என் மலர்
நீங்கள் தேடியது "hokenakkal"
- இந்தாண்டில் முதல் முறையாக ஜுன் மாதம் 29-ந் தேதி மேட்டூர் அணை நிரம்பியது.
- 90 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி களில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே பெய்ய தொடங்கியது. இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்து அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பியது.
இதையடுத்து இந்த அணைகளில் இருந்து உபரிநீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக இந்தாண்டில் முதல் முறையாக ஜுன் மாதம் 29-ந் தேதி மேட்டூர் அணை நிரம்பியது.
பின்னர் மழையின் தீவிரத்தை பொறுத்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. ஆனாலும் தொடர்ந்து டெல்டா பாசனத்துக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இதன் அடிப்படையில் மேட்டூர் அணை இந்தாண்டில் 2-வது முறையாக ஜூலை 5-ந்தேதியும், 3-வது முறையாக ஜூலை 20-ந்தேதியும் 4-வது முறையாக ஜூலை 26 ஆம் தேதியும் நிரம்பியது.
இந்நிலையில், ஒகேனக்கல் காவேரி தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக இன்று காலை நடப்பாண்டில் 5-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது.
இதையடுத்து உடனடியாக பாதுகாப்பு கருதி அணையில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. விநாடிக்கு 90 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது.
- அணைகளின் பாதுகாப்பு கருதி தமிழக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
தருமபுரி:
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக கேரள மாநிலத்தின் வயநாடு மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் கர்நாடக அணைகளான கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி தமிழக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு நீர்வரத்து 22 ஆயிரம் கனஅடி வந்தது.
கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 14 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
மேலும் ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ், உள்பட அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
- ஒகேனக்கல் வனப்பகுதியில் தொடர் மழை பெய்ய தொடங்கியது.
- நீர்வரத்து இன்று அதிகாலை 9 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
பென்னாகரம்:
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை எதிரொலியால் ஒகேனக்கல்லில் இன்று நீர்வரத்து 13 ஆயிரம் கனஅடி அளவில் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த ஒரு வாரமாக நீர்வரத்து கடுமையாக சரிந்து வந்தது. இதன் காரணமாக ஒகேனக்கல்லில் நேற்று 4 ஆயிரம் கனஅடியாக சரிந்து வந்தது.
தமிழக-கர்நாடகா எல்லையில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரெட்டி, நாட்றாம்பாளையம், பிலிகுண்டு, ஒகேனக்கல் வனப்பகுதியில் தொடர் மழை பெய்ய தொடங்கியது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிபடியாக அதிகரிக்க தொடங்கியது.
நேற்று இரவு 7 ஆயிரம் கனஅடியாக இருந்து நீர்வரத்து இன்று அதிகாலை 9 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 13000 கனஅடியாக உயர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை எதிரொலியால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிலிக்குண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.






