆகிய வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்தி, திரும்ப செல்லும் போது அதே வழித்தடம் வழியாக செல்லவும்.

    2. நெல்லை, குரும்பூர் சாலை மார்க்கமாக வந்து திரும்பிச் செல்லும் வாகனங்கள்.

    நெல்லை, குரும்பூர் சாலை மார்க்கமாக திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் தனியார் வாகனங்கள் நெல்லை சாலையில் உள்ள மோட்டார் சைக்கிள் ஷோரூம் எதிரே உள்ள சுப்பையா லேன்ட் வாகன நிறுத்துமிடம், வியாபாரிகள் சங்க வாகன நிறுத்துமிடம், வேட்டையாடும் மடம் வாகன நிறுத்துமிடம், குமரன் ஸ்கேன் சென்டர் எதிரே உள்ள வாகன நிறுத்துமிடம், ஆதித்தனார் கல்லூரி பணியாளர் குடியிருப்பு வாகன நிறுத்துமிடம் மற்றும் அருள் முருகன் நகர் வாகன நிறுத்துமிடம் ஆகிய வாகன நிறுத்தமிடங்களில் நிறுத்தி, திரும்ப செல்லும் போது அதே வழித்தடம் வழியாக செல்லவும்.

    நாகர்கோவில், திசைய ன்விளை, சாத்தான்குளம் மார்க்கமாக வந்து திரும்பிச் செல்லும் வாகனங்கள்.

    நாகர்கோவில், திசை யன்விளை, சாத்தான்குளம் மார்க்கமாக திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் தனியார் வாகனங்கள் பரமன்குறிச்சி சாலையில் உள்ள குடோன் எதிரே உள்ள சுந்தர் லேன்ட் வாகன நிறுத்துமிடம், சர்வோதயா சங்கம் அருகில் உள்ள பால்பாயாசம் அய்யர் லேன்ட் வாகன நிறுத்துமிடம், முருகானந்தம் லேன்ட் வாகன நிறுத்துமிடம் மற்றும் செந்தில்குமரன் பள்ளி வளாக வாகன நிறுத்துமிடம் ஆகிய வாகன நிறுத்ததுமிடங்களில் நிறுத்தி, திரும்ப செல்லும்போது அதே வழித்தடம் வழியாக செல்லவும்.

    கன்னியாகுமரி, உவரி, குலசேகரன்பட்டினம் சாலை மார்க்கமாக வந்து திரும்பிச் செல்லும் வாகனங்கள்.

    கன்னியாகுமரி, உவரி, குலசேகரன்பட்டினம் மார்க்கமாக திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் தனியார் வாகனங்கள் ஆலந்தலை, என்.முத்தையாபுரம், செந்தூர் மினரல்ஸ் வாய்க்கால் பாலம் வந்து வலதுபுறம் திரும்பி பரமன்குறிச்சி சாலையில் உள்ள குடோன் எதிரே உள்ள வாகன நிறுத்துமிடம், சர்வோதயா சங்கம் அருகில் உள்ள வாகன நிறுத்துமிடம் மற்றும் செந்தில்குமரன் பள்ளி வளாக வாகன நிறுத்துமிடம் ஆகிய வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்தி, திரும்ப செல்லும்போது அதே வழித்தடம் வழியாக செல்லவும்.

    மேற்கண்ட சாலை களிலுள்ள வாகன நிறுத்துமிடங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு பக்தர்கள் கோவில் அருகில் செல்வதற்கு சிறப்பு அரசு நகர பேருந்துகள், மினி பேருந்துகள், வேன்கள் மற்றும் ஆட்டோக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட வாகனங்கள் திருச்செந்தூர் மெயின் ஆர்ச், இரும்பு ஆர்ச், வடக்கு ரதவீதி வழியாக கீழ ரதவீதியிலுள்ள தேரடி அருகில் பக்தர்களை இறக்கிவிட்டு திரும்பி செல்லும்போது அமலிநகர் ஜங்ஷன், தெற்கு ரதவீதி, முத்தாரம்மன் கோவில் ஜங்ஷன், தெப்பகுளம் (முருகாமடம்) வழியாக செல்லும்.

    பக்தர்களுக்கான முக்கிய பாதுகாப்பு ஏற்பாடுகள்

    கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை கருதியும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், குற்றச் செயல்கள் நடக்காமல் தடுக்கும் பொருட்டும் மற்றும் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் பொருட்டும், வாகனங்கள் வரும் வழிப்பாதைகள், வாகனங்கள் நிறுத்துமிடங்கள், பக்தர்கள் வந்து செல்லும் வழிகள்,கோவில் வளாகம், கடற்கரை பகுதி, ஆகிய அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு காமிராக்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தும், மேலும் சீருடை அணிந்த மற்றும் சாதாரண உடையணிந்த ஆண், பெண் காவலர்களை பணியமர்த்தியும் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இத்திருவிழாவை முன்னிட்டு வரும் பக்தர்கள் ஜாதி சின்னங்களுடன் கூடிய கொடியோ, தொப்பி மற்றும் ரிப்பன்களையோ ஜாதி ரீதியான உடைகளை அணிந்து வரவோ எவ்வித அனுதியுமில்லை. மேலும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி இத்திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் சர்ப்ப காவடி மற்றும் பாம்புகள் எடுத்து வருவதற்கு அனுமதி கிடையாது.

