search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "job offer"

    • தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் பணிநியமன ஆணை வழங்கும் விழா மற்றும் கல்வி வழிகாட்டி விருது வழங்கும் விழா நடைபெற்றது
    • இதில் தேனி மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

    தேனி:

    தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் பணிநியமன ஆணை வழங்கும் விழா மற்றும் கல்வி வழிகாட்டி விருது வழங்கும் விழா நடைபெற்றது. உறவின்முறை தலை–வர் ராஜமோகன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கல்லூரி செயலாளர் ராஜ்குமார் அனைவரையும் வரவேற்றார். கல்லூரி செயலாளர் மகேஸ்வரன் வாழ்த்தி பேசினார். கல்லூரி முதல்வர் மதளைசுந்தரம் வேலை வாய்ப்பு குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார்.

    கல்லூரியில் வேலை–வாய்ப்பு அலுவலர் கார்த்திகேயன் அறிக்கையை சமர்ப்பித்தார். இதில் பன்னாட்டு நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்ட 70 இறுதியாண்டு மாணவ-மாணவிகளுக்கு பணி–நியமன ஆணைகளை உறவின்முறை நிர்வாகி–கள் வழங்கினர். இதனை–தொடர்ந்து சமுதாய பணியில் சேவையாற்றி வரும் தலைமை ஆசிரி–யர்கள் மற்றும் பேராசிரி–யர்களுக்கு கல்வி வழிகாட்டி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தேனி மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு–களை துணைமுதல்வர் மாதவன், பேராசிரியர்கள் செய்திருந்தனர். கல்லூரி இணைச்செயலாளர் நவீன்ராம் நன்றி கூறினார்.

    கோவையில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக என்ஜினீயர்கள், பட்டதாரிகள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
    கோவை:

    கோவையை சேர்ந்த என்ஜினீயர்கள், பட்டதாரிகள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் இன்று மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து ஒரு புகார் மனு அளித்தனர்.அதில் கூறியிருப்பதாவது:-

    கோவையில் தனியார் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று எங்களுக்கு கனடா, நியூசிலாந்து நாடுகளில் உள்ள நிறுவனங்களில் வேலை நல்ல சம்பளத்துடன் வேலை வாங்கி தருவதாக கூறியது.

    இதை நம்பி நாங்கள் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கொடுத்தோம். ஆனால் நிறுவனத்தினர் கூறியபடி வேலை வாங்கி தரவில்லை. இதுகுறித்து நாங்கள் கேட்ட போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிறுவனத்தை மூடி விட்டு நிர்வாகிகள் தலைமறைவாகி விட்டனர். எங்களது பாஸ் போர்ட்டும் அந்த நிறுவனத்தினரிடம் தான் உள்ளது.

    எனவே எங்களை ஏமாற்றிய நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுத்து எங்களது பணம் மற்றும் பாஸ்போர்ட்டு ஆகியவற்றை மீட்டுத் தர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    புகார் கொடுத்தவர்கள் கூறுகையில், கோவை மட்டு மல்லாது பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் லட்சக்கணக்கில் இந்நிறுவனத்தில் பணம் கொடுத்து ஏமாந்துள்ளதாக தெரிவித்தனர். #tamilnews
    வேலாயுதம்பாளையத்தில் காகித ஆலையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 3 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
    வேலாயுதம்பாளையம்:

    ஸ்ரீரங்கம் அருகே உள்ள குழுமணி வடக்கு மூலக்குடியைச் சேர்ந்தவர் முருகேசன் (59) இவர் தனது மகனுக்கு வேலை தேடி வந்தார். 
    இதை அறிந்த அரவக்குறிச்சி பெரிய திருமங்கலம் வடகரையைச் சேர்ந்த நல்லசுப்பிரமணியம் என்பவர் முருகேசனிடம் உங்களது மகனுக்கு புகளுரில் உள்ள செய்தித்தாள் காகித ஆலையில் வேலை வாங்கித் தருவதாக கூறி, பணம் ரூ. 3 லட்சம் வாங்கியுள்ளார். 

    ஆனால்  கூறியபடி நல்ல சுப்பிரமணியம் வேலை வாங்கி  தரவில்லை. உடனே முருகேசன் பணத்தைகேட்டார். ஆனால் நல்ல சுப்பிரமணியம் பணத்தை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் ஆத்திரமடைந்த முருகேசன் இது குறித்து வேலாயுதம் பாளையம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தி வழக்குப்பதிவு செய்து நல்லசுப்பிரமணியை கைது செய்தனர். 
    ×