search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "imposition"

    • வெண்ணந்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட எண்.3 கொமாரபாளையம் பஞ்சாயத்து கோம்பைக்காடு அண்ணாமலைப்பட்டி பகுதியில் அனுமதி இன்றி மலைகளை வெடி வைத்து தகர்த்து கற்கள் உற்பத்தி செய்தும் கிராவல் மண்ணை அள்ளிச் செல்லும் சம்பவம் கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • அப்போது அளவுக்கு அதிகமாக கிராவல் மண் வெட்டி எடுத்ததை உறுதிப்படுத்தினர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க நாமக்கல் ஆர்.டி.ஓ.வுக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து கிராவல் மண் வெட்டி எடுத்த தங்கம் என்பவரது மனைவி சித்தேஸ்வரிக்கு ரூ.19.84 லட்சம் அபராதம் விதித்து நாமக்கல் ஆர்.டி.ஓ மஞ்சுளா உத்தரவிட்டார்.

    நாமக்கல்:

    நாமக்கல் அருகே உள்ள வெண்ணந்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட எண்.3 கொமாரபாளையம் பஞ்சாயத்து கோம்பைக்காடு அண்ணாமலைப்பட்டி பகுதியில் அனுமதி இன்றி மலைகளை வெடி வைத்து தகர்த்து கற்கள் உற்பத்தி செய்தும் கிராவல் மண்ணை அள்ளிச் செல்லும் சம்பவம் கடந்த சில நாட்களாக நடந்து வந்தது.

    அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்து நாமக்கல் மாவட்ட கனிம வளத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அளவுக்கு அதிகமாக கிராவல் மண் வெட்டி எடுத்ததை உறுதிப்படுத்தினர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க நாமக்கல் ஆர்.டி.ஓ.வுக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து கிராவல் மண் வெட்டி எடுத்த தங்கம் என்பவரது மனைவி சித்தேஸ்வரிக்கு ரூ.19.84 லட்சம் அபராதம் விதித்து நாமக்கல் ஆர்.டி.ஓ மஞ்சுளா உத்தரவிட்டார்.

    • ரேசன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் அனைத்து ரேசன் கடைகளிலும் ஆய்வு செய்ய கூட்டுறவு இணைப்பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
    • இதனை தொடர்ந்து, 26 அந்த கடை விற்பனையாளர்களுக்கு ரூ.8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    சேலம்:

    ரேசன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் அனைத்து ரேசன் கடைகளிலும் ஆய்வு செய்ய கூட்டுறவு இணைப்பதிவாளர் ரவிக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    இதையடுத்து 10 கூட்டுறவு சார்பதிவாளர்கள் கொண்ட குழுவினர் நேற்று ஆத்தூர் டவுன், மகுடஞ்சாவடி பகுதிகளில் செயல்படும் 28 ரேசன் கடைகளில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். இதில் 26 கடைகளில் சிறு, சிறு குறைபாடுகள் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து, அந்த கடை விற்பனையாளர்களுக்கு ரூ.8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ரேசன் கடைகளில் தொடர்ந்து சோதனை நடத்தப்படும். தவறு செய்யும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி சார்பில் உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.வரி விதித்துள்ளதை கண்டித்தும், அதை திரும்பப்பெற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.சமையல் எரிவாயு சிலிண்டர் விலையைக் குறைக்க வேண்டும்.

    சென்னிமலை:

    சென்னிமலை பஸ் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி சார்பில் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளதை கண்டித்தும் அதை திரும்பப்பெற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஒன்றியச் செயலாளர் செங்கோட்டையன் தலை மை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி., மாநிலச் செயலாளர் சின்னசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் நாகப்பன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் கண்ணுசாமி,மகேந்திரன், நகர செயலாளர் ராஜ்குமார், ஒன்றியக்குழு குழு உறுப்பினர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றியக்குழு உறுப்பினர் ஆறுமுகம் நன்றி கூறினார்.

    இந்த ஆர்ப்பாட்டதில் அரிசி, கோதுமை, பருப்பு, கோதுமை மாவு, ரவை, பால், தயிர், மோர், பன்னீர் உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கும் விதிக்கப்பட்ட 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும்.

    தங்கும் விடுதி கட்டணம், மருத்துவமனை அறை கட்டணம், மயானக் கட்டணம், மை, கத்தி, பிளேடு உள்ளிட்டவற்றுக்கு விதிக்கப்பட்டு உள்ள ஜி.எஸ்.டி வரி உயர்வை மத்திய அரசு கைவிட வேண்டும்.

    மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.சமையல் எரிவாயு சிலிண்டர் விலையைக் குறைக்க வேண்டும்.

    தமிழக அரசு வீடுகள், கடைகள் மற்றும் நிறுவன ங்களுக்கு மின்சார கட்டணத்தை உயர்த்த கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது/

    ×