என் மலர்
செய்திகள்

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இறுதி காலாண்டு லாபம் 40.25 சதவிகிதம் உயர்வு
கடந்த நிதியாண்டின் இறுதி காலாண்டில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் நிகர லாபம் 40.25 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #IndianOilCorporation
மும்பை :
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில் நிறுவனம் கடந்த நிதியாண்டின் இறுதி காலாண்டு நிதிநிலை அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.
2017-18 நிதியாண்டின் நான்காவது மற்றும் இறுதி காலாண்டில் (கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை) அந்நிறுவனம் 5,218.10 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இதுவே முந்தைய நிதியாண்டின் (2016-17) இறுதி காலாண்டில் ரூ.3720.62 கோடி நிகர லாபமாக இருந்தது. இதன்மூலம் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இறுதி காலாண்டு நிகர லாபம் 40.25 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
இறுதி காலாண்டில் மட்டும் அந்நிறுவனம் ரூ. 1,36,980.73 கோடி மொத்த வருமானம் ஈட்டியுள்ளது. இதுவே, 2016-17 நிதியாண்டில் இறுதி காலாண்டின் மொத்த வருமானம் ரூ. 1,24,405.67 கோடி ஆகும்.
கடந்த நிதியாண்டில் மொத்த வருமானம் அந்நிறுவனத்திற்கு ரூ.5,81,961.77 கோடி கிடைத்துள்ளது. இதுவே அதற்கு முந்தைய நிதியாண்டில் மொத்த வருமானம் ரூ.4,57,656.93 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
2016-17 நிதியாண்டில் நிகர லாபமாக ரூ.20385.40 கோடி இருந்த நிலையில், கடந்த நிதியாண்டில் (2017-18) அந்நிறுவனம் ரூ. 22,626.35 கோடி நிகர லாபமாக ஈட்டியுள்ளது. #IndianOilCorporation
Next Story






