search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "informs"

    • குறைந்தபட்ச இருப்புத் தொகை எதுவும் இல்லாமல் சேமிப்புக் கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • 21 கிளைகளிலும் இந்த சேமிப்புக் கணக்குகள் தொடங்கும் பணிகள் நடந்து வருகின்றன.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மண்டல அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது.

    இந்த உரிமைத்தொகை பெற வங்கிக் கணக்கு இல்லாதவா்கள் தற்போது சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்காக வங்கிகளை நாடிச் செல்கி ன்றனா்.அப்படி செல்பவர்க ளுக்கும் வங்கிகளில் சேமிப்புக் கணக்கு தொடங்க வேண்டும் என்றால் குறைந்த பட்ச இருப்புத் தொகை செலுத்த வேண்டிய நிலை உள்ளது.

    இதைத் தவிா்க்கும் வகையில் நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் குறைந்தபட்ச இருப்புத் தொகை எதுவும் இல்லாமல் சேமிப்புக் கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வரும் மகளிருக்கு உடனுக்குடன் கணக்கு தொடங்கப்பட்டு கொடுக்கப்படுகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள வங்கியின் தலைமையகம் மற்றும் அதன் 21 கிளைகளிலும் இந்த சேமிப்புக் கணக்குகள் தொடங்கும் பணிகள் நடந்து வருகின்றன.

    சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்கு 3 பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள், ஆதாா் அட்டை, ரேஷன் காா்டு ஆகியவற்றின் நகல் மட்டும் எடுத்து வந்தால் போதும். தொகை ஏதும் செலுத்தாமல் சேமிப்புக் கணக்கு தொடங்கலாம். எனவே பெண்கள் இதனை பயன்படுத்தி வங்கி கணக்கு தொடங்கி மகளிர் உரிமை திட்டத்தை பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வாகன நெரிசல் ஏற்பட்டு காா்பன் வாயு அதிக அளவில் வெளியாகிறது.
    • 80 சதவீத மரக் கன்றுகள் மக்கள் ஒத்துழைப்புடன் சிறப்பாக வளா்ந்துள்ளன.

    ஊட்டி,

    ஊட்டியில் காா்பன் மாசில்லா மாவட்டம் என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலா் சுப்ரியா சாஹூ கூறியதாவது: நீலகிரியில் வனப்பகுதி அதிகம் உள்ளதாலும் பல்லுயிா் பாதுகாப்பு மண்டலமாக இருப்பதாலும் இந்த மாவட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தியாவிலேயே காா்பன் மாசில்லா மாவட்டமாக நீலகிரி மாறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தற்போது நடைபெற்ற மாநாட்டில் சுற்றுசூழல் வல்லுநா்கள், சா்வதேசப் பிரமுகா்கள், அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அவா்கள் சில பரிந்துரைகளை வழங்கி யுள்ளனா். அதில், நீலகிரி மாவட்டத்துக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருவதால் வாகன நெரிசல் ஏற்பட்டு காா்பன் வாயு அதிக அளவில் வெளியா கிறது. இதைக் கட்டுப்படுத்த மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்துவது, வனப்பகுதியை அதிக ரிப்பது, பிளாஸ்டிக்கை தவிா்ப்பது உள்ளிட்ட பரிந்துரைகள் வழங்கப்பட் டுள்ளன. நீலகிரி மாவட் டத்தில் எவ்வளவு காா்பன் வாயு வெளியேறுகிறது, அதை எப்படிக் குறைப்பது என்ற ஒருங்கிணைந்த திட்டம் 3 மாதங்களுக்குள் தயாரிக்க முடிவு செய்யப்பட் டுள்ளது. தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் கீழ் கடந்த ஆண்டு நடப்பட்ட 3 கோடி மரக்கன்றுகளில் 80 சதவீத மரக் கன்றுகள் மக்கள் ஒத்துழைப்புடன் சிறப்பாக வளா்ந்துள்ளன. தமிழகத்தில் 40 சதுர கிலோ மீட்டா் பரப்பில் உள்ள சதுப்பு நிலக் காடுகள் பாதுகாக் கப்பட்டுள்ளன.