    வாகனங்களில் வரும் பக்தர்கள் போக்குவரத்தை சீர் செய்யும் காவலர்கள் காட்டும் வழிமுறைகளை கடைபிடித்து அந்தந்த வாகன நிறுத்துமிடங்களில் தங்கள் வாகனங்களை மற்ற வாகனங்களுக்கு இடையூறு இல்லாமல் நிறுத்தம் செய்யுமாறும், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் காவல்துறை யினருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறும் கேட்டு கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    • சூரபத்மன் சிவபெருமானை நோக்கிக் கடும் தவம் புரிந்தான்.
    • `ஆறுமுகமே சிவம், சிவமே ஆறுமுகம்’ எனப்படுகின்றது.

    முருகன் சிவந்த மேனியும், அரியவரதத்துடன் கூடிய கரங்களும், மார்பில் சாய்ந்த வேலும், திருவடியில் மயிலும், தாமரை ஏந்திய கரத்துடன் வள்ளிதேவி வலது பக்கத்திலும், நீலோத்பலம் ஏந்திய கரத்துடன் தெய்வானை இடது பக்கத்திலும் அமைய காட்சித் தருவார்.

    முருகன் என்ற சொல்லுக்கு அழகு, இளமை, மணம், கடவுள் தன்மை என்ற பல பொருள் உண்டு. முருகன் வடிவம் தமிழ் வடிவமாக அமைந்தது. தமிழ்மொழியில் மெய்யெழுத்துகள் கண்களாகவும், வல்லினம், மெல்லினம், இடையினம் என வழங்கும் எழுத்துக்கள் ஆறு திருமுகங்களாகவும், அகர முதல எழுத்துகள் பன்னிரண்டும் தோள்களாகவும், ஆயுத எழுத்து ஞான வேலாகவும் விளங்குகிறது.

    முருகப்பெருமானை உள்ளன்புடன் வழிபாடு செய்யும் பக்தர்களின் வாழ்வு என்றும் மலர்ந்திருக்கும். முருகன் நமக்கு வீடு அளிக்க வல்லவன். ஆனால் இந்த வீடுபேறை நாம் பெறுவதை தடுக்கும் வகையில் நம்முள் ஆறு பகைவர்கள் உள்ளனர். காம, குரோத, லோப, மோக, மத, மாற்சரியங்கள் என்ற ஆறும்தான் அவை.

    இந்த ஆறு பகைவர்களின் உருவகமாகத்தான் சூரபத்மன் கருதப்படுகிறான். அவனை சம்காரம் செய்ததன் மூலம் முருகப்பெருமான் மனிதர்களிடம் உள்ள ஆணவத்தை ஒழித்ததாக சொல்வார்கள். இதற்காகத்தான் முருகன் அவதாரம் எடுத்தார். அதற்கான புராண கதை வருமாறு:-

    காசிபர் என்ற முனிவருக்கும், மாயை என்ற அசுர குலப்பெண்ணிற்கும் பிறந்தவன் சூரபத்மன். தன் தாயின் உபதேசப்படி சூரபத்மன் சிவபெருமானை நோக்கிக் கடும் தவம் புரிந்தான். சூரபத்மனின் தவ வலிமையை மெச்சிய சிவபெருமான் சூரபத்மன் வேண்டியபடி அவனுக்கு தேவர்கள் அனைவரையும் வெல்லும் படையாற்றலும், படைக்கலங்களும், நினைத்த உடன் எல்லா இடங்களுக்கும் செல்லும் வல்லமையையும் அளித்தார்.

    இதில் உச்சக்கட்டமாக சிவபெருமானைத் தவிர வேறு எவராலும் தன்னை அழிக்க முடியாது என்ற வரத்தையும் பெற்றான். சூரபத்மன் தான் பெற்ற வரத்தின் வலிமையினால் ஆணவம் மிகுந்து கர்வம் கொண்டான். இந்திரன் மகனான சயந்தன் முதலான தேவர்களை சிறையில் அடைத்து சித்ரவதை செய்தான். அதர்ம வழியில் ஆட்சிசெய்யலானான். அசுரர்களின் இக்கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர்.

    இறைவன் அவர்களைக் காப்பாற்ற முடிவு செய்தார். அதன்படி அவர் தனது நெற்றிக் கண்ணைத் திறந்தார். அவைகளில் இருந்து ஆறு தீப்பொறிகள் வெளிப்பட்டன. அவற்றை வாயுபகவான் ஏந்திச் சென்று வண்ண மீன் இனம் துள்ளி விளையாடும் சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்களின் மீது சேர்த்தான்.

