என் மலர்
நீங்கள் தேடியது "Indian Oil Corporation"
- தவறான வதந்திகள் பரப்பப்படுவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
- நாடு முழுவதும் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்தது.
இதையடுத்து பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்த முயற்சித்து வருகிறது. இதனை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது. மேலும் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் தவறான வதந்திகள் பரப்பப்படுவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். இதனை தொடர்ந்து மக்கள் பீதி அடைய வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்ற தகவலை இந்தியன் ஆயில் நிறுவனம் மறுத்துள்ளது. இதுதொடர்பாக நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது. பதற்றம் வேண்டாம். நாடு முழுவதும் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது.
அனைத்து விற்பனை நிலையங்களிலும் எரிபொருள் மற்றும் LPG உடனடியாக கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் சார்பில் அவசரகால பேரிடர் மேலாண்மை ஒத்திகை நடந்தது.
- மதுரை மண்டல செயல்மேலாளர் சிவகுருநாதன் தலைமை வகித்தார்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே பெருமாள்பட்டியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் சார்பில் அவசரகால பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை மண்டல செயல்மேலாளர் சிவகுருநாதன் தலைமை வகித்தார். முதுநிலை பராமரிப்பு மேலாளர் கார்த்திக்குமார், செயல்மேலாளர் சுந்தர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக திருமங்கலம் டி.எஸ்.பி. வசந்தகுமார், தீயணைப்பு நிலைய அதிகாரி ஜெயராணி, செக்கானூரணி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மதுரை கப்பலூரில் இருந்து நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு டீசல், பெட்ரோல் லாரிகள் மூலமாக அனுப்பிவைக்கப்படுகிறது. இதற்காக குழாய்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் வெளிநபர்கள் தேவையில்லாமல் தோண்டக்கூடாது. எண்ணெய் குழாய்களை சேதப்படுத்துவதை குழாய் செல்லும் வழியில் உள்ள கிராமமக்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்பதை விளக்கும் வகையிலும், அவசர காலத்தில் தீ விபத்து ஏற்பட்டால் எப்படி கையாள்வது? என்பது குறித்தும் பெருமாள்பட்டி மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும், பெட்ரோல் மற்றும் காஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரிகளில் திடீரென தீப்பிடித்தால் அவற்றை எப்படி அணைப்பது என்பது குறித்து தீயணைப்பு படையினர் செய்து காட்டினர்.