    தற்போது புதிதாக 14 மாவட்டங்களில் 60 சதுர கிலோ மீட்டா் பரப்பில் உள்ள சதுப்பு நிலங்களைக் கண்டறிந்து அதைப் பாதுகாக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா். இதில் சுற்றுச்சூழல் மற்றும் பருவ நிலை மாற்றம் துறையின் இயக்குநா் தீபக் பில்ஜி, கலெக்டர் அம்ரித், தமிழக அரசின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • அரியலூர் மாவட்டத்தில் புதுமைபெண் திட்டத்தில் 1355 மாணவிகள் பயனடைந்தனர் என கலெக்டர் ரமணசரஸ்வதி தகவல் தெரிவித்தார்
    • புதுமைப் பெண் இரண்டாம் கட்டத் திட்டத்தில் 445 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் பெறுவதற்கு உதவித்தொகைக்கான வங்கி பற்று அட்டை வழங்கப்பட்டுள்ளது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் இதுவரை 1,355 மாணவிகள் பயனடைந்த வருவதாக மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது,அரியலூர் மாவட்டத்தில், ஏற்கனவே சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் முதற் கட்டமாக 910 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் பெறுவதற்கு உதவித்தொகைக்கான வங்கி பற்று அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, புதுமைப் பெண் இரண்டாம் கட்டத் திட்டத்தில் 445 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் பெறுவதற்கு உதவித்தொகைக்கான வங்கி பற்று அட்டை வழங்கப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவி கள் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும் அல்லது தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைத் திட்டத்தின் கீழ் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயின்று 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவியர்களாக இருத்தல் வேண்டும்.மாணவிகள் 8 அல்லது 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்புகளில் படித்து பின்னர், முதன்முறையாக உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் படிப்புக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். புதுமைப் பெண் திட்டத்தில், சான்றிதழ் படிப்பு, பட்டயப் படிப்பு, இளங்கலைப் பட்டம், தொழில் சார்ந்த படிப்பு மற்றும் பாரா மெடிக்கல் படிப்பு போன்ற படிப்புகளை பயிலும் மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும். மேலும், முதலாம் ஆண்டிலிருந்து இரண்டாம் ஆண்டு செல்லும் மாணவியரும், இரண்டாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டு செல்லும் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவியர்களும், தொழிற்கல்வியைப் பொருத்தமட்டில், மூன்றாம் ஆண்டிலிருந்து நான்காம் ஆண்டிற்குச் செல்லும் மாணவிகளுக்கும். மருத்துவக் கல்வியைப் பொருத்தமட்டில், நான்காம் ஆண்டிலிருந்து ஐந்தாம் ஆண்டு செல்லும் மாணவியர்களும் இத்திட்டத்தின் கீழ் பயனடைவர் என்று அவர் கூறினார்.

    • தாமிரபரணி ஆற்றின் திருவைகுண்டம் அணை யின் தென்கால்உபரிநீர் முழுவதையும் குலசை தருவைக்குளம் வழியாகமணப்பாடு கடலுக்குமட்டும் அனுப்ப வேண்டும்
    • 15 நீர் பிடிப்பு குளங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள தண்டுபத்தில் தங்கி இருந்த தமிழக மீன்வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை உடன்குடி பகுதியில் உள்ள தி.மு.கவினர் நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.அந்த மனுவில் கூறியிருப் பதாவது:-

    தாமிரபரணி ஆற்றின் திருவைகுண்டம் அணை யின் தென்கால்உபரிநீர் முழுவதையும் குலசை தருவைக்குளம் வழியாகமணப்பாடு கடலுக்குமட்டும் அனுப்ப வேண்டும் என்றும்,

    வருடந்தோறும் ஆத்தூர் வழியாக புன்னக்காயல் கடலுக்கு நேரடியாக செல்லும் தாமிரபரணி ஆற்றின் தண்ணீர் அளவை முன்கூட்டியே கணக்கிட்டு, அதை ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டிற்கு முன்பே உள்ள மருதூர்மேலக்கால் அணைக்கட்டு மூலம் உபரிநீரை தெற்கே திருப்பி விட்டு உடன்குடியைச் சுற்றியுள்ள நீர்ப்பிடிப்பு குளங்களான செம்மறிபடுகைகுளம், சடையனேரிகுளம், தாங்கைக்குளம், அய்யனார்குளம், நரிக்குளம், தண்டுபத்து வடக்குகுளம், மானாட்சிகுளம், குண்டாங்கரைகுளம், சிறுகுளம், இடையர்குளம். தேரிகுண்டாங்கரை உட்பட 15 நீர் பிடிப்பு குளங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    மேலும் எஞ்சிய தண்ணீரை தாங்கைக்குளம் வழியாக கருமேனிஆற்றில்விட்டு மணப்பாடு கடலுக்கு அனுப்பினால் போதும்.

    மணப்பாடுகடல்முகம் இயற்கையாக அமைந்து இருப்பதால் உடன்குடி சுற்றுவட்டார பொதுமக்களுக்கு எந்த விதமான இடையூறும் இல்லாமல் புன்னக்காயல் கடலுக்கு நேர்வழியில் போவதை மாற்றிட முடியும்.

    மேலும் உடன்குடியை சுற்றி மணப்பாடு கடலுக்கு அனுப்பினாலே உடன்குடி வட்டாரபகுதியில் உள்ள நிலத்தின்நீர் வளத்தை பாதுகாக்க முடியும், உடன்குடியில் பாசன குளங்கள் எதுவுமில்லை.

    அனைத்துமே நீர்ப்பிடிப்பு குளங்கள் தான்.பம்புசெட் மூலமே விவசாயம் நடைபெறுவதால் அவைஉறிஞ்சும் தண்ணீரை மேற்கண்ட குளங்கள் மூலமாக வருடந்தோறும் கொடுத்தாலே போதும், 15 நீர் பிடிப்பு குளங்களையும் காப்பாற்றி கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை திருப்பி விட நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறியிருந்தது.

    மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் தமிழகஅரசின்சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உங்கள் கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அப்போது உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் இளங்கோ, கூட்டுறவு வங்கி தலைவர் அசாப்அலி பாதுஷா, தண்டுபத்து பாலகணேசன், சேக் முகமது, ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    ×