    அந்த தீப்பொறிகள் ஆறும் உலகின் பொன்னெல்லாம் உருக்கி வார்த்தது போன்ற ஆறு குழந்தைகளாக தோன்றின. அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் சீராட்டி, பாலூட்டி வளர்த்து வந்தனர். ஒரு நாள் பார்வதி தன் மைந்தர்கள் அறுவரையும் ஒன்றாக அன்புடன் கட்டி அணைத்தாள். அவையாவும் ஒரு திருமேனியாக வடிவம் கொண்டு ஆறுமுகங்களும் பன்னிரு கரங்களும் உடைய ஒரு திருமுருகனாக தோன்றினான். இப்படித்தான் முருகனின் அவதாரம் நிகழ்ந்தது.

    ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் உடைய திருவுருவை பெற்றமையால் `ஆறுமுகசுவாமி' எனப் பெயர் பெற்றார். இந்த ஆறு திருமுகங்களும் ஞாலம், ஐஸ்வர்யம், அழகு, வீர்யம், வைராக்கியம், புகழ் என்னும் ஆறு குணங்களைக் குறிக்கும். பிரணவ சொரூபியான முருகப் பெருமானிடம் காக்கும் கடவுளான முகுந்தன், அழிக்கும் கடவுளான ருத்திரன், படைக்கும் கடவுளான கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடக்கம். ஆறுமுகன் சிவாக்கினியில் தோன்றியவன். அதனால் "ஆறுமுகமே சிவம், சிவமே ஆறுமுகம்" எனப்படுகின்றது.

    சூரபத்மனை அழித்து வரும்படி முருகனுக்கு உத்தரவிட்டார். முருகனுக்கு துணையாக செல்ல பெரும் படையையும் ஈசன் உருவாக்கி கொடுத்தார். மனிதர்களின் ஆணவத்தை ஒழித்த முருகப்பெருமான் இதற்காக ஈசன் திருவிளையாடல் ஒன்றை அரங்கேற்றினார்....

    சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் புறப்படும்போது அதில் இருந்து வெளிப்பட்ட வெப்பத்தை தாங்கமுடியாது சிவனின் அருகில் இருந்த பார்வதிதேவி பயந்து ஓடினார். அப்போது பார்வதிதேவியின் பாதச் சிலம்புகளில் இருந்த நவரத்தினங்கள் சிதறி விழுந்தன.

    அந்த நவமணிகள் மீது இறைவனின் பார்வை பட்டதும் அவைகள் நவசக்திகளாக தோன்றினர். அந்த நவசக்திகளின் வயிற்றில் (வீரவாகுவை மாணிக்கவல்லியும், வீரகேசரியை மவுத்திகவல்லியும், வீர மகேந்திரனை புஷ்பராகவல்லியும், வீர மகேசுவரரை கோமேதகவல்லியும், வீர புரந்தரை வைடூரியவல்லியும், வீர ராக்கதரை வைரவல்லியும், வீர மார்த்தாண்டரை மரகதவல்லியும், வீராந்தகரை பவளவல்லியும், வீரதீரரை இந்திரநீலவல்லியும் பெற்றெடுத்தனர்) வீரவாகுதேவர் முதலான ஒரு லட்சத்து ஒன்பது பேர் தோன்றினர். இவர்கள் அனைவரும் முருகனின் படைவீரர்கள் ஆனார்கள்.

    இதையடுத்து பார்வதி தேவியும் தன்னைப்போன்ற ஒரு சக்தியை உருவாக்கி அதனை தனது சக்திகள் யாவும் கொண்ட ஓர் வீரவேலாக உருமாற்றினார். வெற்றிதரும் அந்த வீரவேலை முருகனிடம் வழங்கினார். ஈசனும் தன் அம்சமாகிய பதினொரு ருத்திரர்களைப் படைக்கலமாக்கி முருகனிடம் தந்தார்.

    அம்மையப்பனிடம் வேல் வாங்கிய முருகன், தேரேறி தெற்கே இருந்த வீரமகேந்திரபுரியை நோக்கி சென்றான். விந்தியமலை அடிவாரத்து மாயா புரத்தை ஆண்ட சூரனின் தம்பி தாரகாசுரன் (ஆனைமுகம் கொண்டவன்) கிரவுஞ்சம் என்னும் பெரிய மலையாய் உருமாறி வழிமறிக்க வீரவாகுதேவர் அவனுடன் போர் புரிந்தார். ஆனால் தாரகன் தன் மாயையால் வீரவாகுதேவர் முதலான முருகனின் சேனையை அழுத்தி சிறைப்படுத்தினான். அப்போது முருகனின் கூர்வேல் மாயை மலையை பிளக்க தாருகன் அழிந்தான்.

    சூரபத்மன் இச் செய்தி கேட்டு துடிதுடித்து வீராவேசம் கொண்டான். பின்னர் திருச்செந்தூர் நோக்கி முருகனின் மொத்தப் படையும் கிளம்பியது. முருகன் அம்மையப்பர் ஆசியுடனும் தன் படைகளோடும் திருச்செந்தூர் சென்று தங்கினார். அங்கு பராசர முனிவரின் மகன்கள் (சனகர், சனாதனர், சனந்தனர், சனற்குமாரர்) முருகனை வரவேற்ற னர். திருச்செந்தூரில் ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் சூரனை அழித்து தன் அவதார காரணத்தை முருகப் பெருமான் முற்றுப் பெறச் செய்தார். இதுவே கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

    ×